பிரான்சின் எவியான் நகரில் நடைபெற்ற ஜி7 உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக, இன்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் பிரதமர் நரேந்திர மோடி, இருதரப்பு சந்திப்பை நடத்தினார்.
முன்னதாக செவ்வாயன்று, ஜி7 உச்சிமாநாட்டின் மக்கள் தொடர்பு அமர்வின் ஒரு பகுதியாக பிரதமர் மோடியும் அதிபர் டிரம்பும் சந்தித்து வாழ்த்துக்களைப் பரிமாறிக்கொண்டதோடு, ஒரு சுருக்கமான உரையாடலையும் நடத்தினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், பிரதமர் மோடியை பாராட்டியதுடன், இந்தியா பயணம் குறித்த நினைவுகளையும் பகிர்ந்தார். அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியதாவது: கடந்த முறை இந்தியாவுக்கு சென்றபோது மிகச் சிறப்பான வரவேற்பு கிடைத்தது. அப்போது புதிய மைதானம் ஒன்று திறந்து வைக்கப்பட்டது. அதில் சுமார் 1.5 லட்சம் பேர் அமரும் வசதி இருந்தது. மைதானத்திற்குள் ஆயிரக்கணக்கானோர் இருந்ததுடன், வெளியேயும் ஏராளமான மக்கள் திரண்டிருந்தனர். இந்தியாவில் எனக்கு மிகவும் சிறப்பான அனுபவம் கிடைத்தது என்றார்.
தொடர்ந்து பேசிய டிரம்ப், அணு ஆயுதம் இல்லாத ஈரானை உருவாக்கும் முயற்சியில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பிரதமர் மோடியும் உறுதியான நிலைப்பாட்டை கொண்டுள்ளார். பேச்சுவார்த்தைக்கு மிகவும் கடினமானவர் மோடி. அவரைப் பார்த்தால் மிகவும் அமைதியான நபர் போல் தோன்றுவார். ஆனால் பேச்சுவார்த்தைகளில் மிகவும் உறுதியானவர்.
இந்திய மக்களை அவர் நேசிக்கிறார். அதே நேரத்தில் அமெரிக்காவுடனான உறவுகளையும் மதிக்கிறார்.
ஹூஸ்டனில் நடைபெற்ற ‘ஹவுடி மோடி’ நிகழ்ச்சியில் மைதானம் நிரம்பி வழிந்தது. எதிர்காலத்தில் மீண்டும் இந்தியாவுக்கு வர உள்ளோம்
நான் 8 போர்களை முடிவுக்குக் கொண்டு வந்தேன்.
இந்தியா மீது தாக்குதல் நடத்தப்பட்டால் இந்தியாவுக்கு அமெரிக்கா உதவும். இங்குள்ள அனைவரும் இந்தியாவை நேசிக்கிறார்கள். பிரதமர் மோடி மீது அனைவரும் மிகுந்த மரியாதை வைத்துள்ளனர். கச்சா எண்ணெய் விலை குறைவதை பார்த்துக் கொண்டு இருக்கிறோம்"என்று தெரிவித்தார்.
ஏறக்குறைய ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு இரு தலைவர்களும் முதன்முறையாகச் சந்தித்துள்ளது அரசியல் வட்டாரங்களில் பேசு பொருளாகியுள்ளது.

LIVE 24 X 7