தமிழ்நாடு அரசியல் வரலாற்றில் புது புரட்சிகள் திராவிடர் கட்சிகளின் தொடக்கப்புள்ளியில் இருந்து ஆரம்பம் ஆனதுதான்.
பெரியாரின் கடவுள் இல்லை என்ற கோஷங்கள் திராவிடப்புள்ளியில் இருந்து ஆரம்பித்தாலும் அதை பேரறிஞர் அண்ணா தொன்றுதொட்டு வழிவகுத்தாலும் மக்கள் நலனின் மேல் இருவரும் கவனங்களை செலுத்திவந்தார்கள். இதைத்தாண்டி இருவருக்கும் நேரமில்லா காரணமோ இல்லை போராட்டங்களிலேயே அதிக நேரங்களை செலவழித்ததால் ஜோதிடம், ஆன்மிக வழிபாடுகளில் அறிஞர் அண்ணாவும் ஈடுபடவில்லை, தந்தை பெரியாருக்கு அறவே ஆகாது.
கலைஞர் கருணாநிதி:
ஆனால், பெரியார், அண்ணா அடுத்து வந்த கலைஞர், எம்.ஜி.ஆர் என இவர்கள் காலம் தொடங்கி அரசியல் பாதைகளில் சென்றுகொண்டிருந்தவர்கள் ஆன்மீக பாதைகளிலும் செல்ல ஆரம்பித்தனர் என்றே கூறலாம். திராவிட முன்னேற்ற கழகத்தில் செயலவர்களாக இருந்த இருவரும் தலைவர்களாகவும், முதலமைச்சர்களாகவும் மாறிய பின் தங்களது பதவிகளை பாதுகாத்துக்கொள்ள ஜோதிடத்தின் நம்பிக்கையினாலும், அறிவுறுத்தலினாலும் ஆன்மீக பாதைகளை தேர்ந்தெடுத்தார்களா என்ற ஐயமும் ஏற்படத்தான் செய்கிறது.
ராமர் என்ன என்ஜினீயரிங் படித்தவரா என்றுக்கூறிய கலைஞர் திராவிட கொள்கைகளில் உறுதியாக இருந்தவர் என்று கூறினாலும், அவர் தோளில் போடப்பட்ட மஞ்சள் துண்டிற்கு பின்னால் ஜோதிட அறிவுறுத்தல் இருப்பதாகவும், அவரது கோபாலபுரம் இல்லத்திற்கு எதிராக அமைந்துள்ள கோவிலை தினமும் மறைமுகமாக வழிபட்டு வந்தார் எனவும் வரலாற்று தகவல்கள் உள்ளன.
தினமும் காலை கிளம்பும்போது வெளியில் வந்து தோளில் மஞ்சள் துண்டை போடுவதை போல் வீட்டின் எதிரே உள்ள கிருஷ்ணர் கோயிலை பார்த்து வணங்குவார்.
ஏனென்றால் அந்த கோயிலில் மற்ற கிருஷ்ண கோயிலில்களில் உள்ள கிருஷ்ணரை போல் இரண்டு கைகள் இன்றி நான்கு கைகள் இருக்குமாம். அதனால் அந்த கோவில் சற்று சிறப்பு வாய்ந்த கோவில் எனவும் ஜோதிடர்கள் மற்றும் குடும்பத்தினர் அறிவுறுத்தலின்படி கலைஞர் தினமும் மறைமுகமாக வழிபட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.
தமிழ்நாடு அரசியலில் கலைஞரை தவிர வேறு யாரும் ஐந்து முறை ஆட்சியமைத்தது இல்லை என்ற சாதனைக்கு பின்னால் இதுபோன்ற ஜோதிட நம்பிக்கைகள், குடும்பத்தினரின் அறிவுறுத்தலின் கீழ் கடவுள் வழிபாடு இருந்தாலும் தப்பில்லை என்று கூறதோன்றுகிறது என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.
எம்.ஜி.ராமச்சந்திரன்:
கலைஞராவது மறைமுகமாக கடவுளை வணங்கி வந்தவர் என்று கூறப்பட்டாலும், கலைஞருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக திமுகவில் இருந்து பிரிந்து வந்து அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்ற பெயரில் தனி கட்சியை தொடங்கினர்.
அதன்பின் அவர் களம் கண்ட முதல் சட்டமன்ற தேர்தலிலேயே மாபெரும் வெற்றி பெற்றதற்கு பின்னால் அவருடைய ஜோதிட நம்பிக்கையும், ஆன்மீக பற்றும் இருப்பதாக பலரும் கூறினர்.
அண்ணா தொடங்கிய திராவிட முன்னேற்ற கழகத்தில் இருந்து பிரிந்து வந்திருந்தாலும் அண்ணாவின் மேல் உள்ள அதீத அன்பின் காரணத்தால் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்று தன் கட்சிக்கு பெயர் வைத்துக்கொண்டார்.
