K U M U D A M   N E W S

சென்னை

திடீரென கேட்ட 'டமால்' சத்தம்.. சென்னையே அலற நடந்த பயங்கரம்

சென்னை வடபழனி அருகே வீட்டில் மின் கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டது. இதனால் வீட்டில் உள்ள பொருட்கள் அனைத்தும் எரிந்து சேதமாகின. சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்புத்துறையினர் தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

ஜவுளிக்கடை உரிமையாளரை கொல்ல முயற்சி.. கைதான நபர் கொடுத்த அதிர்ச்சி வாக்குமூலம்

சென்னை வேளச்சேரியில் ஜவுளிக்கடை உரிமையாளரை கார் ஏற்றி கொல்ல முயன்றவரை போலீசார் கைது செய்தனர். தொழில் போட்டி காரணாமாக கொல்ல சதி செய்ததாக கைதான சிவகுமார் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

ஆடை விதிமீறல் அரசியல் சாசனத்திற்கு எதிரானது... உதயநிதிக்கு எதிராக மேலும் ஒரு மனு

முதலமைச்சர், துணை முதலமைச்சர்களுக்கு ஆடை  விதிகளை வகுக்க வேண்டும் உத்தரவிட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

உஷார் மக்களே.. 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

திருவொற்றியூர் பள்ளியில் மீண்டும் வாயு கசிவு.. மாணவிகள் மயக்கம்... முற்றுகையிட்ட பெற்றோர்கள்

சென்னை திருவொற்றியூரில் தனியார் பள்ளியில் வாயுக் கசிவு ஏற்பட்டு மாணவிகள் மயங்கி விழுந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதைத்தொடர்ந்து பள்ளியில் பெற்றோர் வாக்குவாதம் செய்ததை அடுத்து பள்ளிக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

சென்னைக்கு படையெடுத்த மக்கள் - நிரம்பி வழியும் கிளாம்பாக்கம்

கிளாம்பாக்கம், தாம்பரம் பஸ் நிலையங்களில் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.

உஷார் மக்களே...வெளுத்து வாங்க போகும் கனமழை

சென்னை, வேலூர், ராணிப்பேட்டைஉள்பட 17 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை கனமழை பெய்யும்

சென்னையில் பல்வேறு இடங்களில் காலையிலேயே மழை 

சென்னையில் இன்று காலை முதலே கோயம்பேடு, நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், வளசரவாக்கம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பரவலாக லேசானது முதல் மிதமான மழை கொட்டித்தீர்த்ததால் சாலைகளில் மழை நீர் தேங்கியது. 

சிறுமி கருப்பாக இருந்தாலும் கலையாக இருந்தார்.. கணவர் மீது சந்தேகம்.. மனைவி வாக்குமூலம்

15 வயது சிறுமி சித்ரவதை செய்து அடித்து கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், கைதான 6 பேரும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

15 வயது சிறுமியை பாவமே பார்க்காத 6 பேர்.. சைக்கோ தனத்தை மிஞ்சிய கொடூரம்.. | Kumudam News

15 வயது சிறுமி சித்ரவதை செய்து அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கைதான 6 பேரும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைப்பு.

சிறுமி கருப்பாக இருந்தாலும் கலையாக இருந்தார்.. கணவர் மீது சந்தேகம்.. மனைவி வாக்குமூலம்

15 வயது சிறுமி சித்ரவதை செய்து அடித்து கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், கைதான 6 பேரும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

#BREAKING : Chennai Airport: சென்னை விமான நிலையத்திற்கு.."அய்யயோ மீண்டும் மீண்டுமா?" | Kumudam News

சென்னை விமான நிலையத்திற்கு மர்மநபர்கள் இமெயில் மூலம் விடுத்த வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு.

நடுரோட்டில் திடீரென கேட்ட பயங்கர சத்தம் - ஓடிச்சென்று பார்த்தவர்களுக்கு பேரதிர்ச்சி!! | Kumudam News

ஓட்டுநருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டதால் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து சாலை தடுப்பில் மோதி விபத்து.

