தமிழகச் சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) நூறு தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளதைத் தொடர்ந்து, அக்கட்சியின் தலைவர் விஜய் வீட்டிற்குப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் விறுவிறுப்பாக எண்ணப்பட்டு வருகின்றன. தபால் வாக்குகள் எண்ணத் தொடங்கியது முதலே பல்வேறு தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் வலுவான முன்னிலையைப் பெறத் தொடங்கியது. தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத் தரவுகளின்படி தவெக 57 இடங்களிலும், அதிமுக 48 இடங்களிலும், திமுக 27 இடங்களிலும் முன்னிலையில் இருந்தன.
காலை 10 மணி நேர நிலவரப்படி, கள யதார்த்தத்தில் தவெக 100 இடங்களிலும், அதிமுக 81 இடங்களிலும், திமுக 51 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகின்றன. தமிழக அரசியலில் தவெக ஏற்படுத்தியுள்ள இந்த அதிரடித் திருப்பத்தைத் தொடர்ந்து, சென்னையில் உள்ள அக்கட்சியின் தலைவர் விஜய் இல்லத்திற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் காவல்துறை பாதுகாப்பு தற்போது கணிசமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

LIVE 24 X 7