K U M U D A M   N E W S
Promotional Banner

அரசு

மசோதாக்கள் மீதான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு.. அரசின் சரியான நடவடிக்கைக்கு சான்று!

மசோதாக்கள் மீதான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு என்பது, தமிழக அரசு சரியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என்பதை உறுதிபடுத்துவதற்கான சான்று என்று அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.

2 பேருந்துகள் ஒன்றோடொன்று மோதி விபத்து.. 15-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி!

கடலூர் மாவட்டம் ஆலப்பாக்கம் அருகே அரசு விரைவு பேருந்துடன் தனியார் பேருந்து மோதி விபத்து 15-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ள நிலையில், இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொழிலாளர்களின் வயிற்றில் அடிக்கும் திமுக-வின் ஸ்டாலின் மாடல் அரசு...இபிஎஸ் கண்டனம்

விசைத்தறி உரிமையாளர்களின் வேலை நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டவர முடியாமல் லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வயிற்றில் அடிக்கும் திமுக-வின் ஸ்டாலின் மாடல் அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

ராகிங் கொடுமையால் மாணவன் விபரீத முடிவு...பள்ளியின் அலட்சியத்தால் பறிபோன உயிர்!

சென்னை சேத்துப்பட்டு தனியார் பள்ளியில் சக மாணவர்கள் கேலி கிண்டல் செய்ததால் பனிரெண்டாம் வகுப்பு மாணவன் நான்காவது மாடியில் உள்ள வீட்டிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல்..விரைவில் பணிகளுக்கு டெண்டர் கோர திட்டம்

முதல் கட்ட கட்டுமான பணிகள் ரூ.11,455 கோடி செலவில் வரும் ஜனவரி மாதம் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

வெப்பத்தால் பாதிக்கப்படுபவர்களுக்கு உதவிகள்....அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் அறிவிப்பு

வெப்பத்தை எதிர்கொள்ள போதுமான வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமசந்திரன் தெரிவித்தார்.

6 மாதத்திற்குள் பாதுகாப்பான குடிநீர் வழங்கப்படும்...சட்டப்பேரவையில் கே.என்.நேரு உறுதி

இன்னும் 6 மாதத்திற்குள் தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு முழுவதுமாக பாதுகாப்பான குடிநீர் வழங்கப்படும் என்று அமைச்சர் கே.என்.நேரு பதில் அளித்தார்.

சிலிண்டர் விலை உயர்வு: அடுப்பு எரிய வேண்டுமா? மக்களின் வயிறு எரிய வேண்டுமா? மு.க.ஸ்டாலின் கண்டனம்

வீட்டு உபயோக சிலிண்டர் விலை 50 ரூபாய் அதிகரித்துள்ள நிலையில் 'நாட்டு மக்களின் வீடுகளில் அடுப்பு எரிய வேண்டுமா? அல்லது அவர்களது வயிறு எரிய வேண்டுமா?’ என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

Excise duty on petrol: பெட்ரோல்-டீசல் மீதான கலால் வரி உயர்வு.. புலம்பும் மக்கள்

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை ஒரு லிட்டருக்கு தலா 2 ரூபாய் உயர்த்தி மத்திய அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ள சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஞானசேகரன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரங்கள் உள்ளதால் வழக்கில் விடுவிக்கக்கூடாது - தமிழக அரசு

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கில், ஞானசேகரன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரங்கள் உள்ளதால் வழக்கில் இருந்து விடுவிக்கக்கூடாது என தமிழக அரசு போக்சோ நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

கவுன்சிலர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்ட வழக்கு.. தமிழக அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

பதவி நீக்கம் செய்யப்பட்ட சென்னை மாநகராட்சி கவுன்சிலர்கள், உசிலம்பட்டி நகராட்சி தலைவர் ஆகியோர் தாக்கல் செய்த வழக்கில், ஏப்ரல் 21 ஆம் தேதிக்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உதகை மக்களை பார்த்து பொறாமை – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

இளைஞர்களின் வேலை வாய்ப்பிற்காக நீலகிரியில் மினி டைடல் பார்க் வர உள்ளது.

சட்டமானது வக்ஃபு வாரிய சட்டத்திருத்த மசோதா

வக்ஃபு வாரிய சட்டத்திருத்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார்.

