K U M U D A M   N E W S
Promotional Banner

இலங்கைக் கடற்படையினர் அட்டூழியம்... உண்ணாவிரதப் போராட்டத்தில் தமிழக மீனவர் சங்கம்!

Tamil Nadu Fishermen Hunger Strike : சிறையில் அடைக்கப்பட்ட அனைத்து தமிழக மீனவர்ககளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி நேற்று (அக். 3) அனைத்து விசைப்படகு மீனவர்கள் சார்பாக ஒருநாள் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

14 மருத்துவ கல்லூரிகளுக்கு முதல்வர்கள் நியமனம்

தமிழ்நாட்டில் 14 மருத்துவ கல்லூரிகளுக்கு முதல்வர்களை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

மீனவர்கள் பிரச்னை.. பாமக போராட்டம் அறிவிப்பு

இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதை கண்டித்து சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்டு வரும் 8ம் தேதி பாமக தலைமையில் போராட்டம் நடைபெறும் என அக்கட்சி தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.

துணை முதல்வர் உதயநிதியின் செயலாளர் நியமனம்

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் செயலாளராக ஐஏஎஸ் அதிகாரி பிரதீப் யாதவ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

அரசின் உத்தரவுக்கு அதிரடியாக தடை விதித்த உயர்நீதிமன்றம்

கூட்டுறவு வீட்டு வசதி சங்க வீட்டு மனைகளுக்கு ஒப்புதல் தந்ததில் எழுந்த முறைகேடு புகார் தொடர்பான லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது

தவெக மாநாட்டின் பூமி பூஜை..எந்த தேதியில் தெரியுமா?

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வி.சாலையில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வரும் 27ம் தேதி முதல் மாநாடு நடைபெற உள்ளது. இதையொட்டி வரும் 4ம் தேதி பூமி பூஜை நடைபெறும் என தவெக அறிவித்துள்ளது

ஊதியம் நிறுத்தம்.. ஆசிரியர்கள் அதிர்ச்சி

சமக்ர சிக்க்ஷா அபியான் திட்டத்தில் பணியாற்றக்கூடிய ஐஏஎஸ் அதிகாரி உட்பட 3000த்துக்கு மேற்பட்டோருக்கு ஊதியம் வழங்கப்படவில்லை. இதனால் ஆசிரியர்கள் அதிர்ச்சி

கழிவுநீர் கால்வாயில் விழுந்து இளைஞர் பலி.. தமிழக அரசே பொறுப்பேற்க வேண்டும் - இபிஎஸ் வலியுறுத்தல்

சென்னை அசோக் நகரில் கழிவுநீர் கால்வாயில் விழுந்து ஐயப்பன் என்பவர் உயிரிழந்ததற்கு அரசே பொறுப்பேற்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

ஒரு உயிர் கூட போகக் கூடாது... அதிகாரிகளுக்கு முதலமைச்சர் எச்சரிக்கை!

வடகிழக்கு பருவமழை நெருங்குவதையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். அப்போது, மழையால் ஒரு உயிரிழப்பு கூட ஏற்பட்டு விடக்கூடாது என்ற நோக்கத்தில் செய்பட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். 

Bussy Anand : ”அந்த இடமே எங்களோடது தான்” புஸ்ஸி ஆனந்திடம் வாக்குவாதம் செய்த பெண்

TVK General Secretary Bussy Anand : தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்திடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்ட பெண்ணால் பரபரப்பு

சாட்சிகளை கலைக்க மாட்டாரா செந்தில் பாலாஜி? அமைச்சர் இப்படி செய்யலாமா? - ராமதாஸ்

பிணையில் வெளிவந்து அமைச்சராக அதிகாரம் செலுத்தும் போது, செந்தில் பாலாஜி சாட்சிகளை கலைக்க மாட்டாரா? என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

அமைச்சரவையில் செந்தில் பாலாஜிக்கு எந்த துறை?.. வெளியான முக்கிய தகவல்

நிபந்தனை ஜாமினில் வெளிவந்த செந்தில் பாலாஜிக்கு, அமைச்சரவையில் எந்த துறை ஒதுக்கப்படும் புதிய தகவல் வெளியாகியுள்ளது.

மீண்டும் அரியாசணத்தில் செந்தில் பாலாஜி.. அதிரடி மாற்றத்தால் அதிர்ந்த அமைச்சரவை

சிறை வாசம் முடிந்து நிபந்தனை ஜாமினில் வெளிவந்த செந்தில் பாலாஜிக்கு, தற்போது அமைச்சரவையில் இடம் கிடைக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இலங்கை கடற்படை அட்டூழியம் – கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள்

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது.

