K U M U D A M   N E W S
Promotional Banner

சென்னை

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஸ்ரீராம் ராஜேந்திரன் நியமனம்...

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஸ்ரீராம் ராஜேந்திரன் நியமனம். கொலிஜியத்தின் பரிந்துரையை ஏற்று குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு உத்தரவு.

Ind VS Ban: வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட்... வெற்றியின் விளிம்பில் இந்திய அணி!

வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது.

கைதிகளின் பாதுகாப்பை உறுதிசெய்ய குழு... பதில்தர அரசுக்கு ஆணை

சிறைகளில் கைதிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய குழு அமைக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இன்று அந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், தமிழக அரசு, மாநில மனித உரிமை ஆணையம், சிறைத் துறை அதிகாரிகள் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

4 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப் போகும் கனமழை... சென்னையில் எப்படி?

Heavy Rain in Tamil Nadu : 23ம் தேதி மற்றும் 24ம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை... ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.600 அதிகரித்து ரூ.55,680-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு 50 காசுகள் உயர்ந்து ரூ.98.00-க்கு விற்பனை செய்யப்படுகிறது

நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு

நடிகை பார்வதி நாயர் மீது சென்னை தேனாம்பேட்டை போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். உதவியாளரை தாக்கியதாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

IND vs BAN Test : கொட்டும் மழையிலும் டிக்கெட் வாங்க குவிந்த ரசிகர்கள்

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் டிக்கெட் வாங்குவதற்கு ரசிகர்கள் குவிந்தனர்.

குளுகுளு ஊட்டியாக மாறிய சென்னை.. கொட்டித் தீர்க்கும் மழை.. மக்கள் மகிழ்ச்சி!

கடும் வெயிலில் இருந்து எப்போது விடுதலை கிடைக்கும்? என மக்கள் ஏங்கித் தவித்து வந்தனர். இந்நிலையில், சென்னை மக்களின் ஏக்கத்தை போக்கும்விதமாக நகரின் பல்வேறு இடங்களில் இன்று அதிகாலை 3.00 மணி முதல் மழை கொட்டியது.

Ind VS Ban: வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட்... இந்திய அணி முன்னிலை... பும்ரா புதிய சாதனை!

வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி முன்னிலை பெற்றுள்ளதோடு, இரண்டாவது இன்னிங்ஸை நிதானமாக தொடங்கியுள்ளது.

தமிழ்நாட்டில் அனல் பறக்கப்போகுதாம்... வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் மக்களே!

தமிழகத்தில் அடுத்த 2 தினங்களுக்கு (20.09.2024 மற்றும் 21.09.2024) அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2°- 4° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

சூட்கேசில் பெண் உடல்.. தரதரவென இழுத்து சென்ற கொடூரன் - அதிர்ச்சி காட்சி வெளியீடு

சென்னை துரைப்பாக்கம் அருகே இளம்பெண் கொலை செய்யப்பட்டு உடலை சூட்கேசில் வைத்து இழுத்து செல்லும் சிசிடிவி வெளியானது.

நதிகள் சீரமைப்பு.. முதலமைச்சர் ஆலோசனை

சென்னையில் உள்ள நதிகள் சீரமைப்பு தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை செயலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்

ஊராட்சி மன்ற தலைவர் தேர்தல் ரத்து.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி

திருப்பத்தூர் மாவட்டம் நாயக்கனேரி ஊராட்சி தலைவர் பதவியை பட்டியலின பெண்ணுக்கு ஒதுக்கிய அரசாணையை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. 

BREAKING | சூட்கேஸில் பெண்ணின் உடல்: கொலையாளிக்கு கோர்ட் போட்ட உத்தரவு

சென்னை துரைப்பாக்கத்தில் பெண்ணை கொலை செய்த மணிகண்டன் என்பவருக்கு நீதிமன்றக் காவல். மணிகண்டனை அக்டோபர் 1ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் புழல் சிறையில் அடைக்க ஆலந்தூர் நீதிமன்ற நீதிபதி உத்தரவு

அடுத்த 2 நாட்களுக்கு வெயில் கொளுத்தப் போகுது... வானிலை ஆய்வு மையம் தகவல்!

