ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த ரவுடி புதூர் அப்பு டெல்லியில் கைது...
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த ரவுடி புதூர் அப்பு டெல்லியில் கைது. நாட்டு வெடிகுண்டுகளை சப்ளை செய்த புகாரில் தனிப்படை போலீசார் நடவடிக்கை.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த ரவுடி புதூர் அப்பு டெல்லியில் கைது. நாட்டு வெடிகுண்டுகளை சப்ளை செய்த புகாரில் தனிப்படை போலீசார் நடவடிக்கை.
தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களை அப்புறப்படுத்த முயற்சி.. புகாரின் பேரில் மனித உரிமை ஆணைய அதிகாரிகள் விசாரணை
தவெக மாநாடு நடத்துவதற்காக 177 ஏக்கர் நிலம் ஒப்பந்தம். வாகனங்கள் நிறுத்தம், கழிவறைகள் உள்ளிட்ட வசதிகள் அமைப்பு
Today Headlines: 6 மணி தலைப்புச் செய்திகள் | 6 AM Headlines Tamil | 22-09-2024
பிரதமர் மோடி தற்போது அமெரிக்காவின் பிலடெல்பியா விமான நிலையம் சென்றடைந்தார், அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஸ்ரீராம் ராஜேந்திரன் நியமனம். கொலிஜியத்தின் பரிந்துரையை ஏற்று குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு உத்தரவு.
திருவள்ளூர் பொன்னேரி பகுதியில் உள்ள SS ஹைதராபாத் பிரியாணி கடையில் பிரியாணி சாப்பிட்ட 10க்கும் மேற்பட்டோருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அதிகாரிகள் நடத்திய சோதனையில் கெட்டுப்போன இறைச்சி இருந்ததால் கடைக்கு சீல் வைத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
நாகை, மயிலாடுதுறையை சேர்ந்த 37 மீனவர்களை நெடுந்தீவு அருகே எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படைனர் கைது செய்தனர்.
சிறைகளில் கைதிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய குழு அமைக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இன்று அந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், தமிழக அரசு, மாநில மனித உரிமை ஆணையம், சிறைத் துறை அதிகாரிகள் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
சிவகங்கை இளையான்குடியில் கழிவு நீர் தொட்டி கட்டுவதற்காக தோண்டப்பட்ட குழியில் இருந்து வெளியேறிய விஷவாயு தாக்கி இருவர் பலியாகினர். அச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஹைதராபாத்தில் இருந்து தனியார் ஆம்னி பேருந்து ஒன்று சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தது. தமிழ்நாடு - ஆந்திரா எல்லையான எளாவூர் சோதனை சாவடியில் பேருந்தை நிறுத்தி போலீசார் சோதனை நடத்தினர். அதில் அனுப்பப்பட்டிருந்த பார்சலை பிரித்து பார்த்தபோது அதில் ரூ.2.15 கோடி பணம் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து சென்னையை சேர்ந்த சூரஜ் பூரி என்பவரிடம் IT அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tirupati Laddu Issue : திருப்பதி கோயிலுக்கு கொண்டு செல்லப்படும் நந்தினி நெய் வாகனங்களில் ஜி.பி.எஸ் கருவி, மின்சார பூட்டுகளை பயன்படுத்த கர்நாடகா பால் கூட்டமைப்பினர் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
LIVE : Delhi CM Atishi Marlena Oath Ceremony Live Update in Tamil : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா செய்ததை அடுத்து புதிய முதல்வராக அதிஷி பதவியேற்றார். இவருக்கு துணைநிலை ஆளுநர் விகே சக்சேனா பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே 13 வயது பள்ளி மாணவி சின்னகண்ணு என்பவர் பாலியல் தொல்லை அளித்துள்ளார். மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் சின்னகண்ணு கைது செய்யப்பட்டார்.
கோவையில் ரவுடி ஆல்வின் துப்பாக்கியால் சுட்டுப் பிடிக்கப்பட்டது தொடர்பாக காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார்.
திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் தேவஸ்தான முக்கிய நிர்வாகிகள், செயல் அதிகாரி உள்ளிட்டோருக்கு திருப்பதி தேவஸ்தானம் அழைப்பு விடுத்துள்ளது.
கொடைக்கானல் அருகே கூனிப்பட்டி என்ற வனப்பகுதியில் 300 அடி நீளத்திற்கு நிலம் தனியாக பிளந்ததால் மக்கள் அச்சமடைந்தனர். கடந்த சில நாட்களாக குழாயில் நீர் வராததால், சென்று பார்த்தபோது பூமி விரிசல் விட்டிருப்பதை கண்டு மக்கள் அதிர்ச்சிக்குள்ளாகினர்.
Madurai Child Death : மதுரையில் பால் பவுடர் குடித்த 2 மாத குழந்தைக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டதால் உடனடியாக மருத்துவமனை அழைத்து சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Northeast Monsoon : வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் முருகானந்தம் ஆலோசனை நடத்தினார்
Siruvani River Dam : சிறுவாணி ஆற்றின் குறுக்கே கேரள அரசு அணை கட்ட முயற்சித்து வந்த நிலையில் கேரள அரசின் சுற்றுச் சூழல் அனுமதிக்கான விண்ணப்பத்தை மத்திய சுற்றுச் சூழல் துறை திருப்பி அனுப்பியது.
Ponneri Railway Station : திருவள்ளூர் பொன்னேரியில் தண்டவாளத்தில் உள்ள ரயில்வே சிக்னல் பெட்டியின் போல்டுகள் கழற்றப்பட்டதால் ரயிலை கவிழ்க்க சதியா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Kamal Haasan Speech at Makkal Needhi Maiam General Meeting : மக்கள் நீதி மய்ய கட்சி பொதுக்குழு கூட்டத்தில் அக்கட்சி தலைவர் கமல்ஹாசன் உரையாற்றி வருகிறார்
Makkal Needhi Maiam General Meeting Resolution : மக்கள் நீதி மய்ய கட்சி தலைவர் கமல்ஹாசன் தலைமையில் பொதுக்குழு கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தனிப்பட்ட விவகாரங்களில் யாரும் தலையிட வேண்டாம். யாருடைய பெயரையும்| இழுக்க வேண்டாம்; வாழு, வாழ விடு என விவாகரத்து குறித்த கேள்விக்கு நடிகர் ஜெயம் ரவி பதிலளித்துள்ளார்.
மாஞ்சோலை விவகாரம் தொடர்பாக 3 நாட்களாக தேயிலை தோட்ட தொழிலாளர்கள், பிபிடிசி நிர்வாகத்திடம் தேசிய மனித உரிமை ஆணைய குழுவினர் விசாரணை நடத்திய நிலையில் இன்று நெல்லை மாவட்ட ஆட்சியரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.