K U M U D A M   N E W S

வேலூரில் வீடுகளுக்குள் புகுந்த மழைநீர் – மக்கள் கடும் அவதி

வேலூரில் சுமார் அரை மணி நேரத்துக்கு பெய்த கனமழையால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் அவதி

போடிநாயக்கனூரில் பெண் மரணத்தில் திடீர் திருப்பம் – மகளை கொன்று தந்தை நாடகமாடியது அம்பலம்

மகளை கொன்று நாடகமாடி தந்தையை 24 மணி நேரத்தில் போலீசார் கைது செய்தனர்

3 மாவட்டங்களில் வெளுத்து வாங்கிய கனமழை…சாலையில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீர்

பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று வீடு திரும்பிய மாணவ, மாணவிகள் சிரமம் அடைந்தனர்.

பாடகர் எஸ்.பி.பி நினைவிடத்தில் அனுமதி மறுப்பு – அஞ்சலி செலுத்த முடியாததால் ரசிகர்கள் ஏமாற்றம்

பிரபல திரைப்பட பின்னணிப் பாடகர் எஸ்பிபி-யின் 5ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது.

“என் சாதனையை முறியடித்ததற்கு வாழ்த்துகள்!” – நடிகர் கமல்ஹாசன்

தனது சாதனையை முறியடித்த 4 வயது குழந்தை நட்சத்திரத்திற்கு நடிகர் கமல்ஹாசன் வாழ்த்து

தஞ்சாவூர் அருகே பாதை பிரச்சனை: மாணவர்களுக்கு வழிவிடாமல் அராஜகம்

பாதை பிரச்சனையில் பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகளை கட்டைகளை கொண்டு தடுத்தும் கம்புகளை கொண்டு விரட்டும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரல்

கரூரில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் ஆர்வம் காட்டாத பொதுமக்கள்- வெறிச்சொடி காணப்பட்ட இருக்கைகள்

குறிப்பிட்ட சில பயனாளிகளுக்கு மட்டும் ஏற்கனவே தயார் செய்யப்பட்ட ஆணைகளை மாவட்ட ஆட்சியர் தங்கவேல் வழங்கினார்.

ரூ. 7 கோடி மோசடி செய்த நிதி நிறுவனம்: தலைமறைவான 2 பேர் கைது!

அதிக வட்டி தருவதாகக் கூறி பொதுமக்களிடம் முதலீடுகளைப் பெற்று சுமார் ரூ.7 கோடி மோசடி செய்த 'ருத்ரா டிரேடிங்' நிறுவனத்தின் தலைமறைவாக இருந்த இரண்டு முக்கிய நபர்களைப் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்ட்ரல் ரயில் நிலையம்: உறங்கும் பயணிகளிடம் செல்போன் திருட்டு வழக்கில் இருவர் கைது!

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் அயர்ந்து உறங்கும் பயணிகளின் செல்போன்களைத் திருடிய மேற்கு வங்கத்தைச் சேர்ந்த லக்ஷ்மண குமார் மற்றும் மேடவாக்கத்தைச் சேர்ந்த வினோத் ஆகிய இருவரை ரயில்வே போலீசார் கைது செய்து, 10 செல்போன்களைப் பறிமுதல் செய்தனர்.

டெல்லி சாமியார் பாலியல் சீண்டல்: "என் அறைக்கு வா, உன்னை வெளிநாட்டுக்கு அழைத்து செல்கிறேன்!"

சாமியார் சைதன்யானந்தா பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்களை குறிவைத்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.

கோயம்புத்தூர் பூமார்க்கெட்டில் உடை சர்ச்சை: கல்லூரி மாணவி VS வியாபாரிகள் - இருதரப்பும் புகார்!

கோயம்புத்தூர் பூமார்க்கெட்டில் ஒரு கல்லூரி மாணவியின் உடை தொடர்பாக எழுந்த சர்ச்சை, சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. இந்த விவகாரத்தில் மாணவி மற்றும் பூ வியாபாரிகள் இருதரப்பினரும் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

அரசு மருத்துவமனை வளாகத்தில் மோதல்: கல்லூரி மாணவர்கள் வெறிச்செயல்!

சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகத்தில் இரண்டு கல்லூரி மாணவர் குழுக்களிடையே மோதல் ஏற்பட்டது. ஒரு மாணவரிடம் இருந்து நகைகள் பறிக்கப்பட்ட நிலையில், இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஏழே மாதங்களில் 7 போர்களை நிறுத்தினேன் - ஐ.நா.வில் டிரம்ப் பகிரங்க அறிவிப்பு!

