K U M U D A M   N E W S

ஓட்டுநர் உரிமம் இல்லாதவர்கள் இயக்குவது சட்டவிரோதம் - மோட்டார் வாகன விபத்து வழக்கு தீர்ப்பாயம் உத்தரவு

முறையான ஓட்டுனர் உரிமம் இல்லாதவர்கள் மூலம் 3 சக்கர பேட்டரி குப்பை வாகனத்தை இயக்குவது சட்டவிரோதம் எனத் தெரிவித்த மோட்டார் வாகன விபத்து வழக்கு தீர்ப்பாயம், குப்பை வாகனம் மோதி காயமடைந்த சிறுமிக்கு ஒரு லட்சத்து 78 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க, சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட்டுள்ளது.

தனியாருக்கு பாதுகாப்பு வழங்கும் நடைமுறையை தவிர்க்க வேண்டும் - தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

பொதுமக்கள் வரிப் பணத்தில் ஊதியம் பெறும் காவல்துறையினர் பொது மக்களுக்கு தான் சேவை செய்ய வேண்டுமே தவிர, தனியாருக்கு பாதுகாப்பு வழங்க பயன்படுத்தக் கூடாது என அறிவுறுத்திய சென்னை உயர் நீதிமன்றம், காவல்துறையினரை தனியாருக்கு பாதுகாப்பு வழங்க பயன்படுத்தும் நடைமுறையை தவிர்க்க வேண்டும் என்று தமிழக அரசுக்கும், டி.ஜி.பி.க்கும் உத்தரவிட்டுள்ளது

ரேசன் அரிசியை கடத்தி வந்து அரைத்து விற்பனை செய்த பெண் கைது..!

ரேசன் அரிசியை கடத்தி வந்து அரைத்து மாவு பாக்கெட்டுகளாக விற்பனை செய்து வந்த பெண்ணை போலீசார் கைது செய்து குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவிடம் ஒப்படைத்தனர். 

“டேய் வெட்டி போட்டுருவேன்..” எகிறிய காங். பிரமுகர் மகன் போக்குவரத்து ஊழியர்கள் படுகாயம்!

காங்கிரஸ் கட்சி பிரமுகரின் மகன், அரசுப் பேருந்தில் செய்த ரகளையால், போக்குவரத்து ஊழியர்கள் 4பேர் படுகாயம் அடைந்துள்ளனர். முன்பதிவு செய்யாமல் அரசுப் பேருந்தில் ஏறி சீட் கேட்டது தான் இந்த ரணகளத்துக்கு காரணம் என சொல்லப்படுகிறது. இதுகுறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு....

வரம்பு மீறிய வாத்தி மாணவர்களுக்கு பாலியல் தொல்லை போக்சோவில் கைதான ஆசிரியர்!

அரசுப் பள்ளி ஆசிரியர், மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ள இச்சம்பவம் குறித்து இப்போது பார்க்கலாம்....

கேரள அரசு கல்லூரியில் மாணவரை ரேகிங் செய்த 5 மாணவர்கள் கைது..!

கேரள மாநிலம் கோட்டயம்  அரசு செவிலியர் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களை ரேகிங் செய்த 5 முன்றாம் ஆண்டு மாணவர்கள்  கைது செய்யப்பட்டனர்

"பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான ஆசிரியர்கள் பட்டியல் தயார்" - அன்பில் மகேஷ்

"200க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் அடங்கிய பட்டியல் தயார்" என்றும், குற்றம்சாட்டப்பட்டவர்களை பணி நீக்கம் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர்

சென்னை கொருக்குப்பேட்டை ராஜன் ஆர்.கே.நகர் ஸ்டேஷனில் தீக்குளிப்பு..!

தமிழகத்தில் காவல்நிலைய வாசலில் நடக்கும் தீக்குளிப்பு சம்பவங்கள் தொடர்கதையாகி வருகிறது. இதுபோன்ற சம்பவங்களால் காவல்துறையினரே கதிகலங்கி போயிருக்கும் நிலையில், இதுகுறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்...

ஊருக்குள் புகுந்த மான்.. பொதுமக்கள் செய்த நெகிழ்ச்சி செயல்..!

பெரம்பலூர் அருகே ஊருக்குள் புகுந்த மானை பத்திரமாக மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்த பொதுமக்கள் செய்த செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Kundrathur Murugan Temple : கோயிலில் அடிப்படை இல்லை - பக்தர்கள் வாக்குவாதம்

Kundrathur Murugan Temple Thaipusam 2025 : தைப்பூசத்தையொட்டி குன்றத்தூர் முருகன் கோயிலில் திரண்ட பக்தர்கள்