ஆனால் அண்ணாவின் கொள்கைகளை வேண்டுமென்றால் கடைபிடிக்கலாமே தவிர அவரை போல் ஜோதிடம், ஆன்மீகம் மேல் பற்றில்லாமல் இருக்கமுடியாது என்பது போல்தான் எம்ஜிஆர்-ன் ஆன்மீக பயணங்கள் இருந்தன.
அதில் முக்கியமான ஒன்று எம்ஜிஆர்-ன் இஷ்ட தெய்வம் கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டம் கொல்லூரில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஸ்ரீ மூகாம்பிகை அம்மன்.
அரசியல், சினிமா என இரண்டு துறைகளின் வெற்றிக்கு பின்னால், எம்ஜிஆர்-ன் இஷ்ட தெய்வ வழிபாட்டின் அருள் இருக்குமோ என்று சிந்திக்க தோன்றுகிறது.
அந்த அம்மனை பார்க்கும்போது அவரது தாயின் முகவடிவம் கொண்டுள்ளதால் மூகாம்பிகை அம்மன் மீது அதீத நம்பிக்கையும் அன்பும் கொண்டவராக மாறியதாக அவர் அளித்த பேட்டிகளும் உள்ளன.
அதுமட்டுமின்றி, சினிமாவில் ஆரம்பகாலத்தில் ஜோதிடத்தில் நம்பிக்கை இல்லாமல் இருந்தவர் என்றும் ஒரு படத்தின் வெற்றியை பெயரறியாத ஜோதிடர் கணித்ததாலும் அன்றுமுதல் ஜோதிடத்தின் மீது நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
அதன்பின், ஜோதிடம், ஜாதகம், தாரை பலன்கள், அவர் பிறந்த ரேவதி நட்சத்திர பலன்கள் என அனைத்தையும் கடைபிடித்து வந்துள்ளார்.
செல்வி ஜெயலலிதா:
எம்ஜிஆரை விட ஒருபடி மேலே சென்று,ஜோதிட நம்பிக்கைகளில் ஆரம்பத்திலிருந்தே ஊறிப்போனவர் செல்வி ஜெயலலிதா என்றே கூறலாம்.
இந்து சமயத்தின் மேல் அதீத நம்பிக்கை கொண்ட இவர் ஜோதிடம், எண் கணிதம் அதன் பரிகாரங்கள் என அனைத்தையும் கடைபிடிப்பவர்.
அதுமட்டுமின்றி, அவர் பல வழிபாட்டுத் தளங்கள் சென்றுள்ளார். அதில் குறிப்பாக தினமும் விநாயகர் வழிபாடும், சட்டமன்ற வளாகத்தில் அமைந்துள்ள அம்மன் சந்நிதானா வழிபாடும் தவறாமல் செய்து வந்தார்.
மேலும், குருவாயூர் ஸ்ரீகிருஷ்ணர் கோயில், ராஜராஜேஸ்வரி கோயில் போன்ற தலங்களுக்குச் சென்று காணிக்கைகள் செலுத்தியுள்ளார்.
இதுபோன்ற நம்பிக்கைகள் அவரை சினிமா மற்றும் அரசியல் என இரண்டிலும் வெற்றியடைய பெரும் நம்பிக்கை கொடுத்திருக்கும்.
என்னதான், ஜோதிட ஆன்மீக நம்பிக்கைகள் இருந்தாலும் 2004-ஆம் ஆண்டு காஞ்சி காமகோடி பீடத்தின் சங்கராச்சாரியாரை கைது செய்தது தமிழ்நாட்டில் பெரும் சர்ச்சையையும், அதிர்வலையையும் ஏற்படுத்தின.
எடப்பாடி கே. பழனிசாமி:
அம்மாவின் மறைவுக்கு பிறகு கட்சியையும், தமிழ்நாட்டையும், ஆட்சி செய்த எடப்பாடி பழனிசாமி, கடவுள் நம்பிக்கையும், ஜோதிட நம்பிக்கையும் கொண்டவர் என்று அவருடைய தோற்றத்தை வைத்தே கண்டுபிடித்துவிடலாம்.
நெற்றியில் திருநீறு, கைகளில் கடவுளின் நம்பிக்கையில் கட்டப்பட்ட கயிறுகள் என தினமும் கடவுள் வழிபாடு செய்பவர் என்பதற்கு சான்று.
அவர் அதிகமாக அவரது குலதெய்வக்கோயிலான நசியனூர் அப்பாத்தாள் கோவிலுக்கும், திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பதற்கு சென்றுள்ளார்.
பொதுவாக முக்கிய முடிவுகள் எடுப்பது என்றல் குலதெய்வ வழிபாடு அவசியம் என்பதை தாண்டி, எடப்பாடி திருப்பதி ஏழுமலையான் தரிசனத்தையும் தவறவிட்டதில்லை. தேர்தல் பிரச்சாரமோ, முக்கிய முடிவுகள் எடுப்பதோ என்ற அனைத்திற்கும் திருப்பதி ஏழுமலையான் கோயில் வழிபாட்டை எடப்பாடி கடைபிடித்து வந்தார்.
