இஸ்ரேல் மற்றும் காசா இடையே மீண்டும் போர் ஏற்படுவதைத் தடுக்கும் வகையில், 'காசா அமைதி வாரியம்' சார்பில் புதிய ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது. இதன்படி, ஹமாஸ் உள்ளிட்ட ஆயுதக் குழுக்கள் தங்கள் ஆயுதங்களை முழுமையாக ஒப்படைக்கவும், அதற்குப் பின் இஸ்ரேலியப் படைகள் காசாவிலிருந்து படிப்படியாக வெளியேறவும் ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
காசாவில் செயல்பட்டு வந்த ஹமாஸ் அமைப்பினருக்கும் இஸ்ரேலுக்கும் இடையே நடைபெற்று வந்த தீவிரப் போர், கடந்த ஆண்டு அமெரிக்க அதிபர் டிரம்பின் தலையீட்டால் முடிவுக்கு வந்தது. அதனைத் தொடர்ந்து, இருதரப்புக்கும் இடையே நிலையான அமைதியைச் சாத்தியமாக்கும் நோக்கில் 'காசா அமைதி வாரியம்' உருவாக்கப்பட்டது.
தற்போது இந்த அமைதி வாரியம் ஒரு முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளதாகத் தெரிவித்துள்ள டொனால்ட் டிரம்ப், ஹமாஸ் மற்றும் பிற ஆயுதக் குழுக்கள் தங்களின் ஆயுதங்களை முழுமையாகக் கைவிடத் சம்மதித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்துத் தனது 'ட்ரூத் சோஷியல்' பக்கத்தில் பதிவிட்டுள்ள அதிபர் டிரம்ப், "இன்று எட்டப்பட்டுள்ள இந்த ஒப்பந்தம் காசாவின் நிரந்தர அமைதிக்கும் பாதுகாப்புக்கும் ஒரு முக்கிய அடியாகும். இதன்படி, காசாவில் புதிய பாலஸ்தீன அரசு அமைவதுடன், அவ்வரசு அமைதி வாரியத்துடன் இணைந்து பொதுமக்களின் தேவைகளைக் கவனிக்கும். இனி காசா பகுதி பயங்கரவாதச் செயல்பாடுகளுக்குப் பயன்படுத்தப்படாது என்பதால், இஸ்ரேலின் பாதுகாப்பும் உறுதி செய்யப்படும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், டிரம்ப்பின் 20 அம்ச அமைதித் திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டுள்ள இந்த ஒப்பந்தத்தின்படி, ஆயுதக் களைவுப் பணிகள் முழுமையடைந்ததும் இஸ்ரேல் படைகள் வெளியேறும். அதன்பின், சர்வதேச நிலைப்படுத்துதல் படை புதிய பாலஸ்தீனக் காவல்துறையுடன் இணைந்து காசா மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும். இந்த அமைதிப் பேச்சுவார்த்தைக்கு உதவிய எகிப்து, கத்தார் மற்றும் துருக்கியே ஆகிய நாடுகளுக்கு டிரம்ப் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
கடந்த அக்டோபர் மாதம் முதல் போர்நிறுத்தம் அமலில் இருந்தபோதிலும், ஹமாஸின் ஆயுதக் களைவு குறித்த கேள்வி முக்கியத் தடையாக இருந்து வந்தது. இந்நிலையில்தான், இந்த ஒப்பந்தத்தின் இரண்டாம் கட்டத்தைச் செயல்படுத்துவது குறித்து ஆலோசிக்க எகிப்து தலைநகர் கெய்ரோவில் விரைவில் மத்தியஸ்தர் நாடுகளின் கூட்டம் நடைபெறவுள்ளது.
டிரம்ப்பின் 20 அம்ச அமைதித் திட்டத்தின் கீழ், காசாவின் தினசரி நிர்வாகத்தைக் கவனித்துக் கொள்ள பாலஸ்தீன வல்லுநர்கள் அடங்கிய தேசிய நிர்வாகக் குழு (NCAG) உருவாக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

LIVE 24 X 7