ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் சென்ற மூன்று வணிகக் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து, ஈரானுக்கு எதிராக அமெரிக்கா கடுமையான வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது.
ஹார்முஸ் ஜலசந்தி கடல் பகுதியில் சென்ற மூன்று வணிகக் கப்பல்கள் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்ட சில மணி நேரங்களிலேயே, அமெரிக்கா இந்த அதிரடிப் பதிலடித் தாக்குதலைத் தொடங்கியது. இது குறித்து அமெரிக்க மத்திய கட்டளையகம் (US Central Command) வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "வணிகக் கப்பல்களைக் குறிவைத்துத் தாக்கியதற்காக ஈரான் கடுமையான விலையைக் கொடுக்க நேரிடும். ஈரானின் இந்த ஆக்கிரமிப்புச் செயல் ஆபத்தானது மற்றும் போர்நிறுத்த ஒப்பந்தத்தை அப்பட்டமாக மீறும் செயலாகும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் இந்தத் தாக்குதலில் ஈரானின் வான் பாதுகாப்பு அமைப்புகள், கடலோரக் கண்காணிப்பு அமைப்புகள், ஏவுகணை மற்றும் ட்ரோன் ஏவுதளங்கள் மற்றும் துறைமுகக் கட்டமைப்புகள் குறிவைத்து அழிக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஈரானின் பந்தர் அப்பாஸ், சிரிக் மற்றும் கெஷ்ம் தீவு ஆகிய பகுதிகளில் பெரிய வெடிச்சத்தங்கள் கேட்டதாக ஈரான் ஊடகங்களும் உறுதிப்படுத்தியுள்ளன.
இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து, ஈரான் கச்சா எண்ணெய் விற்பனை செய்வதற்கு வழங்கியிருந்த சிறப்பு அனுமதியை அமெரிக்கா உடனடியாக ரத்து செய்துள்ளது. அமெரிக்காவின் இந்த முடிவுக்கு ஈரான் வெளியுறவு அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து ஈரானின் துணை வெளியுறவு அமைச்சர் காசிம் கரீபாபாடி கூறுகையில், "அமெரிக்கா எண்ணெய் விற்பனை அனுமதியை ரத்து செய்ததும், எங்கள் மீது நடத்திய ராணுவத் தாக்குதல்களும் இரு நாடுகளுக்கு இடையே போடப்பட்ட இஸ்லாமாபாத் ஒப்பந்தத்தை முழுமையாக மீறும் செயலாகும். இதற்கு எதிராக ஈரான் தனது தேசியப் பாதுகாப்பைக் காக்கத் தீர்க்கமான நடவடிக்கைகளை எடுக்கும்" என்று எச்சரித்துள்ளார்.
கடந்த பிப்ரவரி 28 அன்று அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய கூட்டுத் தாக்குதலில் ஈரானின் அப்போதைய உச்ச தலைவர் அலி கமேனி கொல்லப்பட்டார். அதன் பின்னர் ஏற்பட்ட தொடர் மோதல்களுக்குப் பிறகு, கடந்த மாதம் இரு நாடுகளுக்கும் இடையே ஒரு தற்காலிக அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. தற்போது நடந்துள்ள இந்த தாக்குதல்கள் காரணமாக, ஹார்முஸ் ஜலசந்தியை முழுமையாகத் திறப்பது மற்றும் ஈரானின் அணுசக்தித் திட்டத்தைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக நடந்து வரும் அமைதிப் பேச்சுவார்த்தைகள் முற்றிலும் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

LIVE 24 X 7