தமிழ்நாடு

தங்கம் விலை தொடர் உயர்வு.. அதிர்ச்சியில் நகை பிரியர்கள்!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்துள்ளது.

தங்கம் விலை தொடர் உயர்வு.. அதிர்ச்சியில் நகை பிரியர்கள்!
Gold Rate
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று உயர்ந்துள்ளது, நகை வாங்குவோரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சர்வதேச சந்தையில் நிலவும் மாற்றங்கள் மற்றும் ஈரான் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றங்கள் காரணமாக, தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களாகவே வரலாறு காணாத வகையில் உயர்ந்து வருகிறது. ஏற்கனவே சவரன் ஒரு லட்சம் ரூபாயைத் தாண்டிய நிலையில், இன்று மீண்டும் விலை அதிகரித்து நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.

இன்றைய நிலவரம்

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்துள்ளது. இதன் மூலம் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.1,13,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.50 அதிகரித்து, ரூ.14,150-க்கு விற்பனையாகிறது.

வெள்ளி விலை நிலவரம்

தங்கத்தைப் போலவே வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.5 உயர்ந்து, ரூ.275-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் அடிப்படையில் ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.2,75,000 என்ற நிலையில் உள்ளது. சர்வதேசச் சூழல்களால் தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்து வருவது நடுத்தர வர்க்கத்தினரிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.