தமிழ்நாடு

தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு...வானிலை ஆய்வு மையம் தகவல்...

சென்னையில் இன்று லேசான முதல் மிதமான மழை பெய்வதற்கு வாய்ப்பு உண்டு வானிலை ஆய்வு மையம் தகவல்.

தமிழகத்தில் இன்று  மழைக்கு வாய்ப்பு...வானிலை ஆய்வு மையம் தகவல்...

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. மதுரை மற்றும் நெல்லையில் வெயிலின் தாக்கம் சற்று அதிகமாகவே இருக்கிறது. ஆனால் கடந்த 3 நாட்களாக வெயிலின் தாக்கம் சற்று குறைந்து சென்னை,கோவை,நீலகிரி,தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது.

தமிழக கடலோரப் பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் பலவீனமான காற்றழுத்தத் தாழ்வு பாதை நிலவுவதால் இன்று முதல் வருகின்ற 26 ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

நேற்று (20.07.2026) சென்னை, கோவை, சேலம், நீலகிரி, தேனி, மதுரை, ராமநாதபுரம், நாமக்கல், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்தது.
இந்நிலையில் இன்று சென்னையில் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை பெய்வதற்கு வாய்ப்பு உண்டு என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிட்ட அறிக்கையில்,

தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுகிறது. இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிமீ வேகத்தில்) கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.

மேலும் வருகின்ற 26 ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிமீ வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அதனைத் தொடர்ந்து ஜூலை 24 ஆம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வடக்கு கடலோர தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் மிதமான மழைக்கு வாய்ப்பு. பிற பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.

ஜூலை 25, 26 ஆகிய இரு தினங்களில் தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உண்டு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்பநிலை:

ஜூலை 24 வரை உள் தமிழகத்தில் இயல்பைவிட 2–3°C அதிகமாக இருக்கும். சென்னையில் இன்று மாலை அல்லது இரவில் நகரின் சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு. அதிகபட்ச வெப்பநிலை 36–37°C இருக்கக்கூடும்.

மீனவர்கள் கவனம்:

ஜூலை 24 வரை தமிழக கடலோரம், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் உள்ளிட்ட பகுதிகளில் மணிக்கு 45–55 கி.மீ. வேகத்தில், இடையிடையே 65 கி.மீ. வேகத்தில் சூறாவளிக்காற்று வீசக்கூடும். எனவே மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.