K U M U D A M   N E W S

சென்னையில் விநாயகர் சிலை ஊர்வலம்: ஆகஸ்ட் 31-ல் போக்குவரத்து மாற்றம்!

விநாயகர் சிலை ஊர்வலத்திற்காக, நாளை ஆகஸ்ட் 31 ஆம் தேதி சென்னையின் பல்வேறு பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், சாலைகளில் கனரக வாகனங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

7 ஆண்டுகளுக்குப் பிறகு சீனா சென்றடைந்த பிரதமர்.. ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் உரை!

இரண்டு நாள் ஜப்பான் பயணத்தை முடித்துக்கொண்ட இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, 2025 ஆகஸ்ட் 30 அன்று சீனா சென்றடைந்தார். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக அவர் சீனாவிற்குப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

தங்கக் கடத்தல் விவகாரம்: சென்னையில் சுங்கத்துறை அதிகாரிகள் வீடுகளில் சிபிஐ சோதனை!

தங்கக் கடத்தல் விவகாரத்தில் சுங்கத்துறை அதிகாரிகளுக்குத் தொடர்புள்ளதாக சந்தேகம் எழுந்த நிலையில், சென்னை அண்ணாநகர், பூக்கடை உள்ளிட்ட 6 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்: சென்னையில் போக்குவரத்து மாற்றம்!

விநாயகர் சதுர்த்தி சிலை ஊர்வலம், 31.08.2025 அன்று நடைபெறவுள்ள நிலையில், போக்குவரத்து மாற்றங்கள் மற்றும் ஏற்பாடுகள் குறித்த முக்கிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் 9 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. கூடுதல் தலைமைச் செயலர் தீரஜ் குமார் உத்தரவு!

ஐ.பி.எஸ். அதிகாரிகள் 9 பேரை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, அனிஷா ஹுசைன், லட்சுமி, சோனல் சந்திரா, ஜவஹர், சுஹாசினி, திவ்யா, சஜிதா உள்ளிட்ட 9 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

கோவைக்குத் தொடர் வெடிகுண்டு மிரட்டல்: காவல்துறையினர் தீவிர விசாரணை!

கோயம்புத்தூரில் கடந்த மூன்று நாட்களாக மின்னஞ்சல்மூலம் தொடர்ச்சியாக வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டு வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சண்டிகர்-மணாலி நெடுஞ்சாலையில் 50 கிமீ நீளத்திற்கு போக்குவரத்து நெரிசல்: ரூ. 50 கோடி மதிப்பிலான ஆப்பிள்கள் அழுகும் அபாயம்!

சண்டிகர்-மணாலி நெடுஞ்சாலையில் வாகனங்கள் அணிவகுத்து காணப்படுவதால், பயங்கரப் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் அழுகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கால் மூட்டு வலியை போக்க ‘ஸ்ட்ரா’ வைத்தியம்- லட்சக்கணக்கில் மோசடி செய்த போலி சித்த மருத்துவர்கள் கைது

8ஆம் வகுப்பு படித்துவிட்டு வடமாநிலத்தவர்களை ஏமாற்றிய ராஜஸ்தானை சேர்ந்த போலி சித்த மருத்துவர்கள் கைது

தெரு நாய்களுக்கு பொது இடங்களில் உணவளிக்க தடை- உச்சநீதிமன்றம்

தெருநாய்களை பிடித்துக் காப்பகத்தில் அடைக்க வேண்டும் எனப் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு நிறுத்தி வைப்பு

கரையை கடந்தது காற்றழுத்த தாழ்வு மண்டலம்.. தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு!

ஆந்திரா, தெற்கு ஒடிசா கடலோரப் பகுதிகளில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், கோபால்பூர் அருகே மணிக்கு 7 கிமீ வேகத்தில் கரையைக் கடந்ததால், ஆந்திரா மற்றும் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பாஜக ஆளும் மாநிலங்களில்தான் ஆளுநர் கம்பு சுற்ற வேண்டும்.. தமிழகத்தில் அல்ல - முதல்வர் சாடல்!

தர்மபுரியில் நடைபெற்ற அரசு விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின் ஆளுநர் கம்பு சுத்த வேண்டியது தமிழகத்தில் அல்ல - பாஜக ஆளுகின்ற மாநிலத்தில் என்று தெரிவித்துள்ளார்.

மருத்துவக் கல்லூரி சேர்க்கை: இடைத்தரகர்கள் மோசடிகுறித்து சென்னை காவல்துறை எச்சரிக்கை!

மருத்துவக்கல்லூரி சேர்க்கைக்கு இடைத்தரகர்களை நம்பி ஏமாற வேண்டாம் என்று சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

50 ஆண்டுகால சினிமா பயணம்.. சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்திற்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி!

