தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கான அனல் பறக்கும் தேர்தல் பிரசாரம், 234 தொகுதிகளிலும் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது.
கடந்த ஒரு மாத காலமாகத் தமிழகம் முழுவதும் நடைபெற்று வந்த அனல் பறக்கும் தேர்தல் பிரசாரம் இன்று (ஏப். 21) மாலை 6 மணியுடன் முடிவுக்கு வந்தது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் தவெக தலைவர் விஜய் உள்ளிட்ட முன்னணித் தலைவர்கள் இறுதிக்கட்டமாக பிரசாரத்தை நிறைவு செய்துள்ளனர். பிரசாரம் முடிவடைந்ததைத் தொடர்ந்து, தொகுதிக்குத் தொடர்பில்லாத வெளிநபர்கள் வெளியேறத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இன்று மாலை பிரசாரம் நிறைவடைவதற்கு முன்னதாக, அனைத்துக் கட்சித் தலைவர்களும் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டனர். முதலமைச்சர் ஸ்டாலின் வேட்பாளர்களுக்காகப் பிரசாரம் செய்ய, எடப்பாடி பழனிசாமி தனது சொந்த மாவட்டமான சேலத்தில் பிரம்மாண்டப் பேரணியுடன் முடித்தார். தவெக தலைவர் விஜய் சென்னையில் தனது கட்சியின் முதல் சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தை நிறைவு செய்தார்.
மாலை 6 மணிக்கு மேல் ஒலிபெருக்கிகள் மூலம் பிரசாரம் செய்யவோ, ஊர்வலங்கள் நடத்தவோ தடை விதிக்கப்பட்டுள்ளது. வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி (வியாழக்கிழமை) காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கவுள்ளது.

LIVE 24 X 7