"ஆளுநர் அரசியல்வாதி போல் செயல்படுகிறார்" - அமைச்சர் ரகுபதி
"ஆளுநர் அரசியல்வாதி போல் செயல்படுகிறார்" - அமைச்சர் ரகுபதி
"ஆளுநர் அரசியல்வாதி போல் செயல்படுகிறார்" - அமைச்சர் ரகுபதி
Today Headlines: 09 மணி தலைப்புச் செய்திகள் | 09 PM Headlines Tamil
கிருஷ்ணகிரி அருகே பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
விசிக மதுவிலக்கு மாநாட்டில் தள்ளு முள்ளு, நாற்காலி வீச்சு, பெண் போலீஸ் மீது அத்துமீறல் என களேபரம் ஏற்பட்டது
“விசிக மற்ற கட்சிகளை போல அல்ல” - ஆர்.எஸ்.பாரதி முன் அடித்து பேசிய சிந்தனை செல்வன்
மதுக்கடையை மூடும் வரை விசிக ஓயாது - மாநாட்டில் அனல் பறக்க பேசிய ரவிக்குமார் எம்.பி.,
தமிழ்நாட்டில் 4 காவல்துறை உயர் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு. காத்திருப்போர் பட்டியலில் இருந்த சந்தோஷ் ஹதிமானி சென்னை திருவல்லிக்கேணி காவல் துணை ஆணையராக நியமனம்
தமிழ்நாட்டில் 4 காவல்துறை உயர் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு. காத்திருப்போர் பட்டியலில் இருந்த சந்தோஷ் ஹதிமானி சென்னை திருவல்லிக்கேணி காவல் துணை ஆணையராக நியமனம்
'வி.சி.க.,வின் மது ஒழிப்பு மாநாட்டிற்கு நாங்கள் ஆதரவு.." - டிடிவி தினகரன்
என் உயிரினும் உயிரான...திருமா சொன்ன அந்த வார்த்தை - காதை கிழித்த விசிக-வினர் சத்தம்
திருவள்ளூர் மீஞ்சூர் ரயில் நிலையம் அருகே சரக்கு ரயிலின் இணைப்பு கொக்கி உடைந்து ரயில் சேவை பாதிப்பு. மீஞ்சூரில் இருந்து சரக்குடன் சென்னை நோக்கி சென்ற ரயில் என்ஜினுடன் ஒரு பெட்டி மட்டும் கழன்றதால் பரபரப்பு
இஸ்ரேல் மீது ஈரான் பாலிஸ்டிக் ஏவுகணை தாக்குதல் நடத்தியதன் எதிரொலி - 3-ம் உலகப்போர் மூளும் அபாயம்? ஈரான், லெபனான் எல்லைகளில் தரைவழித் தாக்குதலை தீவிரப்படுத்திய இஸ்ரேல்
ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், பகத் பாசில் உள்ளிட்டோர் நடித்துள்ள வேட்டையன் படத்தின் டிரெய்லர் வெளியானது. ஞானவேல் இயக்கத்தில் உருவாகியுள்ள வேட்டையன் திரைப்படம் வரும் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது
நிரந்தர இணை பேராசிரியர், உதவி பேராசிரியர்களை நியமிக்க முடியவில்லை என்றால் அரசு சட்டக் கல்லூரிகளை மூடிவிடலாம் என சென்னை உயர்நீதிமன்றம் காட்டம். அரசு சட்டக் கல்லூரிகளில் காலியாக உள்ள இணைப் பேராசிரியர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்ப கோரி வசந்தகுமார் என்பவர் தொடர்ந்த வழக்கு
தமிழ்நாடு முழுவதும் போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவினரால் கைப்பற்றப்பட்ட 2,950 கிலோ கஞ்சா தீயிட்டு அழிப்பு. 89 வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 2,950 கிலோ கஞ்சாவை செங்கல்பட்டு பகுதியில் போலீசார் தீயிட்டு அழித்தனர்
விருத்தாச்சலத்தில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ஊர்வலமாக செல்ல முயன்ற காங். MLA ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோரை போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு. ஊர்வலத்திற்கு அனுமதி இல்லை என்று கூறி தடுத்து நிறுத்தியதால் காவல்துறைக்கும், MLA ராதாகிருஷ்ணனுக்கும் வாக்குவாதம்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மகளிர் மாநாடு அக்கட்சி தலைவர் திருமாவளவன் தலைமையில் தொடங்கியது
சென்னை சென்னகேசவ பெருமாள் கோயிலில் இருந்து சிறப்பு பூஜைகளுடன் திருப்பதி திருக்குடை ஊர்வலம் தொடங்கியது. 250 ஆண்டுகளுக்கும் மேலாக சென்னையில் இருந்து திருமலைக்கு திருக்குடை ஊர்வலமாக எடுத்து செல்லப்படுகிறது
பீகார் மாநிலம் முசாபர்பூர் பகுதியில் ஆற்றில் அவசரமாக நிவாரண பொருட்களை எடுத்து சென்ற ஹெலிகாப்டர் தரையிறக்கப்பட்டது. ஹெலிகாப்டரின் என்ஜின் செயலிழந்ததால் அவசரமாக தரையிறக்கப்பட்டதாக தகவல் வெளியானது.
விருதுநகர் அருப்புக்கோட்டை அருகே தனது ஆட்டோவில் பயணித்த பெண்ணை கத்தியால் குத்திவிட்டு 4.5 சவரன் நகையை பறித்து சென்ற ஆட்டோ ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள உள்ள ராமநாதன் என்பவரை தேடி வருகின்றனர்,
டெல்லியில் இதுவரை இல்லாத அளவு 560 கிலோ கொக்கைன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் இதுகுறித்து 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழக, கேரள எல்லையான களியாக்கவிளையில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புடன் மன்னர் உடைவாள் கேரள அரசிடம் ஒப்படைக்கப்பட்டது.
காஞ்சிபுரம் சுங்குவார்சத்திரம் சாம்சங் ஊழியர்கள் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், அவர்களுக்கு ஆதரவாக வரும் 5ம் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என இந்திய கம்யூ., மார்க்சிஸ்ட் கம்யூ., கூட்டாக அறிவித்துள்ளன.
இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதை கண்டித்து சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்டு வரும் 8ம் தேதி பாமக தலைமையில் போராட்டம் நடைபெறும் என அக்கட்சி தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.
நாமக்கலில் கொள்ளையர்கள் தாக்கியதில் காயமடைந்து சிகிச்சை பெற்றுவரும் காவலர்களை சந்தித்து டிஜிபி சங்கர் ஜிவால் நலம் விசாரித்தார்.