ஐக்கிய நாடுகள் சபைக் கூட்டத்தில் பேசிய முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தாம் ஏழே மாதங்களில் ஏழு போர்களை நிறுத்தியதாகப் பகிரங்கமாகத் தெரிவித்தார். அவரது இந்த அறிவிப்பு உலக அரசியல் வட்டாரங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஷாருக்கான், எம்.எஸ்.பாஸ்கர், ஊர்வசி உள்ளிட்டோருக்கு தேசிய விருதுகள் – மோகன்லாலுக்கு தாதாசாகேப் பால்கே விருது

பார்க்கிங் படத்திற்காக சிறந்த குணச்சித்திர நடிகருக்கான தேசிய விருதை எம்.எஸ்.பாஸ்கர் பெற்றார்

“சிலர் எழுதிக்கொடுப்பதை தவறாக பேசுகிறார்கள்” – விஜய்க்கு அமைச்சர் ராஜகண்ணப்பன் பதிலடி

தமிழகத்தில் அலையாத்தி காடுகள் குறைவாக இல்லை என அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

இந்தியா - அமெரிக்கா வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பு: வரி, விசா விவகாரங்கள் குறித்துப் பேச்சு!

இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோவை சந்தித்துப் பேசினார். H1B விசா மற்றும் இருநாடுகளுக்கும் இடையேயான வரி விதிப்பு உள்ளிட்ட சர்ச்சைக்குரிய விவகாரங்கள் குறித்துப் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

ஏழை மக்களுக்கு நற்செய்தி: உஜ்வாலா திட்டம்: 25 லட்சம் புதிய இலவச LPG இணைப்புகள்!

உஜ்வாலா திட்டத்தின் கீழ் மத்திய அரசு 25 லட்சம் புதிய இலவச LPG இணைப்புகள் வழங்க உள்ளதாக மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்துள்ளார்.

ஜிஎஸ்டி 2.0 வரிக்குறைப்பு: கோவை வியாபாரிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி! நேரில் ஆய்வு செய்த வானதி சீனிவாசன்!

நாடு முழுவதும் ஜிஎஸ்டி 2.0 வரிக்குறைப்பு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இதன் தாக்கம் குறித்து, கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினரும், பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவியுமான வானதி சீனிவாசன், பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளை நேரில் சந்தித்து ஆய்வு செய்தார்.

ப்ளூ கிராஸ் அமைப்பிற்கு தமிழக காவல்துறை டிஜிபி கடிதம்

தெரு நாய்களுக்கு உணவு அளிப்போருக்கு தொல்லை தொடர்பாக காவல் நிலையங்களுக்கு சுற்றறிக்கை அனுப்ப தேவையில்லை என பதில் கடிதம்

ஏஐ தொழில்நுட்ப தாக்கம்: பெண்களுக்கு அதிக பாதிப்பு- ஐ.நா. ஆய்வு தகவல்

உலகெங்கிலும் உள்ள பெண் ஊழியர்களில் சுமார் 28% பேரின் வேலைவாய்ப்பு பாதிக்கப்படக்கூடும் என்று தகவல் வெளியாகி உள்ளது

ஜி.எஸ்.டி. வரி குறைப்பு: மாருதி கார்களின் விலை அதிரடி குறைப்பு

மத்திய அரசு, சிறிய கார்களுக்கான ஜி.எஸ்.டி. வரியை 28%-லிருந்து 18% ஆகக் குறைத்துள்ளதன் பலனை மாருதி நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது

விசா கட்டண உயர்வு: விமானத்திலிருந்து இறங்கிய இந்தியர்கள்- 3 மணி நேரம் தாமதமான விமானம்!

ஏற்கனவே விசா வைத்திருப்பவர்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்று விளக்கம்

மூழ்கிய தரைப்பாலம்: தேர்வு எழுத முடியாமல் தவிக்கும் மாணவர்கள்…ஆட்சியருக்கு கோரிக்கை

தண்ணீர் அதிகமாக வருவதால் தேர்வு எழுத முடியாமல் தவிக்கும் மாணவர்கள், மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதானி மீதான குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை - செபி அறிவிப்பு!

அதானி குழுமம் கணக்கு வழக்குகளில் முறைகேடு செய்ததாக ஹிண்டன்பர்க் நிறுவனம் சுமத்திய குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என செபி தெரிவித்துள்ளது. விசாரணையில் எந்த விதிமீறலும் கண்டறியப்படவில்லை என்றும் கூறியுள்ளது.

மலை கிராம மக்களிடையே மோதல் - போலீஸ் வாகனத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு

கோயில் திருவிழாவில் இருதரப்பினர் மோதல் தொடர்பாக விசாரிக்க சென்ற போலீசாரில் வாகனத்தை ஊருக்குள் வரவிடாமல் தடுத்ததால் பரபரப்பு