கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து சரிந்து வரும் தங்கம் விலை, வார இறுதி நாளான இன்றும் கணிசமாகக் குறைந்து நகைப்பிரியர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகளாவிய சந்தை மாற்றங்களால் தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களாகக் கடுமையாக உயர்ந்து, ஒரு சவரன் 1 லட்ச ரூபாயைத் தாண்டி விற்பனையாகி வந்தது. இதனால் முதலீட்டாளர்கள் மத்தியில் ஒருவித அச்சம் நிலவி வந்த சூழலில், கடந்த சில தினங்களாக விலை தொடர்ந்து சரிவைச் சந்தித்து வருகிறது.
நேற்றைய தினம் சவரனுக்கு ரூ.400 குறைந்திருந்த நிலையில், இன்றைய தினம் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு மேலும் ரூ.1,840 அதிரடியாகக் குறைந்துள்ளது. இதன் மூலம், ஒரு சவரன் தங்கம் ரூ.1,13,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், கிராமுக்கு ரூ.230 குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.14,200-க்கு விற்பனையாகிறது.
தங்கத்தின் விலையைத் தொடர்ந்து வெள்ளி விலையும் இன்று பலத்த வீழ்ச்சியைக் கண்டுள்ளது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை மேலும் ரூ.10 குறைந்து, ரூ.270-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் காரணமாக, ஒட்டுமொத்தமாக கிலோவிற்கு ரூ.10,000 வரை குறைந்து, ஒரு கிலோ வெள்ளி இன்று ரூ.2,70,000-க்கு விற்பனையாகி வருகிறது.

LIVE 24 X 7