தமிழ்நாடு

ஏறுமுகத்தில் தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன?

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 உயர்ந்துள்ளது.

ஏறுமுகத்தில் தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன?
Gold Rate
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்றத்தைக் கண்டு வருகிறது. இந்த நிலையில், இன்று ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.520 உயர்ந்துள்ளது.

கடந்த 6 ஆம் தேதி அன்று காலை மற்றும் மாலை என இரண்டு வேளைகளிலும் சேர்த்து தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.270 உயர்ந்து ரூ.13,750-க்கும், சவரனுக்கு ரூ.2,160 அதிகரித்து ரூ.1,10,000-க்கும் விற்பனையானது.

அதனைத் தொடர்ந்து, நேற்று காலையில் மாற்றம் எதுவும் இன்றி விற்பனையான தங்கம், மாலையில் மீண்டும் விலை உயர்ந்தது. கிராமுக்கு ரூ.150 உயர்ந்து ரூ.13,900-ஆகவும், சவரனுக்கு ரூ.1,200 உயர்ந்து ரூ.1,11,200-ஆகவும் அதிகரித்தது.

இந்தத் தொடர் விலை உயர்வின் நீட்சியாக, இன்று காலையிலும் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.65 உயர்ந்து ரூ.13,965-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ.520 உயர்ந்து ரூ.1,11,720 என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

அதேவேளையில், வெள்ளியின் விலையில் எவ்வித மாற்றமும் இன்றி நேற்றைய நிலையிலேயே நீடிக்கிறது. ஒரு கிராம் வெள்ளி ரூ.250-க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.2,50,000-க்கும் விற்பனையாகி வருகிறது.