K U M U D A M   N E W S

அதெப்படி அவர்கள் மதுவை ஒழிப்பார்கள்.. வேடிக்கையாக இருக்கிறது.. - வாசன்

மதுவை ஒழிக்கும் அதிகாரத்தில் இருப்பவர்களை அழைத்து சென்று மது ஒழிப்பு மாநாடு நடத்துவது என்பது, வேடிக்கையாக உள்ளது என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.

விசிக மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்பீர்களா..? உடனடியாக இபிஎஸ் கொடுத்த பதில்..

அதிமுகவுக்கு முறையாக அழைப்பு விடுக்கப்பட்டால், விசிக நடத்தும் மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்பது குறித்து கலந்து பேசி முடிவெடுக்கப்படும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்

இந்திராவுக்கு நேர்ந்த கதிதான் ராகுலுக்குமா? - பதறிய மு.க.ஸ்டாலின்.. பாஜவுக்கு கண்டனம்

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு மிரட்டல் விடும் வகையில் பேசிய பாஜகவினருக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனங்களை தெரிவித்துள்ளார்.

பிரதமரை சந்திக்க முதலமைச்சர் திட்டம் - எப்போது அனுமதி?

பிரதமர் மோடியை சந்திக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தரப்பில் நேரம் கேட்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கூட்டணி கட்சிகளுக்கு அழைப்பு விடுத்த திமுக - எதற்கு தெரியுமா?

காஞ்சிபுரத்தில் திமுக பவள விழா பொதுக்கூட்டம் நடைபெறுவதை ஒட்டு, கூட்டணி கட்சிகளுக்கும் திமுக அழைப்பு விடுத்துள்ளது.

விஜய் வந்தால் அழைத்து செல்வோம்.. இல்லையென்றால் அவ்வளவு தான் - தமிழிசை அதிரடி

நடிகர் விஜய் தேசியம் பக்கம் வந்தால் கூட பரந்த நிலைப்பாட்டோடு அழைத்துச் செல்வோம். ஆனால் திராவிட சாயத்தை பூசி கொண்டால் அவ்வளவுதான் என்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

பிரதமரின் 74வது பிறந்தநாள் தலைவர்கள் வாழ்த்து

பிரதமர் மோடியின் 74வது பிறந்தநாளையொட்டி அரசியல் தலைவர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்

#JUSTIN : நீர்நிலை பாதுகாவலர் விருது.. வழங்க தமிழக அரசு அரசாணை வெளியீடு

முதலமைச்சரின் நீர்நிலை பாதுகாவலர் விருது வழங்க தமிழக அரசு அரசாணை வெளியீடு. மாவட்டத்திற்கு ஒருவர் வீதம் 38 மாவட்டத்திற்கு 38 பேருக்கு விருது வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது

திருமாவை வைத்து திமுக மது ஒழிப்பு நாடகம் நடத்துகிறது – எல்.முருகன்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அமெரிக்க பயணத்தில் எதிர்பார்த்த முதலீடு வராததை திசை திருப்பவே மது ஒழிப்பு மாநாடு என்ற நாடகத்தை மு.க.ஸ்டாலினும் திருமாவளவனும் அரங்கேற்றி வருவதாக மத்திய இணையமைச்சர் எல். முருகன் குற்றஞ்சாட்டியுள்ளார். விருதுநகரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இவ்வாறு கூறினார்.

’திருமாவளவன்-மு.க.ஸ்டாலின் நாடகம்’.. ’விஜய் பொதுவானவர் அல்ல’.. எல்.முருகன் தாக்கு!

தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கை சிறையில் மொட்டை அடிக்கப்பட்டு கொடுமைப்படுத்தப்பட்டதாக கூறப்படுவது குறித்து எல்.முருகனிடம் கேட்டபோது, ‘இது குறித்து வெளியுறவுத்துறை அமைச்சரிடம் கொண்டு சென்று அதற்கான நடவடிக்கை முறையாக எடுப்போம்’என்றார்.

"அதிமுக சார்பில் சட்டப்பேரவையை முடக்குவோம்" – அதிமுக முன்னாள் அமைச்சர்

புதுச்சேரி அரசு மின்கட்டண உயர்வை திரும்பப்பெறவில்லை என்றால் அதிமுக சார்பில் ஒரு லட்சம் தொண்டர்களை திரட்டி சட்டப்பேரவையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்ட அவர், இவ்வாறு கூறினார்.

’தலைமைத் தொண்டன்’.. உங்களை காண காத்திருக்கிறேன்.. மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!

சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் திமுக பவள விழா-முப்பெரும் விழா இன்று நடைபெறுகிறது. இந்த விழாவில் மு.க.ஸ்டாலின் விருது எஸ்.எஸ்.பழனிமாணிக்கத்துக்கு வழங்கப்பட உள்ளது.

ஸ்டாலின் - திருமா சந்திப்பில் நடந்தது இதுதானா..?

ஸ்டாலின் - திருமா சந்திப்பில் நடந்தது இதுதானா..? | Kumudam News24x7 | DMK | VCK | Thiruma | CMstalin

எதற்கு இத்தனை சாதி பெயர்கள்?.. இனிமேல் வேண்டாம் - கனிமொழி கோரிக்கை

இனிமேல் இத்தனை ஜாதி பெயர்களோடு பத்திரிக்கை அடிக்காதீர்கள் என திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

திருமாவளவனிற்கு யோக்கியதை கிடையாது.. திமுகவை மிரட்டி வருகிறார் - எல்.முருகன் சாடல்

தமிழக அமைச்சரவையில் இடம் பெற திமுகவை திருமாவளவன் மிரட்டி வருகிறார் என்றும் பாஜக, பாமகவை பற்றி பேச திருமாவளவனிற்கு யோக்கியதை கிடையாது என்றும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறியுள்ளார்.

ஆட்சியில் பங்கு.. திமுகவிற்கு பயத்தை காட்டிவிட்டார் திருமாவளவன் - ஜெயக்குமார்

திருமாவளவன் ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு கேட்பது போன்று பேசியிருப்பது, திமுகவிற்கு பயத்தை கொடுத்து இருக்கும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

நாங்கள் எல்.கே.ஜி. தான்.. மக்கள் புரிந்துகொண்டால் போதும் - அன்புமணிக்கு திருமாவளவன் பதில்

நாங்கள் எல்கேஜி படித்திருந்தாலும், சமூக பொறுப்புடன் நடந்து கொள்கிறோம் என்பதை மக்கள் புரிந்து கொண்டால் போதும் என்று அன்புமணி ராமதாஸ் விமர்சனத்திற்கு திருமாவளவன் பதில் அளித்துள்ளார்.

#BREAKING || "நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்க நடவடிக்கை"

உத்தரகண்ட் மாநிலத்தில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க நடவடிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது |- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

#justin || சிபிஎம் அலுவலகத்தில் முதலமைச்சர்

சென்னை தியாகராய நகரில் உள்ள சிபிