TVK மாநாட்டில் பங்கேற்கும் ராகுல்காந்தி? போட்டுடைத்த ஜெகதீஷ்!
TVK Jagadeesh Exclusive Interview : நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
TVK Jagadeesh Exclusive Interview : நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Rowdy Seizing Raja Encounter : பிரபல ரவுடி சீசிங் ராஜா என்கவுன்டரில் சுட்டுக் கொலை செய்யப்பட்டது குறித்து விவரிக்கிறது இந்த தொகுப்பு..
லட்டில் கலப்படம் செய்திருந்தால் நானும் என் குடும்பமும் நாசமாக போகவேண்டும் என்று திருப்பதி தேவஸ்தானத்தின் அறங்காவலர் குழு முன்னாள் தலைவர் சபதம் எடுத்துள்ளார்.
திருச்சி ஸ்ரீரங்கத்தில் ஜம்பு என்ற ரவுடியை வழக்கு ஒன்றில் கைது செய்வதற்காக போலீசார் சென்றனர். அப்போது போலீசாரை தாக்கிவிட்டு தப்பிக்க முயன்றதால் அவரை துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தனர்.
சென்னை நீலாங்கரை அக்கரை பகுதியில் ரவுடி சீசிங் ராஜா இன்று காலை போலீசார் என்கவுன்டர் செய்யப்பட்டு கொல்லப்பட்டார். அந்த இடத்தில் சோழிங்கநல்லூர் மாஜிஸ்திரேட் ஆய்வு மேற்கொண்டார்.
சென்னையில் நடைபெற்ற சொகுசு கார்களின் கண்காட்சியில் ஏராளமான இளைஞர்கள் கலந்துகொண்டனர். அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் மட்டும் வழக்கமான ஒன்றாக இருந்துவந்த சொகுசு கார் கண்காட்சிகள் தற்போது சென்னையிலும் நடைபெற தொடங்கியுள்ளது. இந்த கண்காட்சியில் BMW, Benz, Audi, Mustang உள்ளிட்ட கார்களின் உயர் ரக மாடல்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. குறிப்பாக மாறுதல்கள் செய்யப்பட்டு மெருகேற்றப்பட்ட கார்களின் அணிவகுப்பும் திரட்டிருந்த இளைஞர்களை வெகுவாக கவர்ந்தது. இதனை ரசித்து பார்த்ததுடன் இளைஞர்கள் புகைப்படம் எடுத்தும் மகிழ்ந்தனர்.
சென்னையில் நடைபெற்ற சொகுசு கார்களின் கண்காட்சியில் ஏராளமான இளைஞர்கள் கலந்துகொண்டனர். அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் மட்டும் வழக்கமான ஒன்றாக இருந்துவந்த சொகுசு கார் கண்காட்சிகள் தற்போது சென்னையிலும் நடைபெற தொடங்கியுள்ளது. இந்த கண்காட்சியில் BMW, Benz, Audi, Mustang உள்ளிட்ட கார்களின் உயர் ரக மாடல்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. குறிப்பாக மாறுதல்கள் செய்யப்பட்டு மெருகேற்றப்பட்ட கார்களின் அணிவகுப்பும் திரட்டிருந்த இளைஞர்களை வெகுவாக கவர்ந்தது. இதனை ரசித்து பார்த்ததுடன் இளைஞர்கள் புகைப்படம் எடுத்தும் மகிழ்ந்தனர்.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் 3 பேர் ஜாமின் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்பதால் அவர்களுக்கு ஜாமின் வழங்கக்கூடாது என்ற சிபிசிஐடி கோரிக்கையை ஏற்று ஜாமின் மனுக்களை தள்ளுபடி சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
கேரளாவைச் சேர்ந்த நர்சிங் கல்லூரி மாணவியை மர்ம கும்பல் கடத்தி வந்து தேனியில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பின்னர் மாணவியை திண்டுக்கல் ரயில் நிலையத்தில் விட்டு சென்ற நிலையில் திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரியில் மாணவிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது
மீனவர் பிரச்னையில் உறுதியான நடவடிக்கை எடுக்காமல் முதலமைச்சர் பெயரளவுக்கு மட்டுமே கடிதம் எழுதுகிறார். மத்திய அரசின் உறுதியான நடவடிக்கையை திமுக அரசால் நிர்பந்தித்து பெற முடியவில்லை என எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டியுள்ளார்.
