K U M U D A M   N E W S
Promotional Banner

மாணவர்

ஐயா...ஜாலி... எங்க ஊருக்குப் பஸ் வந்துடுச்சு.. 13 வருடக் காத்திருப்பைக் கொண்டாடிய பொதுமக்கள்!

குடியாத்தம் அருகே 13 வருடங்கள் கழித்து, தங்கள் கிராமத்திற்கு வந்த பேருந்தைக் குத்தாட்டம் போட்டு பேருந்தினை உற்சாகமாக மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்

பள்ளி மாணவனுக்கு மது கொடுத்து பாலியல் சீண்டல்…இளைஞர் கைது

சூலூர் அருகே பள்ளி மாணவனுக்கு மது கொடுத்து பாலியல் சீண்டல் அளித்து கொடூரமாக தாக்கிய இளைஞர் ஒருவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆன்லைன் மோசடியால் விபரீதம்.. இளைஞரை கடத்திய சட்டக் கல்லூரி மாணவர்கள் கைது!

சென்னையில் இளைஞரை கடத்திய மூன்று சட்டக் கல்லூரி மாணவர்களை சென்னை எழும்பூர் போலீசார் கைது செய்துள்ளனர். ஆன்லைன் பண மோசடி விவகாரத்தில் பணத்தை வாங்குவதற்கு கடத்தி கட்ட பஞ்சாயத்து செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

கோட்சே வழியில் போகாதீங்க.. மாணவர்களுக்கு முதல்வர் கொடுத்த அட்வைஸ்..!

“மாணவர்கள் ஒருபோதும் கோட்சே கூட்டத்தின் வழியே செல்லக்கூடாது” என முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் 3 மாணவர்கள் பலி..விஜய் இரங்கல்

விபத்து நடைபெற்ற இடத்தில் பொதுமக்கள் பாதுகாப்பாக பயணிக்கும் வகையில் தேவையான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என தவெக தலைவர் விஜய் வலியுறுத்தியுள்ளார்.

இன்டெர்லாக் செய்யப்படாத ரயில்வே கேட்டை கடக்க முயன்ற போது விபத்து - ரயில்வே நிர்வாகம்

பள்ளி வேன் மீது, சிதம்பரம் நோக்கி சென்ற ரயில் மோதி விபத்துக்குள்ளானதில், 2 மாணவர்கள் உயிரிழந்த விவகாரத்தில், வேன் ஓட்டுநர் தான் விபத்துக்கு காரணம் என்றும், வேகமாக இயக்கியதாகவும், ரயில்வே தண்டவாளத்திற்குள் நுழைந்ததாகவும் ரயில்வே தரப்பில் முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகிவுள்ளது.

நாங்கள் குடிமக்கள் இல்லையா? .. ஜாதி சான்றிதழ் கேட்டு தரையில் அமர்ந்து பழங்குடியின தர்ணா போராட்டம்!

பல வருடங்களாக பழங்குடியின மாணவ, மாணவிகளுக்கு ஜாதி சான்றிதழ் வழங்காதால் மாணவ மாணவிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளதாக கூறி நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கோயிலில் குத்தாட்டம் ஆடிய அர்ச்சகர்கள்.. தமிழ்நாடு பயிற்சி பள்ளியில் படிக்கவில்லை மாணவர் சங்கம்!

ஸ்ரீவில்லிபுதூர் கோயிலில் குத்தாட்டம் போட்டவர்கள் தமிழ்நாடு அர்ச்சகர் பயிற்சி பள்ளியில் படிக்கவில்லை என அர்ச்சகர்கள் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கத்தினர், பொய்யான கருத்துக்களை பரப்பி வரக்கூடிய பாஜக, ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்டவர்கள் மீது டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

நீட் தேர்வு எழுதிய மாணவ, மாணவியர்களுக்கு மனநல ஆலோசனை வழங்கும் திட்டம் தொடக்கம்!

நீட் தேர்வு எழுதிய மாணவ, மாணவியர்களுக்கு மனநல ஆலோசனை வழங்கும் திட்டத்தை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.

