K U M U D A M   N E W S

வீடியோ ஸ்டோரி

#JUSTIN : வேலூரில் ரயில் சேவை பாதிப்பு.. அதிகாரிகளுடன் பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு

வேலூர் ரயில்வே கேட் அருகே மின் வயர் அறுந்ததால் திருச்சியில் இருந்து திருப்பதி செல்லும் ரயில் நிறுத்தப்பட்டது. மின் வயர் சரி செய்யும் பணிக்காக சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக ரயில் நின்றதால் ரயில்வே அதிகாரிகளுடன் பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்

#breaking: மீனவர்களை மீட்க கோரி முதலமைச்சர் கடிதம்

இலங்கை கடற்படையால் கடந்த 7ம் தேதி கைது செய்யப்பட்ட புதுக்கோட்டை மீனவர்கள் 14 பேரை மீட்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய் சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். 

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு எதிரான வழக்கை வரும் 23ம் தேதிக்கு சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

ரேஸ் கோர்ஸ் மைதானத்திற்கு சீல்

சென்னை ரேஸ் கோர்ஸ் மைதானத்திற்கு வருவாய்த்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். சுமார் ரூ.780 கோடி குத்தகை பாக்கி வைத்திருப்பதால் ரேஸ் கோர்ஸ் மைதானத்திற்கு சீல் வைத்து வருவாய்த்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். 

மகாவிஷ்ணு விவகாரம் - விரைவில் அறிக்கை சமர்ப்பிப்பு

சென்னை அசோக் நகர், சைதாப்பேட்டை அரசு பள்ளியில் மகாவிஷ்ணு நடத்திய ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சி சர்ச்சையானது. இதைத்தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் நல அமைப்பினர் அளித்த புகாரின் பேரில் மகாவிஷ்ணுவை போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில் அசோக் நகர், சைதாப்பேட்டை பள்ளிகளின் நிலவரம் குறித்து பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் விசாரணை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் விரைவில் அவர் அறிக்கை சமர்ப்பிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இபிஎஸ் குற்றச்சாட்டு ஆதாரமற்றது - தமிழக அரசு

தமிழகம் முழுவதும் ஆதிதிராவிடர் நலத்துறையின் கட்டுப்பாட்டில் 1,331 விடுதிகளில் 98,909 மாணவர்கள் தங்கி படிக்கின்றனர். ஆதிதிராவிடர் மாணவர்களின் நலன் காக்க தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதுபோன்ற சூழல் இருக்கும் நிலையில் ஆதிதிராவிடர் மாணவர் விடுதி தொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கை ஆதாரமற்றது என தமிழக அரசு விளக்கமளித்துள்ளது.  

தேசிய கல்விக்கொள்கையை கட்டாயமாக்க மத்திய அரசு முயற்சிக்கிறது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

தேசிய கல்விக்கொள்கையை கட்டாயமாக்க மத்திய அரசு முயற்சிக்கிறது. தேசிய கல்விக்கொள்கையை மறுப்பதால் மாநிலங்களுக்கு நிதி மறுக்கப்படுகிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

மகாவிஷ்ணுவின் சர்ச்சைக்குரிய வீடியோ நீக்கம்

அரசு பள்ளியில் மாற்றுத்திறனாளிகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய மகாவிஷ்ணு பேசிய வீடியோ பரம்பொருள் பவுண்டேஷன் என்ற யூடியூப் சேனலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது

கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி 3 பேர் உயிரிழப்பு

Kollidam river, death due to drowning in river, Thanjavur, Thirukkatupalli, கொள்ளிடம் ஆறு, ஆற்றில் மூழ்கி உயிரிழப்பு, தஞ்சாவூர், திருக்காட்டுப்பள்ளி,

பாராலிம்பிக்ஸில் புதிய வரலாறு.. 29 பதக்கங்களுடன் நிறைவு செய்த இந்தியா

பாராலிம்பிக்ஸ் விளையாட்டு திருவிழா ஆடல் பாடல் என கோலாகலமாக நிறைவு பெற்றது.

மகா விஷ்ணுவை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் - H.ராஜா

ஆன்மிக பேச்சாளர் மகாவிஷ்ணுவை முதலில் விடுதலை செய்யவேண்டும் என பாஜக மூத்த தலைவர் எச். ராஜா தெரிவித்துள்ளார். தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், திருக்குறளை சுட்டிக்காட்டி ஒழுக்கம் பற்றி பேசியதால் தான், ஒழுக்கமற்ற திமுகவினர் ஆவேசம் அடைந்து அவரை தீவிரவாதி போல் கைது செய்திருப்பதாகவும் குற்றம்சாட்டினார். 