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியில்லை - ஜி.கே. வாசன் குற்றச்சாட்டு

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு மோசமாக உள்ளது. அதே நேரத்தில், கொலை கொள்ளை பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. நீட் தேர்வு பிரச்சினையை பொறுத்தவரை, திமுக அரசு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே. வாசன் குற்றம் சாட்டியுள்ளார்.

வனப்பகுதியில் அன்னிய மரங்களை அகற்ற நவீன இயந்திரங்கள் - தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் பாராட்டு

தமிழக வனப்பகுதிகளில் அன்னிய மரங்களை அகற்ற நவீன இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருவதற்கு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது.

டிஜிபி சீமா அகர்வால் உள்ளிட்ட 7 ஐ.பி.எஸ் அதிகாரிகள் இடமாற்றம் - தமிழக அரசு உத்தரவு

சென்னை போக்குவரத்துக் கூடுதல் ஆணையர், பொருளாதார குற்றப்பிரிவு, லஞ்ச ஒழிப்புத்துறை இணை இயக்குனர் உள்ளிட்ட 7 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

ஆன்லைன் ரம்மியால், ஒட்டுமொத்த சமூகமும் பாதிக்கப்படுகிறது - உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்

ஆன்லைன் ரம்மி விளையாட்டால் தனி நபர் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த குடும்பமும், சமூகமும் பாதிக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

கைதிகள் குறித்த வழக்கு: அதுவும் மனித உரிமை மீறல் தான்...அதிரடி காட்டிய உயர்நீதிமன்றம்

ஜாமின் கிடைத்த பின்னர் எந்த கைதியும் சிறையில் இருப்பதை தவிர்க்கும் வகையில் நடைமுறையை பின்பற்றுமாறு சிறை அதிகாரிகளுக்கும், சட்டப் பணிகள் ஆணையத்திற்கும் நீதிபதிகள் உத்தரவு

School Building Issue: "படிக்க நல்ல கட்டடம் கொடுங்க".. மாணவர்களுடன் ரோட்டில் தர்ணா! | Trichy Protest

ஆதிதிராவிட நல துவக்க பள்ளிக்கு புதிய கட்டடம் கட்டித்தரக் கோரி சாலை மறியல்

School Students Issue | மாணவர்களை அடிக்கும் ஆங்கில ஆசிரியர்... பெற்றோர்கள் கொந்தளிப்பு | Tirupattur

ஆங்கில ஆசிரியர் வெங்கடேசன், மாணவர்களை அடிப்பதாகவும் தகாத வார்த்தைகளால் வசைப்பாடுவதாகவும் குற்றஞ்சாட்டி முற்றுகை

People Protest | தலைமை செயலகத்தை முற்றுகையிட்ட மக்கள்.. என்ன காரணம்? | TN Secretariat News Today

சாலையோரங்களில் உறங்குவதால், சமூக விரோதிகள் தகாத முறையில் நடந்துக்கொள்வதால் வீடு கோரி போராட்டம்

Cooum River Cleaning Project | கூவம் ஆறு சீரமைப்பு... நீர்வளத்துறை கொடுத்த விளக்கம் | DMK | TN Govt

ஒருங்கிணைந்த கூவம் ஆறு சூழலியல் மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ் ரூ.604.77 கோடியில் பணிகளை நடத்த திட்டம்

முல்லை பெரியாறு அணை.. தலைவலி தரும் கேரளா???

"முல்லை பெரியாறு அணையை பலப்படுத்த கேரள அரசு தொடர்ந்து முட்டுக்கட்டை" தமிழக அரசின் நீர்வளத்துறை கொள்கை விளக்க குறிப்பில் தகவல்

TVK Vijay | அரசு ஊழியர்களை ஏமாற்ற வேண்டாம் என தவெக தலைவர் விஜய் கோரிக்கை | JACTO GEO Protest | DMK

ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பின் போராட்டத்திற்குத் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக மனப்பூர்வமாக ஆதரவளிப்பதாக விஜய் பதிவு

வெற்று விளம்பர திராவிட மாடல் அரசு...அரசு ஊழியர்களை நம்ப வைத்து ஏமாற்ற வேண்டாம்..ஜாக்டோ-ஜியோ போராட்டத்திற்கு விஜய் ஆதரவு

தி.மு.க. அரசின் கபட நாடக ஏமாற்று வேலையால், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசுப் பணியாளர்கள், விடுமுறை நாளான இன்றும் கூட போராட்டக் களத்தில் உள்ளனர்