விண்ணை பிளந்த சத்தம்.. அதிர்ந்த மெரினா.. வான் சாகச ஒத்திகை நிகழ்ச்சி
இந்திய விமானப்படையின் 92வது நிறுவன தினத்தையொட்டி சென்னை மெரினாவில் வரும் 6ம் தேதி பிரமாண்ட வான் சாகச நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதற்கான 2ம் நாள் ஒத்திகை நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
இந்திய விமானப்படையின் 92வது நிறுவன தினத்தையொட்டி சென்னை மெரினாவில் வரும் 6ம் தேதி பிரமாண்ட வான் சாகச நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதற்கான 2ம் நாள் ஒத்திகை நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
கூட்டுறவு வீட்டு வசதி சங்க வீட்டு மனைகளுக்கு ஒப்புதல் தந்ததில் எழுந்த முறைகேடு புகார் தொடர்பான லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது
சிவகார்த்திகேயன் தயாரிப்பு நிறுவனம் சார்பில் எந்த திரைப்படங்களுக்கும் காஸ்டிங் ஏஜெண்டுகள் நியமிக்கப்படவில்லை. தயாரிப்பு நிறுவனத்திற்கு மாறாக வரும் மின்னஞ்சல்கள் மற்றும் சமூக வலைத்தள பதிவுகளை நம்ப வேண்டாம் என சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வி.சாலையில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வரும் 27ம் தேதி முதல் மாநாடு நடைபெற உள்ளது. இதையொட்டி வரும் 4ம் தேதி பூமி பூஜை நடைபெறும் என தவெக அறிவித்துள்ளது
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அடையாறில் உள்ள காந்தி மண்டபத்திற்கு வருகை தந்த விசிக தலைவர் திருமாவளவன் காந்தி சிலைக்கு மரியாதை செலுத்தவில்லை. இதனால் மகாத்மா காந்தியை திருமாவளவன் புறக்கணித்தார் என்ற சர்ச்சை கிளம்பியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தட்டான்குட்டையில் அடுத்தடுத்து 5 வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தால் இரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ள நிலையில், போலீசார் வாகனங்களை அப்புறப்படுத்தி சீர்செய்தனர்
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ரூ.7,100க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு ரூ400 உயர்ந்து ரூ.56,800க்கு விற்பனையாகிறது.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட பாஜக நிர்வாகி மன்னிப்பு கேட்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் விசிக மாநாட்டிற்கு நடப்பட்டிருந்த இரும்பு கொடிக்கம்பங்கள் திருடு போனது. சுங்கச்சாவடி அருகே தேசிய நெடுஞ்சாலையின் ஓரங்களில் நடப்பட்டிருந்த கொடிக்கம்பங்களில் இருந்த கொடிகளை கழற்றி கீழே போட்டுவிட்டு ரூ.2 லட்சம் மதிப்புள்ள கொடிக்கம்பங்களை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
மகாராஷ்டிர மாநிலம் புனே மாவட்டத்தில் ஹெலிகாப்டர் கீழே விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். சம்பவ இடத்தில் 2 ஆம்புலன்ஸ்கள் மற்றும் 4 தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
காஞ்சிபுரம் சுங்குவார்சத்திரத்தில் செயல்பட்டு வரும் சாம்சங் நிறுவனத்தின் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட 926 பேர் மீது 8 பிரிவுகளின் கீழ் காஞ்சி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் ரஜினியின் ரத்த நாளத்தில் ஸ்டென்ட் பொருத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், ரத்த ஓட்டம் சீரடைய ஸ்டென்ட் பொருத்தப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மகாத்மா காந்தியில் 156 வது பிறந்தநாளையொட்டி அவரது நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி மரியாதை செலுத்தினார்.
VCK Conference: கள்ளக்குறிச்சு விசிக சார்பில் இன்று மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மகளிர் மாநாடு நடைபெற உள்ளது.
கள்ளக்குறிச்சியில் மீண்டும் கள்ளசாராய விற்பனை தொடங்கியதால் களத்தில் இறங்கிய காவல்துறை.
ரஜினிகாந்த் சீராகத் தேறி வருகிறார் என்பது நெஞ்சுக்கு நிம்மதி தருவதாக கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் – ஈரான் இடையேயான போர் தீவிரமடைந்து வரும் நிலையில், லண்டனில் இருந்து சென்னை வரும் விமானங்கள் திருப்பி விடப்பட்டுள்ளன.
ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதையடுத்து இஸ்ரேல் அதிபர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
காந்தி ஜெயந்தி விழா...முதலமைச்சர் போட்ட அதிரடி உத்தரவு! 5 பேருக்கு காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி
நடிகர் ரஜினிகாந்தின் உடல்நலம் குறித்து நலம் விசாரித்த பிரதமர் நரேந்திரமோடி
06 AM Speed News | விரைவுச் செய்திகள் | 02-10-2024 | Tamil News | Today News | Kumudam News24x7
மணி தலைப்புச் செய்திகள்
சென்னை அமைந்தக்கரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அமைச்சர் அன்பில் மகேஷ் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே கல்லூரி முடிந்து வீடு திரும்பிய மாணவன் மீது மர்மநபர்கள் தாக்குதல். தனியார் பேருந்தில் அமர்ந்திருந்த மாணவனை மர்மநபர்கள் தாக்கிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு - போலீசார் விசாரணை
அமெரிக்காவில் சான்பிரான்சிஸ்கோ ஆசியன் ஆர்ட் மியூசியத்தில் இருந்த சோமஸ்கந்தர் உலோக சிலையை அதிகாரிகள் மீட்டனர்.