ஊர்வலத்திற்கு அனுமதி அளிப்பதற்கு விதிமுறைகளை உருவாக்கிய பின்னரும் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி வழங்ககுவதில் ஏன் தாமதம் என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
தமிழ்நாடு அரசின் திருமண உதவி திட்டங்களுக்காக ரூ.48.83 கோடி செலவில் 16 கிலோ தங்கத்தை சமூக நலத்துறை கொள்முதல் செய்ய உள்ளது. 8 கிராம் எடையுள்ள 8000 தங்க நாணயங்களை வாங்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவர் ஓரிரு மணி நேரங்களில் ஒப்புதல் அளிக்கிறார். ஆனால், தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களுக்கு ஆளுநர் ஒப்புதல் தருவதில்லை என சபாநாயகர் அப்பாவு குற்றஞ்சாட்டியுள்ளார்.
வீடுகளில் விளக்கேற்றி மந்திரம் படித்தால் கலப்பட நெய்யில் தயாரிக்கப்பட்ட லட்டை சாப்பிட்ட தோஷம் விலகும் என திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது
மதுரை மாட்டுத் தாவணி பேருந்து நிலையம் எதிரே உள்ள நுழைவு வாயில், மதுரை மாவட்ட நீதிமன்றம் அருகே உள்ள நுழைவு வாயில் ஆகியவற்றை இடித்து அகற்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.
தவெக மாநாடு அக்டோபர் 27ம் தேதி விக்கிரவாண்டியில் நடைபெற உள்ள நிலையில், மாநாட்டிற்கு வரும் கட்சியினர் மது அருந்திவிட்டு வரக்கூடாது. பெண்கள் மற்றும் பெண் காவலர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என கட்சியினருக்கு புஸ்ஸி ஆனந்த் அறிவுறுத்தியுள்ளார்
ஈரோடு மாவட்டம் பவானி அடுத்துள்ள கவுந்தப்பாடி ஊராட்சியை பேரூட்சியாக மாற்ற கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.
நாமக்கல் பள்ளிபாளையம் அலமேடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள் மீது பாலியல் புகாரளித்தனர். இதையடுத்து மாவட்ட கல்வி அதிகாரி, வட்டார கல்வி அலுவலர், தாசில்தார் உள்ளிட்டோர் புகாரளித்த பெற்றோரிடம் விசாரணை நடத்தினர்.
Gutka Malpractice Case Charge Sheet : குட்கா முறைகேடு தொடர்பான வழக்கில் முன்னாள் அமைச்சர்கள், காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு எதிரான குற்றப்பத்திரிகை தயாராக உள்ளதாக சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் CBI தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை விமர்சித்து அவதூறாக பேசிய வழக்கில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் திருக்கோவிலூர் - அரகண்டநல்லூரை இணைக்கும் தரைப்பாலத்தின் ஒருபகுதி அடித்து செல்லப்பட்டது. ஆனால் ஆபத்தை உணராமல் பாலத்தின் ஓரமாக வாகன ஓட்டிகள் இருசக்கர வாகனத்தில் பயணிப்பதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது
ஆஸ்கர் விருது சிறந்த வெளிநாட்டு பட பிரிவுக்கு கிரண்ராவ் இயக்கிய லாப்பட்டா லேடீஸ் இந்திய பிலிம் சேம்பர் சார்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. தங்கலான், வாழை, மகாராஜா, ஜமா, கொட்டுக்காளி, ஜிகர்தண்டா டபுள் எக்சல் ஆகிய படங்கள் போட்டியில் இருந்தன
எழும்பூர் கண்ணப்பர் திடல் அமைச்சர் உதயநிதி மூலக்கொத்தளம் திட்ட பகுதியில் குடியிருப்பு ஒத்துக்கீடு செய்து அதற்கான ஆணைகளை வழங்கினார். இந்திய 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தங்களுக்கு வீடு ஒதுக்கவில்லை எனக் கூறி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து போலீசார் அவர்களை கைது செய்ததால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது
டெல்லியில் 8வது முதலமைச்சராக அதிஷி பொறுப்பேற்றுக்கொண்டார். டெல்லி சட்டப்பேரவை கூட்டத்தொடர் செப்டம்பர் 26,27 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது
திருப்பதி லட்டு விவகாரம் தொடர்பாக பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளார். அதில், லட்டு விவகாரத்தில் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் ஆதாரமற்ற குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணை மேற்கொள்ள உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்