நடிகர் ரஜினிகாந்த் திரையுலகில் தடம்பதித்து தனது 50 ஆண்டுகளை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள நிலையில், இந்திய பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கோவையில் ரவுடி கும்பல் அட்டகாசம்: பட்டாக்கத்தியுடன் சுற்றித் திரிந்த ரவுடி கும்பல் கைது!

கோவை செட்டிபாளையத்தில் ஆயுதங்களுடன் சுற்றிய மதுரையைச் சேர்ந்த ரவுடிகள் போலீசாரால் கைது செய்யப்பட்ட நிலையில், இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

தீபாவளிக்கு பரிசு காத்திருக்கிறது.. ஜிஎஸ்டி வரியில் சீர்திருத்தம் - பிரதமர் மோடி அறிவிப்பு!

பிரதமர் மோடி தனது சுதந்திர தின உரையில் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். குறிப்பாக, வரும் தீபாவளிக்கு பிறகு சரக்கு மற்றும் சேவை வரியில் (GST) பெரிய சீர்திருத்தங்கள் கொண்டுவரப்படும் என்று அவர் அறிவித்துள்ளார்.

தியாகிகளுக்கு மரியாதை: முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட 9 புதிய அறிவிப்புகள் - முழு விவரம்!

சுதந்திர தினத்தை முன்னிட்டு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தேசியக் கொடியை ஏற்றிவைத்து 9 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

மருத்துவம் படிக்க சிறப்பு வகுப்புகள்- மலைவாழ் மக்களுக்கு இபிஎஸ் உறுதி

மீண்டும் அதிமுக அரசு அமைந்தவுடன் மலைவாழ் மக்களுக்கு மருத்துவம் படிப்பதற்கான சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேச்சு

முதலமைச்சருக்கு படங்களை பார்க்கவே பொழுதுகள் போதவில்லை – அன்புமணி விமர்சனம்

தூய்மைப் பணியாளர்களுக்கு எதிராக அடக்குமுறையை ஏவுவதுவீரமல்ல, கோழைத்தனம் என அன்புமணி கடும் விமர்சனம்

தூய்மைப் பணியாளர்கள் என்ன தேச விரோதிகளா? –திமுக அரசுக்கு விஜய் கேள்வி

தூய்மைப் பணியாளர்களை அராஜகப் போக்குடன் மனிதாபிமானமற்ற முறையில் இரவோடு இரவாகக் கைது செய்த பாசிசத் திமுக அரசுக்குக் கண்டனம் என விஜய் தெரிவித்துள்ளார்.

அரை நிர்வாண கோலத்தில் கோயிலுக்குள் கொள்ளை- காட்டிக்கொடுத்த சிசிடிவி காட்சி

கோயிலுக்குள் கொள்ளையடித்த திருடர்களைக் காட்டிக் கொடுத்த சிசிடிவி காட்சிகள்

சென்னையில் 13 நாள் தொடர் போராட்டம்: தூய்மை பணியாளர்கள் கைது

கைது செய்யப்பட்ட தூய்மை பணியாளர்களை வேளச்சேரி, சைதாப்பேட்டை, குமரன் நகர், திருவான்மியூர் பகுதிகளில் உள்ள சமூதாய நலக்கூடத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

தூய்மை பணியாளர்கள் போராட்டம்: விஜய் வந்திருந்தால் கதையே வேற -நடிகர் தாடி பாலாஜி

விஜய் நல்ல சான்ஸை மிஸ் செய்துவிட்டாரெனத் தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் குறித்து நடிகர் தாடி பாலாஜி பேச்சு

பள்ளி மாணவன் மர்ம மரணம்: கலெக்டரிடம் மனு கொடுக்க சென்ற உறவினர்கள்..கைது செய்த காவல்துறை

உயிரிழந்த பள்ளி மாணவனின் உறவினர்களை போலீசார் தடுத்து நிறுத்திய காவலர்களுக்கும், உறவினர்களுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

சென்னை வந்த சரக்கு விமானத்தின் இன்ஜினில் புகை வந்ததால் பரபரப்பு

கோலாலம்பூரிலிருந்து சென்னைக்கு வந்த சரக்கு விமானத்தில் இன்ஜினில் புகை வந்ததால் அதிகாரிகள் பதற்றம் அடைந்தனர்.

விருதாச்சலத்தில் காத்துக்கிடக்கும் விவசாயிகள்..மழையில் நனைந்து வீணாகும் நெல்மணிகள்

சுமார் 5000 நெல் மூட்டைகள் நனைந்தும், மறுமுளைப்புத்தன்மை ஏற்பட்டும், பூசனம் பிடித்தும் நெல் மணிகள் வீணாகி வருவதாக விவசாயிகள் கூறியுள்ளனர்.