K U M U D A M   N E W S

மோசடி

திருமண மோசடி புகார்: மாதம்பட்டி ரங்கராஜ் ஆஜராக அவகாசம்?

திருமண மோசடி புகாரில் மாதம்பட்டி ரங்கராஜ் விசாரணைக்கு ஆஜராக அவகாசம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது

ஆன்லைன் டிரேடிங்: மூதாட்டியிடம் ரூ.2.49 கோடி மோசடி...2 பேர் கைது

ஆன்லைன் டிரேடிங் மூலம் மூதாட்டியிடம் ரூ.2.49 கோடி மோசடி செய்த வழக்கில் 2 பேர் கைது

ரூ. 7 கோடி மோசடி செய்த நிதி நிறுவனம்: தலைமறைவான 2 பேர் கைது!

அதிக வட்டி தருவதாகக் கூறி பொதுமக்களிடம் முதலீடுகளைப் பெற்று சுமார் ரூ.7 கோடி மோசடி செய்த 'ருத்ரா டிரேடிங்' நிறுவனத்தின் தலைமறைவாக இருந்த இரண்டு முக்கிய நபர்களைப் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

ரூ. 60 கோடி தங்க நகை மோசடி: ART நிறுவன வழக்கில் மேலும் 4 பேர் கைது!

பாதி விலைத் தங்கம், வாரா வட்டி என கவர்ச்சிகரமான திட்டங்களால் பொதுமக்களிடம் ரூ. 60 கோடி மோசடி செய்த ART Jewellers நிறுவன வழக்கில், பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசார் மேலும் நான்கு பேரை கைது செய்துள்ளனர்

சூர்யா வீட்டு வேலைக்கார கும்பல் ரூ. 42 லட்சம் மோசடி: தலைமறைவாக இருந்த 4 பேர் கைது!

டிகர் சூர்யாவின் வீட்டில் வேலை செய்த சுலோச்சனா மற்றும் அவரது குடும்பத்தினர், குறைந்த விலையில் தங்கக் காயின் தருவதாகக் கூறி சூர்யாவின் தனி பாதுகாவலர் உட்பட பலரிடம் ரூ. 2 கோடிக்கு மேல் மோசடி செய்துள்ளனர். 3 மாத தேடுதல் வேட்டைக்குப் பிறகு அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

ரூ.200 கோடி வங்கி மோசடி வழக்கு-சென்னையில் 2வது நாளாக அமலாக்கத்துறை சோதனை

பிரபல பெண் அரசியல்வாதியின் பினாமி நிறுவனம் என தகவல் வெளியாகி உள்ளது

ஓய்வு பெற்ற அரசு அதிகாரியிடம் கோடிக்கணக்கில் மோசடி செய்த கும்பல்- இறந்தது போன்று வீடியோ எடுத்து நாடகமாடியது அம்பலம்

திருமண நாடகமாடி இரண்டரை கோடி மதிப்புள்ள சொத்துக்களை அபகரித்ததாக ஓய்வு பெற்ற அரசு அதிகாரி குற்றச்சாட்டு

ரூ.2,000 கோடி வங்கி மோசடி வழக்கு: அனில் அம்பானி தொடர்புடைய இடங்களில் சிபிஐ சோதனை

மும்பையில் அனில் அம்பானி தொடர்புடைய இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனைகள் நடத்தி வருகின்றனர்

எம்.பி.பி.எஸ் சீட் வாங்கி தருவதாக ரூ.31.88 லட்சம் மோசடி – தலைமறைவாக இருந்த பெண் கைது

தலைமறைவாக இருந்த ரம்யாவை மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோழிங்கநல்லூர் பகுதியில் வைத்துக் கைது செய்தனர்.

மருத்துவக் கல்லூரி சேர்க்கை: இடைத்தரகர்கள் மோசடிகுறித்து சென்னை காவல்துறை எச்சரிக்கை!

மருத்துவக்கல்லூரி சேர்க்கைக்கு இடைத்தரகர்களை நம்பி ஏமாற வேண்டாம் என்று சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

கோவை சி.எஸ்.ஐ சர்ச்சில் பரபரப்பு: வழக்கு தொடர்ந்த உதவி ஆயரை தடுத்த பவுன்சர்கள்!

கோவையில் சிஎஸ்ஐ சர்ச் பிஷப் மோசடி வழக்கில், வழக்கு தொடுத்த உதவி ஆயர் ஆலயத்திற்குள் நுழைய விடாமல் பவுன்சர்கள் தடுத்துள்ளனர் இதன் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன

கடன் பெற்று தருவதாக ரூ.23 லட்சம் மோசடி – நோட்டீஸ் வந்ததால் பாதிக்கப்பட்டவர் அதிர்ச்சி

தேனியில் 5 லட்சம் ரூபாய் கடன் பெற்று தருவதாகக் கூறி ஆதார், பான் கார்டு, செல்போன் ஒடிபி உள்ளிட்ட விவரங்களைப் பெற்று 23 லட்சம் ரூபாய் மோசடி

உள்ளாட்சி சாலைப் பணி நிதியில் ரூ.78 லட்சம் மோசடி: தனியார் நிறுவன ஊழியர் கைது!

