ஐபிஎல் தொடரின் இன்றைய விறுவிறுப்பான ஆட்டத்தில் வலுவான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், பார்ம் இன்றி தவிக்கும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.
நடப்புத் தொடரை வெற்றிகரமாகத் தொடங்கிய டெல்லி அணி, கடந்த போட்டிகளில் தொடர் தோல்விகளால் பின்னடைவைச் சந்தித்துள்ளது. விளையாடிய 7 போட்டிகளில் மூன்றில் மட்டுமே வெற்றி பெற்றுள்ள டெல்லி, தற்போது 6 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் பின்தங்கியுள்ளது. மறுபுறம், 7 போட்டிகளில் 5 வெற்றிகளைப் பெற்று 10 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் இருக்கும் பெங்களூரு அணி, மிகுந்த நம்பிக்கையுடன் இன்றைய களத்தில் இறங்குகிறது. ஏற்கனவே டெல்லியிடம் கண்ட தோல்விக்குச் சொந்த மண்ணில் பதிலடி கொடுக்க பெங்களூரு அணி தீவிர முனைப்பு காட்டி வருகிறது.
டெல்லியின் தடுமாற்றமும் ஸ்டார்க் வருகையும்
டெல்லி அணியின் கேப்டன் லோகேஷ் ராகுல் 357 ரன்களுடன் (ஒரு சதம், 2 அரைசதம்) உச்சக்கட்ட பார்மில் உள்ளார். நிதிஷ் ராணா, ரிஸ்வி போன்ற இளம் வீரர்கள் பேட்டிங்கில் கைகொடுத்தாலும், அந்த அணியின் பந்துவீச்சு மற்றும் பீல்டிங் பெரும் கவலையளிப்பதாக உள்ளது. குறிப்பாக, கடந்த போட்டியில் 264 ரன்கள் குவித்தும் 6 கேட்சுகளைத் தவறவிட்டதால் டெல்லி தோல்வியைத் தழுவியது. காயத்தால் வேகப்பந்து வீச்சாளர் இங்கிடி விலகியுள்ள நிலையில், இடக்கை வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் அணியில் இணைந்திருப்பது டெல்லியின் பந்துவீச்சுக்கு கூடுதல் பலம் சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பெங்களூருவின் அதிரடி
பெங்களூரு அணியைப் பொறுத்தவரை விராட் கோலி மற்றும் தேவ்தத் படிக்கல் ஆகியோர் அரைசதங்கள் விளாசி அணியின் பேட்டிங் வரிசையை வலுப்படுத்தியுள்ளனர். பந்துவீச்சில் ஹேசில்வுட், புவனேஷ்வர்குமார் மற்றும் குருணல் பாண்ட்யா ஆகியோர் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை வீழ்த்தி மிரட்டுகிறார்கள்.

LIVE 24 X 7