சென்னை ஆழ்வார்பேட்டை டிடிகே சாலையில் செயல்பட்டு வந்த ருத்ரா டிரேடிங் என்ற நிறுவனம், பொதுமக்களிடம் அதிக வட்டி தருவதாக ஆசை வார்த்தை கூறி முதலீடுகளைத் திரட்டி, பின்னர் முதலீட்டுத் தொகையைத் திருப்பித் தராமல் ஏமாற்றியது. விசாரணையில், இந்த நிறுவனம் 323 முதலீட்டாளர்களிடம் இருந்து சுமார் ரூ.7 கோடி தொகையை மோசடி செய்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அந்நிறுவனத்தின் மீது மாநில பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
தலைமறைவான 2 பேர் கைது:
இந்த மோசடி வழக்கில் தொடர்புடைய முக்கிய நபர்களான சங்கர் மற்றும் சின்னமணிவேலன் ஆகியோர் தலைமறைவாக இருந்த நிலையில், அவர்களைப் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் திருநெல்வேலியில் வைத்து அதிரடியாகக் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட இருவரும் சென்னைக்குக் கொண்டு வரப்பட்டு, நேற்று புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த நிறுவனம் தொடர்பாக மேலும் யாராவது பாதிக்கப்பட்டிருந்தால், பொருளாதார குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் காரத்திகேயனை (8838479997) அணுகிப் புகார் தெரிவிக்கலாம் என்று பொருளாதார குற்றப்பிரிவு தலைமை அலுவலகம் தெரிவித்துள்ளது.
மேலும், பதிவு செய்யப்படாத நிதி நிறுவனங்களிலோ அல்லது அதிக வருமானத்தை உறுதியளிக்கும் திட்டங்களிலோ முதலீடு செய்து ஏமாற வேண்டாம் எனப் பொதுமக்களுக்குப் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.