மதுப் பழக்கத்தால் இளைஞர்களின் எதிர்காலம் பாழாவதைத் தடுக்கவும், கிராமத்தில் அமைதியை நிலவச் செய்யவும் நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அருகேயுள்ள விழுந்தமாவடி மீனவக் கிராமம் ஒரு சூப்பரான நடவடிக்கையைக் கையில் எடுத்துள்ளது. "மதுவை ஒழிப்போம், மக்களைக் காப்போம்!" என்ற முழக்கத்துடன் ஊர் பஞ்சாயத்து வைத்த பேனர், இப்போது ஊர் முழுக்க ஒரே பேச்சுப்பொருளாக மாறியிருக்கிறது.
கிராமத்தின் நன்மைக்காக, திருமணம் ஆகாத இளைஞர்கள் மது அருந்துவதற்கு ஊர் பஞ்சாயத்து முற்றிலுமாகத் தடை விதித்துள்ளது. அட, இதையெல்லாம் மீறி 'நாங்க அப்படித் தான் குடிப்போம்' என்று அடம் பிடிக்கும் பாச்சாக்களுக்குக் கச்சிதமாக ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும் எனக் கெடுபிடி விதிக்கப்பட்டுள்ளது.
அதேபோல, திருமணமான ஆண்கள் குடித்துவிட்டு வந்து வீட்டிலோ அல்லது தெருவிலோ சண்டை போட்டுக் பஞ்சாயத்துக்குப் புகார் வந்தால், அவர்களுக்கும் அதே ரூ.5,000 ஃபைன் கன்பார்ம்!
யார் குடிக்கிறார்கள் என்று ஊர்த் தலைவர்களிடம் சரியான ஆதாரத்தோடு போட்டுக் கொடுக்கும் நபர்களுக்கு, பஞ்சாயத்து சார்பில் ரூ.2,000 ஊக்கத்தொகை பரிசாக வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் குடிமகன்களுக்கு இப்போது ஊருக்குள் யாரைப் பார்த்தாலும் 'சிஐடி'-யோ என்ற பயம் தொற்றிக்கொண்டுள்ளது.
இந்தக் கடுமையான கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வந்த கடந்த 10 நாட்களில், ஊருக்குள் பெரிய குடும்பச் சண்டைகளோ அலப்பறைகளோ எதுவுமின்றி அமைதி நிலவுவதாகக் கிராம மக்கள் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனர். விழுந்தமாவடி கிராமத்தின் இந்த முயற்சி, ஒட்டுமொத்தத் தமிழகத்திற்கே ஒரு சிறந்த முன்மாதிரி எனச் சமூக ஆர்வலர்கள் பாராட்டி வருகின்றனர்.

LIVE 24 X 7