தமிழ்நாடு

ரூ.40 கோடி மோசடி செய்த ஆந்திர இளைஞர்.. தூக்கிட்டு தற்கொலை!

புழல் பகுதியில் 40 கோடி மோசடியில் ஈடுபட்ட நபர் தான் சொந்தமாக வாங்கிய இடத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

ரூ.40 கோடி மோசடி செய்த ஆந்திர இளைஞர்.. தூக்கிட்டு தற்கொலை!
ரூ.40 கோடி மோசடி ஆந்திர இளைஞர்.. தூக்கிட்டு தற்கொலை!
ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் நவீன்(27). இவர் மாதவரம் ஜவஹர்லால் நேரு நெடுஞ்சாலையில் உள்ள திருமலா பால் நிறுவனத்தில் அக்கவுண்ஸ் பிரிவில் பணியாற்றி வந்தார்.

நிறுவனத்தின் வரவு செலவுகளை நவீன் கவனித்து வந்த நிலையில் நிறுவனத்தினர் ஆடிட்டிங் செய்தபோது ரூ.40 கோடி வரை மோசடி செய்யப்பட்டிருந்த்து தெரியவந்தது. மேலும் இதுதொடர்பாக நிறுவனத்தினர் நடத்திய விசாரணையில் நவீன் தான் ரூ.40 கோடி வரை மோசடி செய்தது தெரியவந்தது.

இதுகுறித்து நவீனிடம் நிறுவனத்தினர் கேட்டபோது பண மோசடி செய்ததை ஒப்பு கொண்ட அவர் ஓரிரு நாளில் பணத்தை ஒப்படைத்து விடுவதாக தெரிவித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் பணத்தை திருப்பி தர முடியாத நிலையில் புழல் கதிர்வேடு பிரிட்டாணியா நகர் பகுதியில் தான் வாங்கி வைத்திருந்த 3 கிரவுண்ட் சொந்த இடத்தில் போடப்பட்டிருந்த குடிசையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மேலும் தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பாக, ஆந்திராவில் உள்ள தனது சகோதரிகளுக்கு ஈமெயில் அனுப்பிவிட்டு தற்கொலை செய்துள்ளார்.

இ-மெயில் கிடைத்த உடன் சென்னை வந்து பார்த்த அவருடைய சகோதரிகள் நவீன் தூக்கில் தொங்கியதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக புழல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் நவீன் உடலை கைப்பற்றி அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். புழல் பகுதியில் தனியார் நிறுவனத்தில் ரூ.40 கோடி மோசடி செய்து ஊழியர் தூக்கிட்டு தற்கொலை செய்தி கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.