தனிப்பட்ட முறையில் அவரது சுய விருப்ப வழிபாடுகள் இருந்து வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மு.க.ஸ்டாலின்:
கலைஞரின் மறைவு பேரிடியாய் இறங்கிய நேரத்தில், அதன்பின் வந்த சட்டமன்ற தேர்தலில் மாபெரும் வெற்றியை அடைந்த மு.க.ஸ்டாலின் பெரியார் மற்றும் திராவிட கொள்கைகளில் தீவிர பிடிப்புடன் இருந்தவர்.
அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் அவருக்காக ஆன்மீக, ஜோதிட நம்பிக்கைகள் கொண்டிருந்தாலும், ஸ்டாலின் தந்தையின் நினைவிடத்தில் தந்தையை வணங்கினாரே தவிர கோவில்களுக்கு சென்றார் என்ற எந்த நிகழ்வையும் பார்த்திருக்க முடியாது.
ச. ஜோசப் விஜய்:
இருபெரும் திராவிடக் கட்சிகளின் முதலமைச்சர்களின் வரலாறு இப்படியிருக்கையில், எம்ஜிஆர்-ன் ஆட்சியை திரும்ப நிகழ்த்திக்காட்டுவேன் என தமிழக வெற்றி கழகத்தை தொடங்கி வரலாற்று சிறப்புமிக்க தேர்தல் வெற்றியை பதிவு செய்து எம்ஜிஆர்-ன் சாதனையை முறியடித்து முதலமைச்சராய் பொறுப்பேற்றுள்ள ச. ஜோசப் விஜய் எம்ஜிஆரை தாண்டி கடவுள் நம்பிக்கை, ஜோதிட நம்பிக்கை கொண்டவராக இருந்தார்.
கட்சிக்கு பெயர் வைப்பதில் இருந்து சட்டமன்றத்திற்கு என்ன நிற உடை அணிந்து வருவது என்பதுவரை தனிப்பட்ட ஆஸ்தான ஜோதிடரின் அறிவுறுத்தல் என கட்சி தொடக்கம் முதலே அவரது ஆன்மீக ஜோதிட பற்று இருந்து வருவது சமூக வலைத்தளங்களில்
எம்மதமும் சம்மதம் என்பதுபோல் சீரடி சாய் பாபா வழிபாடு, நாகூர் தர்கா, திருச்செந்தூர் முருகன் கோவில், வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை பேராலயம் என சிறப்புடைய ஆலயங்களுக்கு தேர்தலுக்கு முன்னர் ஆன்மீக பயணம் சென்றுள்ளார் என்பதை ஊடகங்கள் வழியே மக்கள் அனைவரும் அறிவார்கள். தேர்தல் வெற்றிக்கு பின்னும் எம்.ஜி.ஆர் கடைபிடித்து வந்த கொல்லூர் மூகாம்பிகை அம்மன் கோயில் வழிபாட்டையும் மேற்கொண்டு எம்ஜிஆர் வழியை கடைபிடிக்கிறார்.
மேலும் நெற்றியில் அராஜக மை வைப்பது முதல் வெள்ளிக்கிழமை வேஷ்டி சட்டை அணிவது என தனி சம்பிரதாயங்களை ஜோதிடரின் அறிவுறுத்தலின் பேரில் விஜய் வாராவாரம் கடைபிடித்து வருவதாக தகவல்கள் பரவி வருகின்றன.
முன்னாள் முதலமைச்சர்களுக்கு மேலாக விஜய் ஒருபடி மேலே சென்று தனது தனிப்பட்ட ஆஸ்தான ஜோதிடரான ரத்தன் வெற்றிவேல் பண்டிட், அவருக்கு அரசு பொறுப்பு வழங்கியது, பல சர்ச்சைகளுக்கு பின்னர் அந்த பொறுப்பு திரும்ப பெறப்பட்டது என நடந்த நிகழ்வுகள் அனைத்தும் மக்கள் அறிவர்.
பெரியாரின் அடிப்படைக் கொள்கைகளை எந்த ஒரு கட்சியும், முதலமைச்சர்களும் வெளிப்படையாகவோ மறைமுகமாகவோ கடைபிடித்துதான் வருகிறார்கள். ஆனால், பெரியார் எதிர்த்த "கடவுள் இல்லை, அதை கடைபிடிப்பது மூடநம்பிக்கை" என்ற கொள்கை மட்டும் இன்று விதிவிலக்காக மாறிவிட்டதோ என்ற கேள்விகள் எழுந்துதான் வருகிறது .
தமிழ்நாடு அரசியலில் முதலமைச்சர்களின் ஆன்மீகம் மற்றும் ஜோதிட நம்பிக்கைகளுக்கு என்றும் தனிப்பட்ட ஈர்ப்பு இருந்துகொண்டுதான் இருக்கிறது…

LIVE 24 X 7