K U M U D A M   N E W S

வீடியோ ஸ்டோரி

திண்டுக்கல்லில் பிரபல ரவுடி ஓட ஓட வெட்டி படுகொலை..

திண்டுக்கல் அருகே செட்டிகுளக்கரையில் தீனதயாள வர்மன் என்ற ரவுடி மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இவர்மீது கொலை, கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. 

கேரளாவை அலறவிடும் நிபா வைரஸ்... எல்லை பகுதிகளில் தீவிர சோதனை

கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் பரவல் எதிரொலியாக கோவை - கேரள எல்லையில் சுகாதாரத்துறை சார்பில் எல்லை பகுதிகளில் முகாமிட்டு சோதனை நடத்தி வருகின்றனர்.

மலைப்பாதையில் கட்டுப்பாட்டை இழந்த லாரி.. பறிபோன 3 உயிர்கள்...

கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி வனப்பகுதியில் உள்ள கொண்டை ஊசி வளைவில் மினி லாரி கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 3 பேர் உயிரிழந்தனர்.

Savukku Shankar Case : சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டம் ரத்து

Savukku Shankar Case Update : யூடியூபர் சவுக்கு சங்கருக்கு எதிரான குண்டாஸ் சட்டத்தை ரத்து செய்யக்கோரி அவரது தாயார் கமலா தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. சவுக்கு சங்கர் மீதான குண்டாஸ் சட்டம் திரும்ப பெற்றுள்ளதாக தமிழக அரசு தகவல் தெரிவித்தது. அந்த விளக்கத்தை ஏற்று  குண்டாசை ரத்து செய்த்தோடு, வழக்கை முடித்து வைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது

ஆக்கிரமிப்புகளை அகற்ற வந்த அதிகாரிகள் வாக்குவாதம்.. கொடைக்கானலில் பரபரப்பு

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் போக்குவரத்துக்கு இடையூராக உள்ள சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர். அவர்களுடன் ஆக்கிரமிப்பாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது 

மனித உரிமைகள் ஆணையத்தில் மோகன் ஜி பரபரப்பு புகார்..

இயக்குநர் மோகன் ஜி சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டதாக அவரது தரப்பில் மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் புகாரளிக்கப்பட்டுள்ளது.  

திருப்பதி லட்டு விவகாரம்.. ஏ.ஆர்.பால் உற்பத்தி பொருட்கள் நிறுவனம் மீது வழக்குப்பதிவு

திருப்பதி தேவஸ்தானத்திற்கு கலப்பட நெய் வழங்கியதாக திண்டுக்கல் ஏ.ஆர்.பால் உற்பத்தி பொருட்கள் நிறுவனம் மீது தேவஸ்தானம் சார்பில் திருப்பதி கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

சித்தராமையா மீது வழக்கு பதிய உத்தரவு.. ஊசலில் முதலமைச்சர் பதவி..

முடா வழக்கு தொடர்பாக கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா மீது வழக்குப்பதிவு செய்ய பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Leopard Issue : "இதுக்கு மேல முடியாது.." - உயிர் பயத்தில் வீதிக்கு வந்த மக்கள்.. சேலத்தில் பரபரப்பு

Mettur People Protest To Catch Leopard : மேட்டூர் அருகே சிறுத்தை புலியை பிடிக்க நடவடிக்கை எடுக்காத வனத்துறையை கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு வந்த வனத்துறை, காவல்துறை அலுவலர்கள் சிறுத்தை புலியை விரட்ட நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

Fire Accident : பேப்பர் குடோனில் கொழுந்து விட்டு எரிந்த தீ... புகைமண்டலமாக மாறிய வண்டலூர்

Godown Fire Accident in Chengalpattu : செங்கல்பட்டு வண்டலூர் அருகே கொளப்பாக்கம் பகுதியில் உள்ள பழைய பேப்பர் குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. 20 அடி உயரத்திற்கு கரும்புகை சூழ்ந்துள்ள நிலையில் பணியாளர்கள், தீயணைப்பு துறையினர் தீயை அணைத்து வருகின்றனர். 

OTT Platforms Censor : ஓடிடி யிலும் தணிக்கை... மத்திய அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

OTT Platforms Censor Issue in Madurai High Court : ஓடிடி தளத்தில் வெளியாகும் சினிமா, வெப் சீரியல்கள் போன்றவற்றை தணிக்கை செய்வது தொடர்பான வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

Chennai Rain Update : சென்னையில் மிதமான மழைக்கு வாய்ப்பு

Chennai Rain Update : சென்னை நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது. மேலும் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tirupati Laddu Issue : திருப்பதி லட்டு சர்ச்சை.. கர்நாடகாவில் இருந்து வந்து இறங்கிய நெய்

Tirupati Laddu Issue : திருப்பதி லட்டு கலப்பட சர்ச்சைக்கு பின் கர்நாடகா மில்க் ஃபெடரேஷனின் நந்தினி பிராண்ட் நெய்யை தேவஸ்தானம் கொள்முதல் செய்கிறது. டேங்கர் லாரி மூலம் கொண்டு செல்லப்பட்ட நெய் திருப்பதிக்கு வந்தடைந்தது.