கோவை மாணவி நீட் தேர்வு குளறுபடி குறித்து ஆலோசித்து முடிவு - அமைச்சர் மா.சுப்ரமணியன்

நீட் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்கும் திட்டம் நாளை சென்னையில் தொடங்கப்பட உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

11 ஆம் வகுப்பு மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: கைதான பள்ளி மாணவர்கள்

காஞ்சிபுரம் அருகே 11 ஆம் வகுப்பு மாணவியை 3 மாணவர்கள் உள்ளிட்ட 4 பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சாதனை படைத்த பழங்குடியின மாணவர்.. முதல்வருக்கு கோரிக்கை வைத்த தந்தை

தேசிய சட்டக் பல்கலைக்கழகத்தில் நுழைவுத் தேர்வு எழுதி வெற்றி பெற்ற முதல் பழங்குடியின மாணவர் பரத்தின் கல்வி செலவை அரசு ஏற்க வேண்டும் என அவரது தந்தை செல்வகுமார் முதலமைச்சருக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

மீண்டும் பள்ளிக்கு போகலாம்… விடுமுறைக்கு பின் மாணவர்களை உற்சாகமாக வரவேற்ற ஆசிரியர்கள்

கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் மீண்டும் திறப்பு பள்ளிக்கு வந்த மாணவிகளுக்கு ரோஜா பூக்கள் மற்றும் சாக்லேட், குங்குமம், சந்தனம் வழங்கி பள்ளி ஆசிரியர்கள் உற்சாகமாக வரவேற்றனர்.

மாணவ, மாணவிகளுக்கு தவெக சார்பில் கல்வி விருது விழா..!

10 மற்றும் 12ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வுகளில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு தெரிவிக்கும் விதமாக தவெக சார்பில் வரும் 30ம் தேதி கல்வி விருது விழா நடைபெறவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஜம்மு காஷ்மீரின் ரியாசியில் பள்ளிகள் மீண்டும் திறப்பு...உற்சாகமுடன் வந்த மாணவர்கள்

எல்லையில் அமைதித் திரும்பியுள்ளதால் ரியாசியில் உள்ள பள்ளிகள் இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

“தாக்குதலுக்கு பயந்து அவசரமாக வெளியேறினோம்” - பஞ்சாப்பில் இருந்து சென்னை திரும்பிய மாணவர்கள் பேட்டி

பஞ்சாபில் சிக்கி தவித்த 12 தமிழக மாணவர்கள் தமிழ்நாடு அரசு உதவியால் சென்னை திரும்பினர்

திமுக ஆட்சியில் அதல பாதாளத்தில் சட்டம் ஒழுங்கு – நயினார் நாகேந்திரன்

குளித்தலை அருகே 12ம் வகுப்பு மாணவன் குத்திக்கொலை செய்யப்பட்டதற்கு நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வு நிறைவு...மாணவர்கள் சொல்வது என்ன?

இயற்பியல் கேள்விகள் கடினமாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

Coimbatore Nehru College Student Attack | சீனியரை கொடூரமாக தாக்கிய ஜூனியர் மாணவர்கள்.. நடந்தது என்ன?

வீடியோ வெளியான நிலையில், 13 ஜூனியர் மாணவர்கள் சஸ்பெண்ட்

இறந்தும் உயிர் வாழும் கல்லூரி மாணவர்.. விபத்தில் மூளைசாவு.. உடல் உறுப்பு தானம்..!

இருசக்கர வாகன விபத்தில் மூளை சாவு அடைந்த கல்லூரி மாணவர் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்ட நிலையில், அவரது உடலுக்கு தாசில்தார் தலைமையில் அரசு மரியாதை செலுத்தப்பட்டது. 

சென்னையில் மாணவர் மீது சரமாரி தாக்குதல்- உள்ளிருப்பு போராட்டத்தில் இறங்கிய சக மாணவர்கள்

விடுதியில் மேற்பார்வை பணியை ஒதுக்கிய காரணத்திற்காக மருத்துவக்கல்லூரி டீனை கண்டித்து மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

SWIGGY ஆர்டரால் வந்த வினைஇஎஸ்ஐ மாணவர் – ஊழியர் இடையே மோதல்

சென்னை கே.கே.நகர் இஎஸ்ஐ மருத்துவமனையில் மாணவர் - ஊழியர் இடையே மோதல்

தவெக ஆர்ப்பாட்டம்... மாணவிகள் சீருடையில் கலந்து கொண்டதால் சர்ச்சை | TVK Vijay | Salem News | TASMAC

ஆத்தூரில் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

Students Attack Bus | அரசு பேருந்து கண்ணாடி உடைப்பு அரசுப்பள்ளி மாணவர்கள் அட்டூழியம் | Tiruvallur

படியில் தொங்கிய படி பயணித்த மாணவர்களை ஓட்டுநர் மற்றும் நடத்துநர் கண்டித்ததால் மாணவர்கள் வெறிச்செயல்

பெண் ஆசிரியரிடம் சில்மிஷம்... வாத்தியாருக்கு தர்ம அடி கொடுத்த மாணவர்கள் | Kumudam News

சென்னை, கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரி பேராசிரியர் மீது மாணவர்கள் ஒன்றுகூடி சரமாரி தாக்குதல்