சென்னையில் கடந்த சில நாட்களாக அதிரடி ஏற்ற, இறக்கங்களைச் சந்தித்து வந்த ஆபரணத் தங்கத்தின் விலை, நேற்று உயர்ந்த நிலையில் இன்று மீண்டும் சரிவைச் சந்தித்துள்ளது. தங்கத்துடன் சேர்ந்து வெள்ளியின் விலையும் இன்று குறைந்துள்ளதால் நகைப்பிரியர்கள் சற்று நிம்மதியடைந்துள்ளனர்.
தங்கம் விலை
இந்த வாரத் தொடக்கத்தில் திங்கள், செவ்வாய் மற்றும் புதன்கிழமை ஆகிய நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ஆயிரக்கணக்கில் சரிந்து வந்தது. எனினும், நேற்று தங்கம் விலை திடீரென சவரனுக்கு ரூ.240 உயர்ந்தது.
இந்நிலையில், இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்துள்ளது. இதன் மூலம் இன்று ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.1,06,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.50 குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.13,300-க்கு விற்பனையாகிறது.
வெள்ளி விலை
கடந்த சில நாட்களாக எந்தவித மாற்றமும் இன்றி ஒரே விலையில் நீடித்து வந்த வெள்ளியின் விலையும் இன்று சரிந்துள்ளது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.240-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், தொழில்துறை பயன்பாட்டிற்கான ஒரு கிலோ கட்டி வெள்ளியின் விலை ரூ.5,000 குறைந்து, இன்று ரூ.2,40,000 என்ற விலைக்கு விற்பனையாகி வருகிறது.

LIVE 24 X 7