K U M U D A M   N E W S

வீடியோ ஸ்டோரி

LIVE : சித்தராமையா குடும்பத்தினர் மீதும் வழக்கு

முடா முறைகேடு வழக்கில் சித்தராமையா மனைவி, மருமகன் உள்ளிட்டோர் மீதும் வழக்குப்பதிவு. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து மைசூரு லோக் ஆயுக்தா போலீசார் நடவடிக்கை.

"விஜய்க்கு தவறான ஆலோசனை சொல்றாங்க" | Ravindran Duraisamy Exclusive interview

"விஜய்க்கு தவறான ஆலோசனை சொல்றாங்க" | Ravindran Duraisamy Exclusive interview

என்கவுன்ட்டர் - நாமக்கல்லில் சிதறி கிடக்கும் ரூபாய் நோட்டுகள்

நாமக்கல் அருகே கொள்ளையர்கள் என்கவுன்ட்டர் செய்யப்பட்ட இடத்தில் சிதறி கிடக்கும் ரூபாய் நோட்டுகள். ஏ.டி.எம். கொள்ளையன் சுட்டுக்கொல்லப்பட்ட இடத்தில் தடயவியல் நிபுணர்கள் ஆய்வு நடத்தி வருகின்றனர்

"பெற்றோர் வந்தால்தான் உள்ளே அனுமதி" - பச்சையப்பன் கல்லூரி நிர்வாகம் அதிரடி உத்தரவு

சஸ்பெண்ட் செய்யப்பட்ட மாணவர்கள் அக்.1-ம் தேதி பெற்றோருடன் கல்லூரிக்கு வர வேண்டும். விசாரணைக்காக பெற்றோரை கல்லூரிக்கு அழைத்து வர வேண்டுமென மாணவர்களுக்கு பச்சையப்பன் கல்லூரி நிர்வாகம் உத்தரவு

கொள்ளை கும்பலை துரத்திச் சென்ற போலீசார் - அதிர்ச்சி சிசிடிவி வெளியீடு

நாமக்கல் - குமாரபாளையம் அருகே வந்த கொள்ளை கும்பலை நிறுத்த முயன்றபோது கண்டெய்னர் லாரியில் தப்பியோடிய கும்பல். கொள்ளையர்கள் தப்பியோடிய கண்டெய்னர் லாரியை நாமக்கல் போலீசார் துரத்திச் செல்லும் சிசிடிவி காட்சிகள்

#BREAKING | அமைச்சர் உதயநிதியுடன் செந்தில் பாலாஜி சந்திப்பு

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்துள்ளார் செந்தில் பாலாஜி. இந்த சந்த்பிப்பு குறித்து, ”பாசிஸ்ட்டுகளின் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைக்கு எதிராக, அண்ணன் செந்தில் பாலாஜிக்கு, உச்ச நீதிமன்றம் பிணை வழங்கியுள்ள நிலையில், 471 நாட்கள் சிறைவாசம் முடித்து, வெளியே வந்திருக்கும் அவரை இன்று நேரில் சந்தித்து வரவேற்றோம். அவரது பணிகள் மென்மேலும் சிறக்க வாழ்த்தி மகிழ்ந்தோம்!” என எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

அரசு பேருந்து சாலை தடுப்பில் மோதி பயங்கர விபத்து - பதைபதைக்க வைக்கும் காட்சி

வேலூர் மாவட்டம் வேப்பூர் அருகே சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி அரசு பேருந்து விபத்துக்குள்ளானது. அரசு பேருந்து சாலை தடுப்பின் மீது மோதி விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு.

செந்தில் பாலாஜி மீது பாச மழை கொட்டும் அமைச்சர்கள்

புழல் சிறையில் இருந்து நிபந்தனை ஜாமினில் வெளியாகியுள்ள செந்தில் பாலாஜி மீது பாச மழை கொட்டும் அமைச்சர்கள்

கதிகலங்க வைத்த வடமாநிலத்தவர்கள்.. துப்பாக்கியால் பேசிய தமிழக போலீஸ்.. என்ன நடந்தது..? |

கேரளாவில் கொள்ளையடித்த வடமாநில கொள்ளையர்களை நாமக்கலில் வைத்து போலீசார் கைது செய்தனர். அவர்களை கைது செய்ய சென்றபோது போலீசார் மீது தாக்குதல் நடத்தினர். இதையடுத்து போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒருவர் கொல்லப்பட்டார். இந்நிலையில், சேலம் சரக டிஜிபி உமா செய்தியாளர்களை சந்தித்து இச்சம்பவம் குறித்து விளக்கமளித்தார்.

தமிழகத்தை மிரள விட்ட என்கவுன்டர்.. விரைந்து வந்த கேரளா போலீஸ்

கேரளாவில் ஏடிஎம் கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளையர்களை நாமக்கல் போலீசார் கைது செய்துள்ள நிலையில் அவர்களிடம் விசாரணை நடத்த கேரளா போலீசார் வருகை தந்துள்ளனர்.