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று (செப். 19) இரவுக்குள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

கல்வராயன் மலைப்பகுதி விவகாரம்... தலைமைச் செயலாளருக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை

கல்வராயன் மலைப்பகுதி விவகாரத்தில் தலைமைச் செயலாளர் தனிப்பட்ட கவனம் செலுத்த வேண்டும். உத்தரவை செயல்படுத்தாவிட்டால் தலைமைச் செயலாளர் நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சொந்த மண்ணில் கெத்து காட்டிய அஸ்வின்... சரிவிலிருந்து மீண்ட இந்திய அணி

சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய வீரர் அஸ்வின் சதம் விளாசினார்.

சென்னையில் அதிகாலையில் ஷாக்.. சூட்கேசில் கிடந்த பெண் சடலம்.. முக்கிய குற்றவாளி கைது..

சென்னை துரைப்பாக்கத்தில் சூட்கேஸில் துண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில் இளம் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து உடலை கைப்பற்றி போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் இதுதொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்

சென்னையில் பிரபல திரையரங்கிற்கு சீல்.. மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி

மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய ரூ.6செ லட்சம் வரியை செலுத்தாதல் சென்னை நங்கநல்லூர் பகுதியில் இயங்கி வரும் வெற்றிவேல் திரையரங்கிற்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்

BREAKING | சென்னையில் கொடூரம்.. துண்டு துண்டாக சூட்கேஸில் கிடந்த பெண்ணின் சடலம்..

சென்னை துரைப்பாக்கம் அடுத்த மேட்டுக்குப்பத்தில் பெண்ணை துண்டு துண்டாக வெட்டிக் கொலை. கொலை செய்யப்பட்ட பெண்ணின் உடலை சூட்கேஸில் அடைத்து வீசிய நபர் குறித்து போலீசார் விசாரணை

தாக்கப்படும் தமிழக மீனவர்கள்.. நிரந்தர தீர்வு காண வேண்டும் - பிரேமலதா விஜயகாந்த்

இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை கைது செய்து கோடிக்கணக்கில் அபராதம் விதிப்பது கண்டிக்கத்தக்கது என தேமுதிக பொது செயலாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார்.சென்னையை அடுத்த அம்பத்தூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு கூறினார்.

காக்கா தோப்பு பாலாஜி கூட்டாளி கைது.. கஞ்சா கடத்திய வழக்கில் போலீஸார் நடவடிக்கை

என்கவுன்டர் செய்யப்பட்ட காக்கா தோப்பு பாலாஜி உடன் சென்ற சத்தியமூர்த்தி கைது செய்யப்பட்ட நிலையில், அவர் மீது கஞ்சா கடத்திய வழக்கில் போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளது.

IND vs BAN Test Match : சேப்பாக்கத்தில் டிக்கெட் வாங்க குவிந்த ரசிகர்கள்

இந்தியா, வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறுகிறது. இன்று முதல் வரும் 23 ஆம் தேதி வரை தினசரி டிக்கெட் விற்பனை காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெறும்

#JUSTIN : சிறையில் உயிரை மாய்த்துக்கொள்ள முயன்ற கைதி

சென்னை அடுத்த பூந்தமல்லி கிளைச் சிறையில் எறும்பு மருந்து குடித்து ஷாகிர் என்ற கைதி தற்கொலை முயற்சி. சுய நினைவை இழந்த ஷாகிரை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதித்த சிறைக் காவலர்கள்

#JUSTIN : கார் சர்வீஸ் சென்டரில் பயங்கர தீ விபத்து

சென்னை ராமாபுரத்தில் உள்ள கார் சர்வீஸ் சென்டரில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு. கார் ஒன்று தீப்பற்றி எரிந்து வரும் நிலையில், தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு துறையினர் தீவிரம்