K U M U D A M   N E W S

மு.க.ஸ்டாலின்

வங்கதேசத்தில் நெருக்கடி.. திருப்பூருக்கு வாய்ப்பு.. அண்ணாமலை வலியுறுத்தல்

ஜவுளித்துறையில், தமிழகத்துக்குக் கிடைக்கவுள்ள மாபெரும் தொழில் வாய்ப்புக்களைப் பயன்படுத்திக் கொள்ள, தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்.

Vairamuthu : வைரமுத்துக்கு 'முத்தமிழ்ப் பெருங்கவிஞர்' பட்டம்.. மதுரை தமிழ் இசைச் சங்கம் வழங்கியது!

Kavignar Vairamuthu Receives Muthamil Perarignar Award : ''எல்லாமொழியும் சமம் என்பது, உரிமை கோரத வரையில் தான். உரிமை கொண்டாடினால் அது குறித்து விவாதம் நடத்த தயாராக உள்ளேன். பொது மேடையில் 'நாவிதன்' என்ற சொற்களை தவிர்த்து சவரத் தொழிலாளி என்றுதான் பயன் படுத்த வேண்டும். சலவை தொழிலாளி, விவசாயிடம் தான் உழைக்கும் மக்களின் சங்கீதம் பிறக்கிறது'' என்று வைரமுத்து கூறியுள்ளார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறு.. பாஜக நிர்வாகியை தட்டித் தூக்கிய போலீஸ்!

முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசியதாக வியாசர்பாடியில் உள்ள வீட்டில் இருந்த கபிலனை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவரை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

CM Stalin : 'இனி விண்வெளியில் அரசு பள்ளி மாணவர்களின் ஆட்சி'.. முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!

CM Stalin on Tamil Nadu Govt School Students : ''2022ம் ஆண்டு 75 அரசு பள்ளி மாணவர்கள் முதன்மை நிறுவனங்களில் பயில தேர்வாகினர். 2023ம் ஆண்டு 274 மாணவர்களும், இந்த ஆண்டு 447 மாணவர்களும் உயர்கல்வியில் பயில தேர்வாகியுள்ளனர். இது வரும் நாட்களில் மேலும் உயரும்'' என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

எச்சில் எண்ணங்களை பிரதிபலிக்கும் பிறவிகள் நாங்கள் அல்ல... அமைச்சர் சேகர்பாபு பதிலடி

Sekar Babu on RB Udhayakumar Statement : மூன்றாண்டுகளாக சென்னையில் அம்மா உணவகத்தை அவ்வப்போது ஆய்வு செய்து வருகிறோம்; 4 ஆண்டுகளாக முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி ஒரு நாளாவது அம்மா உணவகத்தில் ஆய்வு செய்தாரா? என்று அமைச்சர் சேகர்பாபு கேள்வி எழுப்பியுள்ளார்.

இன்றைக்கு ஷாக் அடிக்கவில்லையா? - முதல்வருக்கு முன்னாள் அமைச்சர் கேள்வி

ADMK Ex Minister Ramana To MK Stalin : மின் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என எடப்பாடி பழனிசாமி பேசியபோது, ஷாக் அடிக்கிறது எனக் கூறிய அதற்கு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு, இன்றைக்கு ஷாக் அடிக்க வில்லையா? என முன்னாள் அமைச்சர் ரமணா கேள்வி எழுப்பியுள்ளார்.

கர்நாடகாவிற்கு தமிழ்நாடு பலத்தை காட்ட வேண்டும்; கூட்டத்தை கூட்ட வேண்டும் - அன்புமணி ராமதாஸ்

Anbumani Ramadoss : காவிரி பிரச்சினை தொடர்பான அனைத்துக் கட்சிக் கூட்டம் முதலமைச்சர் தலைமையில் நடத்தப்பட்டால் தமிழ்நாடு எவ்வளவு உறுதியாக இருக்கிறது என்பதை கர்நாடகத்திற்கு காட்ட முடியும்.

பணத்தை கொடுத்து வாக்கை பெற்ற முதலமைச்சர் ஸ்டாலின் பெருமைப்படலாமா? அன்புமணி ராமதாஸ் கேள்வி!

''திமுக-அதிமுக ஜென்ம எதிரி. ஆனால் இந்த தேர்தலில் காசை வாங்கி கொண்டு அதிமுக தொண்டர்கள் திமுகவுக்கு வாக்கு செலுத்தி உள்ளார்கள். இந்த தேர்தல் நேர்மையான முறையில் நடந்து இருந்திருந்தால் திமுக டெபாசிட் இழந்திருக்கும் என்பது தான் கள நிலவரம்''

'இனி ஸ்டாலினிடம் சொல்லி எந்த பயனும் இல்லை'.. எடப்பாடி பழனிசாமி பரபரப்பு ட்வீட்.. என்ன விஷயம்?

''மக்கள் பணியில் தான் நீங்களும் உள்ளீர்கள் என்ற அர்ப்பணிப்போடு தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கைக் காக்க காவல்துறை அதிகாரிகளை கேட்டுக்கொள்கிறேன்''

ஸ்டாலினுக்கு மட்டும்தான் தெரியும்.. எல்லாம் பாகப் பிரிவினை சண்டை - இ.பி.எஸ். தாக்கு

கோவை, நெல்லை மேயர்கள் ராஜினாமா செய்தது குறித்து திமுகவினருக்கு மட்டுமே தெரியும்.. எல்லாம் பாகம் பிரிப்பது குறித்த சண்டை என்று  நினைக்கிறேன் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

பல இளம் வழக்கறிஞர்களை உருவாக்கியவர் ஆம்ஸ்ட்ராங் - எல்.முருகன் புகழாரம்

படுகொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங் சமூக சேவையில் ஈடுபட்டு பல இளம் வழக்கறிஞர்களை உருவாக்கியவர் என்றும் சமூக விரோதிகளால் கொலை செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் இனி கள்ளச்சாராயம் விற்றால் ஆயுள்தண்டனை.. ரூ.10 லட்சம் அபராதம்.. முதல்வர் ஸ்டாலின்

மதுவிலக்கு திருத்தச் சட்ட மசோதாவை முதலமைச்சர் ஸ்டாலின், தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். அதன்படி, இனி தமிழ்நாட்டில் இனி கள்ளச்சாராயம் விற்றால் ஆயுள்தண்டனை விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.கள்ளச்சாராயத்தை முற்றிலும் ஒழிக்க கடுமையான தண்டனை வழங்கும் வகையில் சட்டதிருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்து.. 4 பேர் மரணம்.. பலர் படுகாயம்.. முதல்வர் நிவாரணம்

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள பந்துவார்பட்டி கிராமத்தில் செயல்படும் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் ஸ்டாலின் நிவாரணம் இரங்கல் தெரிவித்துள்ள நிலையில்,தலா 3 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளார்.

சட்டசபையில் கலவரம் நடத்த அதிமுக திட்டம்.. முதல்வர் ஸ்டாலின் பகீர் புகார்

சட்டசபையில் திட்டமிட்டு கலவரத்தை ஏற்படுத்த அதிமுக உறுப்பினர்கள் முயற்சி செய்கிறார்கள் என முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.