"69% இட ஒதுக்கீட்டுக்கு ஆபத்து.. அது ரத்து செய்யப்பட்டால் அன்றே திமுக ஆட்சி கலைந்துவிடும்"

69% இட ஒதுக்கீட்டுக்கு ஆபத்து.. அது ரத்து செய்யப்பட்டால் அன்றே திமுக ஆட்சி கலைந்துவிடும் என கூறியுள்ளார் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்

விநாயகர் சதுர்த்தி கோலாகலம் - மேளதாளத்துடன் ஊர்வலமாக சென்று சிலைகள் கரைப்பு

ராமநாதபுரம் பரமக்குடியில் விநாயகர் சதுர்த்தி கோலாகலம் - மேளதாளத்துடன் ஊர்வலமாக சென்று சிலைகள் கரைத்த பக்தர்கள்

"நடிகர் சங்க கடனை அடைக்க Rajini Sir கொடுத்த ஐடியா"

நடிகர் சங்க கடனை அடைக்க நடிகர் ரஜினி கொடுத்த ஐடியா பற்றி செய்தியாளர்கள் மத்தியில் தெரிவித்தார் நடிகர் கார்த்தி

பாலியல் புகார்கள் குறித்து மீடியாவில் பேச வேண்டாம் - நடிகர் சங்க விசாகா கமிட்டி தலைவர் ரோகிணி

பாலியல் புகார்கள் குறித்து மீடியாவில் பேச வேண்டாம் என நடிகர் சங்க விசாகா கமிட்டி தலைவர் ரோகிணி தெரிவித்துள்ளார்

தொடர் விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் மக்கள்.. ஆத்தூர் சுங்கச்சாவடியில் போக்குவரத்து நெரிசல்

விநாயகர் சதுர்த்தி பண்டிகைக்காக சொந்த ஊர் சென்று குடும்பம் குடும்பமாக ஊர் திரும்பும் மக்கள். ஆத்தூர் சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதால் மக்கள் அவதி

விநாயகர் சதுர்த்தி விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் மக்கள்.. GST சாலையில் போக்குவரத்து நெரிசல்

விநாயகர் சதுர்த்தி பண்டிகைக்காக சொந்த ஊர் சென்று குடும்பம் குடும்பமாக சென்னை திரும்பும் மக்கள். தாம்பரம் ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் - எறும்பு போல் ஊர்ந்து செல்லும் வாகனங்கள்

பாலியல் அத்துமீறல்.. 5 ஆண்டுகள் தடை..பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம்

பாலியல் புகார் உறுதியானால் 5 ஆண்டு தடை என்ற தீர்மானம் உள்பட நடிகர் சங்க பொதுக்குழு கூட்டத்தில் மொத்தம் 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது

THE GOAT 1000 கோடி டார்கெட்.. சிக்கல்கள் என்ன?

THE GOAT 1000 கோடி டார்கெட்.. சிக்கல்கள் என்ன?

JUSTIN | பரனூர் சுங்கசாவடியில் போக்குவரத்து நெரிசல்

விநாயகர் சதுர்த்தி, வார இறுதி நாள் விடுமுறை முடிந்த நிலையில் பொதுமக்கள் சென்னை திரும்புகின்றனர். ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்னை நோக்கி வருவதால் கடும் போக்குவரத்து நெரிசல்

தவெக-வுக்கு கிடைத்த அங்கீகாரம்.. கொண்டாடி கொளுத்திய தவெக-வினர்

விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியை இந்திய தேர்தல் ஆணையம் பதிவு செய்துக்கொண்டதை கொண்டாடும் விதமாக பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கிய தவெக கட்சியினர்

"Late -ஆ வந்தாலும் Latest-ஆ இருக்கு.." - முதல்வரின் பேச்சால் அதிர்ந்த அரங்கம்

அமெரிக்காவுக்கு Late-ஆக வந்திருக்கிறேன். ஆனால் வரவேற்பு Latest-ஆக உள்ளது என சிகாகோவில் நடைபெற்ற தமிழர் கலை நிகழ்ச்சியில் பெருமிதத்துடன் பேசியுள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

''தர்மபுரி மாவட்ட மக்களின் உணர்வுகளை அரசு எப்போது புரிந்துகொள்ளும்..?'' - அன்புமணி ராமதாஸ் கேள்வி

நீர் பிரச்சனை குறித்து தர்மபுரி மாவட்ட மக்களின் உணர்வுகளை அரசு எப்போது புரிந்துகொள்ளும் என கேள்வி எழுப்பியுள்ளார் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்

JUSTIN | கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி இருவர் உயிரிழப்பு

தஞ்சாவூர் திருக்காட்டுப்பள்ளி அருகே கொள்ளிடம் ஆற்றில் குளித்த இளைஞர்கள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். பூண்டி மாதா கோயில் திருவிழாவை முன்னிட்டு சென்னையில் இருந்து வந்தவர்களுக்கு நேர்ந்த சோகம்

சீமான் போல்தான் விஜய்க்கும் நடக்கும்.. அடித்து சொன்ன அரசியல் விமர்சகர்

விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தை அரசியல் கட்சியாக இந்திய தேர்தல் ஆணையம் பதிவுசெய்துக்கொண்டது குறித்து அரசியல் விமர்சகர் துரைகண்ணா தன்னுடைய கருத்துகளை பகிர்ந்துள்ளார்