தவெக மாநாட்டுக்கு அனுமதி மறுப்பா..? வெளியான தகவல்.. எஸ்.பி. விளக்கம்

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு அக்டோபர் 27ம் தேதி விக்கிரவாண்டியில் நடைபெறுகிறது. இந்நிலையில் மாநாட்டுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியான நிலையில் விழுப்புரம் எஸ்.பி விளக்கமளித்துள்ளார். 

குற்றவியல் சட்டங்களுக்கு இந்தியில் பெயர்.. மத்திய அரசுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்

மூன்று குற்றவியல் சட்டங்களுக்கு இந்தியில் மட்டும் பெயர் வைத்ததன் மூலம் தமிழர்கள் மீது இந்தி திணிக்கப்பட்டுள்ளது என தமிழ்நாடு புதுச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் மாரப்பன் சார்பில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்நிலையில், மத்திய அரசு இதுதொடர்பாக பதிலளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

Thiruchendur : முருகனை தரிசிக்க ரூ.1,000 கட்டணம்.. அதிர்ச்சியில் பக்தர்கள்..

Thiruchendur Murugan Temple Darshan Ticket Price : திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் விரைவு தரிசனத்திற்கு சிறப்பு கட்டணம் ரூ.1,000 ஆக கோயில் நிர்வாகம் நிர்ணயித்துள்ளது. ரூ.100-க்கு மேல் தரிசன கட்டணம் வசூலிக்கக் கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் கோயில் நிர்வாகம் விதித்துள்ள கட்டணம் பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

காரில் இருந்த 5 சடலங்கள்.. வெளியான பகீர் தகவல்

புதுக்கோட்டை நமணசமுத்திரம் அருகே காரில் இருந்து 5 பேர் சடலமாக மீட்கப்பட்டனர். இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேரும் தற்கொலை செய்துகொண்டதாக முதற்கட்ட தகவல் கிடைத்துள்ளது.

பசங்களா ஹேப்பியா !காலாண்டு விடுமுறை நீட்டிப்பு

தமிழகத்தில் பள்ளி காலாண்டு விடுமுறை நீட்டிக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. அதன்படி அக்டோபர் 6ம் தேதி வரை விடுமுறை நீட்டித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஜகா கேட்ட இபிஎஸ் ....தடா போட்ட தயாநிதி...Tired ஆன நீதிமன்றம்

தயாநிதி மாறன் தொடர்ந்த அவதூறு வழக்கில் இருந்து விடுவிக்க கோரி எடப்பாடி பழனிசாமி சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனு விசாரணைக்கு உகந்தது அல்ல என தயாநிதி மாறன் தரப்பு வழக்கறிஞர் பதில் தரப்பு வாதத்தை எடுத்துரைத்தார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி அக்டோபர் 16 தேதி இந்த வழக்கில் உத்தரவு பிறப்பிக்கப்படும் என தெரிவித்தார். 

சிக்கி தவிக்கும் மோகன் ஜி ... மீண்டும் செக்

பழநி கோயில் பஞ்சாமிர்தம் குறித்து அவதூறு பரப்பிய இயக்குநர் மோகன் ஜி மீது தவறான தகவல்களை பரப்புவது, மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துவது ஆகிய பிரிவின் கீழ் பழநி அடிவார போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், அவருக்கு சம்மன் அனுப்ப போலீசார் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை.. அதிரடி ஆக்‌ஷன் எடுத்த போலீஸ்

திருவண்ணாமலை செங்கம் அருகே 11ம் வகுப்பு மாணவியை வன்கொடுமை செய்த வழக்கில் 3 பேரை கைது செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.  

ஜம்மு காஷ்மீரில் 2ம் கட்டத் தேர்தல்.. விறுவிறுப்பாக நடைபெறும் வாக்குப்பதிவு

ஜம்மு–காஷ்மீரில் சட்டமன்ற தேர்தலின் 2ம் கட்ட வாக்குப்பதிவு 26 தொகுதிகளுக்கு இன்று காலை  தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.  பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகிறார்கள். 

லிப்ஸ்டிக் போட்டது குத்தமா? பெண் ஊழியர் மீது நடவடிக்கை

சென்னை மாநகராட்சியின் முதல் பெண் டபேதாராக இருந்த மாதவி, மணலிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். பணிக்கு உரிய நேரத்தில் வருவதில்லை என்பதால் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தினம் தினம் ஒரு பஞ்சாயத்து....எப்படி இருந்த பச்சையப்பன் கல்லூரி

பச்சையப்பன் கல்லூரியில் மாணவர் அமைப்பினர் மற்றும் ஆசிரியர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து கல்லூரி நிர்வாகம் சார்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தவெக அப்டேட்...நாளை வெளியாகும் முக்கிய அறிவிப்பு

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு அக்டோபர் 27ம் தேதி விக்கிரவாண்டியில் நடைபெற உள்ளது. இந்நிலையில் இதுதொடர்பாக     மாவட்ட செயலாளர்கள், பொறுப்பாளர்களுடன் தவெக தலைவர் விஜய் நாளை ஆலோசனை நடத்த உள்ளார்.