தமிழக வேளாண் பட்ஜெட் தாக்கல் - பச்சை துண்டுடன் அமைச்சர்கள், திமுக எம்.எல்.ஏக்கள் வருகை
தமிழ்நாடு சட்டசபையில் 2025-26-ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
தமிழ்நாடு சட்டசபையில் 2025-26-ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
வேளாண் பட்ஜெட் அறிவிப்பினை முன்னிட்டு திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பச்சை துண்டு அணிந்து சட்டப்பேரவைக்கு வருகைத் தந்துள்ளனர்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2025-2026 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையினை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தாக்கல் செய்தார். இந்நிலையில் பட்ஜெட் குறித்து கடுமையாக விமர்ச்சித்துள்ளார் த.வெ.க. தலைவர் விஜய்.
தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையில் பள்ளிக் கல்வித்துறைக்கு 46 ஆயிரத்து 760 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், ஆசிரியர்களின் நலன் கருதி தமிழக அரசே தனது சொந்த நிதியிலிருந்து முக்கிய நிதி ஒதுக்கீடுகளை மேற்கொண்டுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
தமிழக பட்ஜெட்டில், திருக்குறள் மொழிபெயர்ப்பு, மேலும் 8 இடங்களில் அகழாய்வு உட்பட தமிழ் மொழி வளர்ச்சிக்கான பல்வேறு திடங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் வகையில் பல்வேறு அறிவிப்புகளை தமிழக பட்ஜெட்டில் அரசு வெளியிட்டுள்ளது.
முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் பெற்றோர் இருவரையும் இழந்த குழந்தைகளுக்கு 18 வயது வரை மாதந்தோறும் ரூ.2,000 வழங்கப்படும் என பட்ஜெட் உரையில் தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
வெற்று அறிவிப்புகளை மட்டும் உள்ளடக்கி ஒவ்வொரு ஆண்டும் திமுக வெளியிடும் பட்ஜெட் காலியாக இருப்பதில் வியப்பில்லை என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
டாஸ்மாக் நிறுவனத்தின் மூலமாக கிட்டத்தட்ட 40,000 கோடி அளவுக்கு ஊழல் நடைபெற்றிக்குமோ என்று சந்தேகம் எழுகின்றது என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
மாணவ மாணவியர்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கும் திட்டம் மூன்றாம் பாலினத்தவர்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.