தாறுமாறான அடி.. கும்பலாக சேர்ந்து கை விட்ட நண்பர்கள்.. கதி கலங்கிய மாணவன் - பகீர் வீடியோ
மாணவர் ஒருவரை அதே கல்லூரி மாணவர்கள் நடுரோட்டில் சரமாரியாக தாக்கும் வீடியோ வெளியானது.
மாணவர் ஒருவரை அதே கல்லூரி மாணவர்கள் நடுரோட்டில் சரமாரியாக தாக்கும் வீடியோ வெளியானது.
வழக்கு விசாரணையின்போது மூத்த வழக்கறிஞர் பி.வில்சனிடம் கண்ணியக் குறைவாக நடந்து கொண்டதாக நீதிபதி ஆர்.சுப்பிரமணியனுக்கு எதிராக வழக்கறிஞர் சங்கங்கள் சார்பில் தலைமை நீதிபதியிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் இருந்து ராமேஸ்வரம் சென்ற விரைவு ரயிலின் எஞ்ஜினில் தீ விபத்து.
சென்னை நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் சாலையில் உள்ள பிரபல ஹோட்டலுக்கு வெடிகுண்டு மிரட்டல்.
10 Flights Cancelled in Chennai Airport : சென்னை விமான நிலையத்தில் இன்று போதிய பயணிகள் இல்லாத காரணத்தால் இலங்கை, பெங்களூரு, மும்பை, மதுரை, அந்தமான் உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் மொத்தம் 10 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை தண்டையார்பேட்டையை சேர்ந்த ரஹீம், தடை செய்யப்பட்ட அமைப்பான ஹிஸ்புத் தஹீரிக்கும் ஆதரவு திரட்டி ஆட்சேர்த்ததாக கைது.
சென்னை மெட்ரோ 2-ம் கட்ட திட்டத்திற்கு நிதி ஒதுக்க ஒப்புதல் அளித்த பிரதமர் மோடிக்கு நன்றி - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னை மெட்ரோ 2-ம் கட்ட திட்டத்திற்கு ரூ.63,246 கோடி நிதியை ஒதுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்
சென்னையில் கொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 4892 பக்கங்களை கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குற்றப்பத்திரிகைக்குள் 750 வகையான ஆவணங்கள் இடம் பெற்றுள்ளது. ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவம் நடந்து 90 நாட்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
வியப்பூட்டும் வியாசர்பாடி சுடுகாடு.. படையெடுக்கும் மக்கள் - ஒரு Live Visit
சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் உள்ள கழிப்பறைகளில் தண்ணீர் வசதி இல்லாததால் சிரமத்திற்கு ஆளாகும் நோயாளிகள். கழிப்பறைகள் முறையாக பராமரிக்கப்படவில்லை என்று நோயாளிகள், பொதுமக்கள் குற்றச்சாட்டு. தண்ணீர் வசதி இல்லாதது குறித்து கேள்வி எழுப்பினால் மருத்துவ பணியாளர்கள் அலட்சியமாக பதில் சொல்வதாக குற்றச்சாட்டு
சென்னை அருகே போரூர் பகுதியில் நாடோடி இன பெண் மீது கொடூர தாக்குதல் - சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பு
கிருஷ்ணகிரியில் போலி என்.சி.சி. முகாம் நடத்தி பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட வழக்கு. அக்டோபர் 15-ம் தேதி இடைக்கால குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தகவல்.
சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல். கோவை, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி உள்ளிட்ட 14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
பெரியார் சிலையை உடைப்போம் என பேசியதாக இந்து முன்னணி நிர்வாகியும், ஸ்டண்ட் மாஸ்டருமான கனல் கண்ணனுக்கு எதிரான வழக்கு. கனல் கண்ணனுக்கு எதிரான வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
அரசுப்பள்ளி நிகழ்ச்சியில் பார்வை மாற்றுத்திறனாளியை அவதூறாக பேசியதாக வழக்கு. வழக்கில் கைது செய்யப்பட்ட மகாவிஷ்ணுவுக்கு ஜாமின் வழங்கி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு
ஈஷா யோகா மைய நிறுவனத்துக்கு எதிரான சோதனைக்கு தடை விதித்தது உச்சநீதிமன்றம். சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள ஈஷா யோகா மையம் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்திற்கு மாற்றம்
பெரியார் சிலையை உடைப்பது குறித்து பேசியதாக, இந்து முன்னணி நிர்வாகியும் சினிமா ஸ்டண்ட் மாஸ்டருமான கனல் கண்ணன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது நீதிமன்றம்.
சைதாப்பேட்டையில் எக்ஸ்பிரஸ் ரயிலில் காலை நீட்டி பயணம் செய்த வாலிபர், கால் துண்டாகி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கவர்னர் மரியாதை செலுத்திய பிறகு தான் நீங்கள் மாலை அணிவிக்கலாம் என காவல்துறை தடுத்ததால் தான் புறப்பட்டு சென்றோம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார்.
ஓய்வு பெற்ற பொறியாளரிடம் FedEx கொரியர் மூலம் 4.67 கோடி ரூபாய் சைபர் கிரைம் மோசடி செய்த சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரசு சட்ட கல்லூரிகளில் நிரந்தர இணை பேராசிரியர், உதவி பேராசிரியர்களை நியமிக்க முடியாவிட்டால், கல்லூரிகளை மூடிவிடலாம் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
நிரந்தர இணை பேராசிரியர், உதவி பேராசிரியர்களை நியமிக்க முடியவில்லை என்றால் அரசு சட்டக் கல்லூரிகளை மூடிவிடலாம் என சென்னை உயர்நீதிமன்றம் காட்டம். அரசு சட்டக் கல்லூரிகளில் காலியாக உள்ள இணைப் பேராசிரியர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்ப கோரி வசந்தகுமார் என்பவர் தொடர்ந்த வழக்கு
சென்னை சென்னகேசவ பெருமாள் கோயிலில் இருந்து சிறப்பு பூஜைகளுடன் திருப்பதி திருக்குடை ஊர்வலம் தொடங்கியது.
புகார் தெரிவிக்கச் சென்ற தொழிலதிபரிடம் ரூ.20,000 பணம் பெற்றது குறித்து, தி.நகர் துணை ஆணையர் உத்தரவின் பேரில் வடபழனி உதவி ஆணையர் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.