தமிழகத்தில் மாவட்ட வளர்ச்சிப் பணிகளைத் துரிதப்படுத்தவும், பொதுமக்களுக்கான நலத்திட்டங்களைக் கண்காணிக்கவும், அவசரகாலப் பணிகளை மேற்கொள்ளவும் அனைத்து மாவட்டங்களுக்கும் பொறுப்பு அமைச்சர்களை நியமித்துத் தமிழ்நாடு அரசு அதிரடி ஆணை பிறப்பித்துள்ளது.
தமிழ்நாட்டில் மாவட்ட ரீதியிலான உள்கட்டமைப்பு மற்றும் வளர்ச்சிப் பணிகளை வேகப்படுத்த அரசு இந்த முக்கிய முடிவை எடுத்துள்ளது. குறிப்பாக, பொதுமக்களுக்குச் சென்றடைய வேண்டிய அரசின் நலத்திட்ட உதவிகள் தங்கு தடையின்றிக் கிடைப்பதை இந்த அமைச்சர்கள் நேரடியாகக் கண்காணிப்பார்கள். மேலும், இயற்கைச் சீற்றங்கள், நோய்த்தொற்றுக் காலங்கள் அல்லது எதிர்பாராத அவசரச் சூழல் ஏற்படும் நேரங்களில், அந்தந்த மாவட்டங்களில் கூடுதல் அவசரகாலப் பணிகளை ஒருங்கிணைத்து மேற்கொள்ளவும் இவர்களுக்குப் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
மாவட்ட பொறுப்பு அமைச்சர்கள்
அரசின் இந்த புதிய ஆணையின்படி, சென்னை மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களின் பொறுப்பு அமைச்சராகப் பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல், மதுரை மற்றும் தேனி மாவட்டங்களுக்கு எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் R. நிர்மல்குமார் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும், விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டத்திற்கு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் N.ஆனந்த், திருவள்ளூர் மாவட்டத்திற்கு தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரா. குமார், திருநெல்வேலி மாவட்டத்திற்கு நிதி மற்றும் திட்ட வளர்ச்சித் துறை அமைச்சர் நெ. மரிய வில்சன், தருமபுரி மற்றும் அரியலூர் மாவட்டத்திற்கு வீட்டு வசதித் துறை அமைச்சர் ப. ராஜ்குமார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல், காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு அமைச்சர் க. தென்னரசு (வெளிநாடு வாழ் தமிழர் நலன்), செங்கல்பட்டுக்கு அமைச்சர் த. சரத்குமார் (மனிதவள மேலாண்மை), கள்ளக்குறிச்சிக்கு அமைச்சர் வன்னி அரசு (சமூக நீதி) மற்றும் வேலூர் மாவட்டத்திற்கு அமைச்சர் ம. விஜய் பாலாஜி (கைத்தறி) ஆகியோர் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதேபோல் கோவைக்கு அமைச்சர் வே. சம்பத்குமார், சேலத்திற்கு அமைச்சர் ஆ. விஜய் தமிழன் பார்த்திபன், திருச்சரிக்கு அமைச்சர் ரமேஷ், தஞ்சாவூருக்கு அமைச்சர் வினோத் மற்றும் திருப்பூர் மாவட்டத்திற்கு அமைச்சர் டாக்டர் K.G. அருண்ராஜ் உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களுக்கும் அந்தந்த துறை சார்ந்த அமைச்சர்களுக்கு மாவட்டப் பொறுப்புகள் பிரித்து வழங்கப்பட்டுள்ளன.

LIVE 24 X 7