2 நகரங்களில் மினி டைடல் பூங்கா... தமிழக அரசின் முக்கிய அறிவிப்பு

தமிழகத்தின் கரூர், திருவண்ணாமலை ஆகிய 2 நகரங்களில் மினி டைடல் பூங்கா அமைக்க முதல் கட்ட பணிகளை தமிழ்நாடு அரசு தொடங்கியுள்ளது. 

அமைச்சரவையில் மாற்றம்... அறிவிப்பு எப்போது..?

தமிழக அமைச்சரவையில் மாற்றங்கள் இன்று அல்லது நாளை அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

'அச்சுறுத்தலான பள்ளிக் கட்டடங்களை அகற்றுக’ - அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு

ராமநாதபுரம் - திருவாடனை தாலுகா தொண்டியில் உள்ள தொடக்கப் பள்ளியை இடித்து அப்புறப்படுத்தக்கோரி உச்சநீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட பள்ளி கட்டிடத்தை 12 வாரத்திற்குள் இடித்து அப்புறப்படுத்தி புதிய கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிமன்றம் அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

#BREAKING || மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்

"பஹ்ரைன் கடலோர காவல் படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" - வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

கல்லூரிகளிலும் மாணவிகளுக்கான தனி ஓய்வறை... அரசுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு கலை, அறிவியல் கல்லூரிகளிலும் மாணவிகளுக்கான தனி ஓய்வறை அமைப்பதற்கான 8 கோடியே 55 லட்சம் ரூபாயை மூன்று வாரங்களில் ஒதுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தவெக மாநாடு குறித்து ஆலோசனை.. முக்கிய நிர்வாகிகள் பங்கேற்பு

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு அக்டோபர் 27ம் தேதி விக்கிரவாண்டியில் நடைபெற உள்ளது. இந்நிலையில் அதுதொடர்பாக கட்சி நிர்வாகிகளுடன் ஆனந்த் பேச்சுவார்த்தையில்  ஈடுபட உள்ளார்.

Savukku Shankar Case : சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டம் ரத்து

Savukku Shankar Case Update : யூடியூபர் சவுக்கு சங்கருக்கு எதிரான குண்டாஸ் சட்டத்தை ரத்து செய்யக்கோரி அவரது தாயார் கமலா தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. சவுக்கு சங்கர் மீதான குண்டாஸ் சட்டம் திரும்ப பெற்றுள்ளதாக தமிழக அரசு தகவல் தெரிவித்தது. அந்த விளக்கத்தை ஏற்று  குண்டாசை ரத்து செய்த்தோடு, வழக்கை முடித்து வைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது

தவெக மாநாட்டுக்கு அனுமதி மறுப்பா..? வெளியான தகவல்.. எஸ்.பி. விளக்கம்

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு அக்டோபர் 27ம் தேதி விக்கிரவாண்டியில் நடைபெறுகிறது. இந்நிலையில் மாநாட்டுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியான நிலையில் விழுப்புரம் எஸ்.பி விளக்கமளித்துள்ளார். 

தவெக அப்டேட்...நாளை வெளியாகும் முக்கிய அறிவிப்பு

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு அக்டோபர் 27ம் தேதி விக்கிரவாண்டியில் நடைபெற உள்ளது. இந்நிலையில் இதுதொடர்பாக     மாவட்ட செயலாளர்கள், பொறுப்பாளர்களுடன் தவெக தலைவர் விஜய் நாளை ஆலோசனை நடத்த உள்ளார். 

பாராலிம்பிக்கில் பதக்கம் வென்ற வீரர், வீராங்கனைகளுக்கு ஊக்கத்தொகை வழங்கிய முதலமைச்சர்

பாராலிம்பிக்கில் பதக்கம் வென்ற வீரர்களை நேரில் சந்தித்து அவர்களுக்கு ஊக்கத்தொகையாக ரூ.5 கோடிக்கான காசோலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

No கடிதம் Only மெயில்.....டிஜிட்டலுக்கு மாறும் த.நா அரசு

தலைமைச் செயலகத்துக்கு வரும் கோப்புகளை டிஜிட்டல் மயமாக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் தலைமைச் செயலகத்துக்கு பல்வேறு மாவட்டங்கள் மற்றும் அரசு துறைகளில் இருந்து பெறும் தபால்கள் மற்றும் கடிதங்களுக்கு இனி டிஜிட்டல் முறையில் பதில் அளிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.