கோவை மாவட்டத்தில் உள்ளாட்சி சாலைப் பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் ரூ. 78 லட்சம் மோசடி செய்த தனியார் நிறுவன ஊழியர் ராஜன் கைது செய்யப்பட்டார்.

அரசு வேலை வாங்கி தருவதாக மோசடி – முன்னாள் அமைச்சரின் மகள், மருமகன் கைது

முன்னாள் அமைச்சர் பரிதிஇளம்வழுதி மருமகன் மற்றும் மகளை கைது செய்து சிறையில் அடைத்தனர்

வேலை வாங்கி தருவதாக ரூ.1 லட்சம் மோசடி – பாஜக நிர்வாகி மீது வழக்கு

மதுரை விமான நிலையத்தில் வேலை வாங்கி தருவதாக ரூ.1 லட்சம் மோசடி செய்ததாக பாஜக மகளிர் அணி மாவட்ட செயலாளர் மீது வழக்கு

சொத்தை மீட்டுத் தருவதாகக் கூறி மோசடி.. வங்கி இஎம்ஐ மூலம் போலீஸிடம் சிக்கிய மோசடி மன்னன்!

அரசு தொடர்பான வேலைகளையும், சொத்தையும் மீட்டுத் தருவதாகக் கூறி 62.8 லட்சம் மோசடி செய்த மோசடி மன்னன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பணமோசடி வழக்கு: நடிகர் நிவின் பாலி விளக்கம்

தன் மீது பதியப்பட்டிருக்கும் மோசடி வழக்கு குறித்து நடிகர் நிவின் பாலி விளக்கமளித்துள்ளார்.

நடிகர் நிவின் பாலி மீது மோசடி வழக்குப்பதிவு – தயாரிப்பாளர் புகார்!

2022ல் வெளியான 'மஹாவீர்யார்' படத்தின் தயாரிப்பாளரின் புகாரில், நடிகர் நிவின் பாலி இயக்குநர் அப்ரித் ஷைன் மீது மோசடி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆலந்தூர் வங்கியில் நகை மோசடி: வாடிக்கையாளர்கள் முற்றுகை!

ஆலந்தூரில் உள்ள கத்தோலிக்க சிரியன் வங்கியில் வாடிக்கையாளர்களிடம் நகைகளை அதிக தொகைக்கு வைத்ததாகப் பல கோடி ரூபாய் மோசடி செய்த சம்பவம் தொடர்பாகத் தற்போது வங்கி வாடிக்கையாளர்கள் வங்கியை முற்றுகையிட்டுள்ளனர்.

18 இடங்களில் வருமானவரி சோதனை.. தமிழகத்தில் ₹550 கோடி வருமான வரி மோசடி!

தமிழகத்தில் வருமான வரி செலுத்துவோர் மிகப்பெரிய வருமான வரி மோசடி தொடர்பாக 18 இடங்களில் சோதனை நடைபெற்ற நிலையில், சுமார் 550 கோடிவரை போலியாக வருமானவரி முறைகேடு செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ரூ.40 கோடி மோசடி செய்த ஆந்திர இளைஞர்.. தூக்கிட்டு தற்கொலை!

புழல் பகுதியில் 40 கோடி மோசடியில் ஈடுபட்ட நபர் தான் சொந்தமாக வாங்கிய இடத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

ஆன்லைன் மோசடியால் விபரீதம்.. இளைஞரை கடத்திய சட்டக் கல்லூரி மாணவர்கள் கைது!

சென்னையில் இளைஞரை கடத்திய மூன்று சட்டக் கல்லூரி மாணவர்களை சென்னை எழும்பூர் போலீசார் கைது செய்துள்ளனர். ஆன்லைன் பண மோசடி விவகாரத்தில் பணத்தை வாங்குவதற்கு கடத்தி கட்ட பஞ்சாயத்து செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

நிகிதா மீது சென்னையில் மோசடி புகார்...போலீஸ் விசாரணை

அஜித்குமார் கொலை வழக்கில், நகை காணாமல் போனதாக புகார் கொடுத்த நிகிதா மீது சென்னையிலும் மோசடி புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

OLA நிறுவனத்தில் வேலை.. ரூ.22 லட்சம் மோசடி செய்த இருவர் கைது

OLA நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக போலி பணியாணை வழங்கி 56 நபரிடம் ரூ. 22 லட்சம் மோசடியில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

பணிக்கு வராமல் ரூ.28 லட்சம் சம்பளம்.. ம.பி. காவலரின் நூதன மோசடி!

மத்தியப் பிரதேசத்தில் ஒரு காவலர் 12 ஆண்டுகளாகப் பணிக்கு வராமல் ரூ.28 லட்சம் சம்பளம் பெற்ற நூதன மோசடி அம்பலமாகியுள்ளது.