வெள்ளத்துரை மீது நடவடிக்கை கோரி மனு

மதுரையில் 2010-ல் நடந்த என்கவுன்டர் சம்பவத்தில் காவல்துறை அதிகாரி வெள்ளத்துரை மீது நடவடிக்கை எடுக்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. 

கேரளாவில் ஸ்கெட்ச்.. தமிழ்நாட்டில் ஆக்சன்.. என்கவுன்டரில் முடிந்த கொள்ளை...

கேரள மாநிலம் திருச்சூரில் ஏடிஎம்-ஐ கொள்ளையடிக்க சிசிடிவி-க்கு ஸ்பிரே அடித்த கொள்ளையர்கள் தொடர்பான சிசிடிவி காட்சி வெளியானது. 

'அச்சுறுத்தலான பள்ளிக் கட்டடங்களை அகற்றுக’ - அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு

ராமநாதபுரம் - திருவாடனை தாலுகா தொண்டியில் உள்ள தொடக்கப் பள்ளியை இடித்து அப்புறப்படுத்தக்கோரி உச்சநீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட பள்ளி கட்டிடத்தை 12 வாரத்திற்குள் இடித்து அப்புறப்படுத்தி புதிய கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிமன்றம் அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

கட்டுக்கட்டாக பணம்.. பிடிபட்ட கண்டெய்னர்... லாரி பட்டப்பகலில் நடந்த துப்பாக்கிச் சூடு

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே கண்டெய்னர் லாரியில் இருந்த கொள்ளையனை போலீசார் சுட்டுக்கொன்றனர். மேலும் கேரளாவில் ஏ.டி.எம்.களில் கொள்ளையடிக்கப்பட்ட ரூ.66 லட்சம் பணத்தை போலீசார் பறிமுதல் செய்துள்ளதாக தகவல் வெளியானது.

66 லட்சம் கொள்ளை? சினிமா பாணியில் நடந்த கண்டெய்னர் சேசிங்..

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே கண்டெய்னர் லாரியில் இருந்த கொள்ளையனை போலீசார் சுட்டுக்கொன்றனர். கண்டெய்னரை திறக்க முயன்ற போது இன்ஸ்பெக்டரை கொள்ளையன் ஒருவன் வெட்டியதால் போலீசார் துப்பாக்கியால் சுட்டனர்.

பிரதமரை சந்தித்து ஏன்..? முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம்

பிரதமர் மோடியுடன் நடந்த சந்திப்பின்போது வைக்கப்பட்ட கோரிக்கைகள் என்ன என்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர் சந்திப்பில் விளக்கமளித்துள்ளார்.

செஞ்சிக்கோட்டையில் யுனெஸ்கோ குழுவினர் ஆய்வு

விழுப்புரம் மாவட்டம் செஞ்சிக்கோட்டையை உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கும் படி மத்திய அரசு பரிந்துரை செய்துள்ள நிலையில்  செஞ்சிக்கோட்டையில் யுனெஸ்கோ குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர்.

கண்டெய்னர் லாரிக்குள் துப்பாக்கியுடன் இருந்த கொள்ளையன்.. என்கவுன்டர் செய்த போலீசார்

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே கண்டெய்னர் லாரியில் இருந்த கொள்ளையனை போலீசார் சுட்டுக் கொன்றனர். கண்டெய்னரை திறக்க முயன்ற போது இன்ஸ்பெக்டரை கொள்ளையன் ஒருவன் வெட்டியதால் போலீசார் துப்பாக்கியால் சுட்டனர்.

பொது இடத்தில் குப்பை.. உயர்த்தப்பட்ட அபராதம்! சென்னை மாநகராட்சி அதிரடி

பொது இடத்தில் குப்பை, கட்டட கழிவுகளை கொட்டுபவர்களுக்கு விதிக்கப்படும் அபராதத்தை உயர்த்த சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

நெல்லை ரவுடி துப்பாக்கி முனையில் கைது.. தனிப்படை போலீசார் கைது..

கேரள மாநிலம் மூணாறில் பதுங்கியிருந்த நெல்லையைச் சேர்ந்த பிரபல ரவுடி எஸ்டேட் மணியை சுற்றி வளைத்து துப்பாக்கி முனையில் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

ED அலுவலகம் வந்த செந்தில் பாலாஜி

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் நேற்று நிபந்தனை ஜாமின் அளித்தது. இந்நிலையில், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் கையெழுத்திட செந்தில் பாலாஜி ஆஜரானார்.

பிரதமருடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு

டெல்லியில் உள்ள அலுவலகத்தில் பிரதமர் மோடியை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்தார். அப்போது தமிழ்நாட்டின் கோரிக்கைகள் அடங்கிய கோரிக்கை மனுவை அளித்தார். 

பேருந்து கவிழ்ந்து 4 பேர் உயிரிழப்பு.. பேருந்தை சிறை பிடித்த மக்கள்..விருதுநகரில் பரபரப்பு

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மினி பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் பலியாகினர். இதையடுத்து அரசு பேருந்தை சிறை பிடித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பிரதமர் மோடியை சந்திக்க புறப்பட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் இருந்து பிரதமர் மோடியை சந்திக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புறப்பட்டார்.