23-வது ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரின் விறுவிறுப்பான 11-வது லீக் ஆட்டத்தில், நெதர்லாந்து மற்றும் ஜப்பான் அணிகள் மோதின.
மொத்தம் 48 அணிகள் பங்கேற்றுள்ள இந்த உலகக் கோப்பைத் தொடரில், லீக் சுற்றுகளின் முடிவில் 32 அணிகள் அடுத்த நாக் அவுட் சுற்றுக்கு முன்னேற உள்ளன. இத்தகைய சூழலில், குரூப் 'எஃப்' பிரிவில் இடம் பெற்றுள்ள நெதர்லாந்து மற்றும் ஜப்பான் அணிகளுக்கு இடையேயான லீக் போட்டி இன்று நடைபெற்றது. ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்க எடுத்த முயற்சிகள் பலன் தராததால், முதல் பாதி ஆட்டம் 0-0 என சமநிலையில் முடிந்தது.
இரண்டாவது பாதியில் கோல் மழை
ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் இரு அணி வீரர்களும் ஆக்ரோஷமாக விளையாடி கோல்களைப் பறக்கவிட்டனர். போட்டியின் 50-வது நிமிடத்தில் நெதர்லாந்து வீரர் வெர்ஜில் வான் டைக் முதல் கோலை அடித்துத் தன் அணிக்கு முன்னிலை தந்தார். ஆனால், அடுத்த சில நிமிடங்களிலேயே ஜப்பான் வீரர் கைடோ நாகமுரா பதில் கோல் அடித்து ஆட்டத்தை 1-1 என சமன் செய்தார்.
கடைசி நிமிடத் திருப்பம்
தொடர்ந்து ஆட்டத்தின் 64-வது நிமிடத்தில் நெதர்லாந்தின் கிரைசென்சியோ சம்மர்வில்லி மற்றொரு கோல் அடிக்க, அந்த அணி 2-1 என மீண்டும் முன்னிலை பெற்றது. நெதர்லாந்து வெற்றி பெற்றுவிடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஆட்டத்தின் இறுதிப் பகுதியில் ஜப்பான் வீரர் டைசி கமடா அதிரடியாக ஒரு கோல் அடித்து நெதர்லாந்துக்கு அதிர்ச்சி தந்தார். இறுதியில், இரு அணிகளும் தலா 2 கோல்கள் அடித்ததால் ஆட்டம் 2-2 என்ற கணக்கில் சமனில் முடிந்து, இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி வழங்கப்பட்டது.

LIVE 24 X 7