சென்னைக்கு வருபவர்களே "Wait" - நகர முடியாமல் திணறும் வாகன ஓட்டிகள்

தீபாவளி முடிந்து மக்கள் சென்னை திரும்புவதால் மதுராந்தகம் அருகே உள்ள சுங்கச்சாவடியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

சென்னை விமான நிலையத்தை அலற விட்ட அமெரிக்க பயணி... தடை செய்யப்பட்ட பொருளை அசால்ட்டாக எடுத்து வந்ததால் பரபரப்பு!

இந்தியாவில் தடை செய்யப்பட்ட சேட்டிலைட் போனுடன் சிங்கப்பூருக்கு விமானத்தில் பயணம் செய்ய முயன்ற அமெரிக்க நாட்டைச் சேர்ந்த பயணியை விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் மடக்கிப் பிடித்தனர்.

‘போராட்டத்தில் ஈடுபடக் கூடாது’ - என்.எல்.சி. தொழிலாளர்கள் சங்கத்துக்கு உத்தரவு

என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபடக்கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மக்களே அலர்ட்.. நாளை 19 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

தமிழகத்தில் நாளை கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, தேனி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும்... விஜய்யின் அடுத்த பிளான்... நாளை அவசர ஆலோசனை

சென்னை பனையூரில் உள்ள தவெக கட்சி தலைமை அலுவலகத்தில் அக்கட்சி தலைவர் விஜய் தலைமையில் நாளை நிர்வாகிகளுடன் ஆலோசனை நடைபெற உள்ளது. 234 தொகுதிகளிலும் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியான நிலையில் இந்த ஆலோசனை நடைபெற உள்ளது.

வீட்டு வேலை செய்த சிறுமி உயிரிழந்த விவகாரம்... போலீசார் அதிரடி நடவடிக்கை

சென்னை அமைந்தகரையில் வீட்டில் வேலை செய்த 16 வயது சிறுமி அடித்து கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் வீட்டின் உரிமையாளர் மற்றும் அவரது மனைவி கைது செய்யப்பட்ட நிலையில், தலைமறைவாக இருந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உடலில் ரத்தக் காயங்கள்.. பாத்ரூமில் இறந்து கிடந்த சிறுமி.. வீட்டு உரிமையாளர் கைது

16 வயது சிறுமி அடித்து கொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக, வீட்டின் உரிமையாளர் முகமது நவாஸ், அவரது மனைவி உட்பட 6 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

"மிக கனமழை" பயமுறுத்தும் கடல்.. "மிஸ் ஆகாது கண்டிப்பா நடக்கும்.."

சென்னை, திருவள்ளூர் உள்பட 7 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்திற்கு மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கை கோர்க்கும் Vijay - Thiruma ? - அரசியல் களமே ஆடிப்போக வந்த தகவல்

சென்னையில் டிசம்பர் 6ம் தேதி நடைபெற உள்ள புத்தக வெளியீட்டு விழாவில் தவெக தலைவர் விஜய், விசிக தலைவர் திருமாவளவன் இருவரும் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

ஒரே நாளில் சேர்ந்த 156 மெட்ரிக் டன் குப்பைகள்..சென்னை மாநகராட்சியின் துரித நடவடிக்கை!

சென்னையில் தீபாவளி பண்டிகையையொட்டி பட்டாசு வெடித்த 156 மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

அதிரடியாக குறைந்த தங்கம் விலை... இந்த சான்ஸ மிஸ் பண்ணிடாதீங்க..

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 குறைந்து ரூ.59,080க்கு விற்பனையாகிறது. கிராமுக்கு ரூ.70 குறைந்து ரூ.7,385க்கு விற்பனையாகிறது.

தீபாவளி கொண்டாட்டம் – குப்பை கூளமான சென்னை

சென்னையில் தீபாவளியையொட்டி தெருக்களில் குவிந்த குப்பைகளை அகற்றும் பணி மும்முரம்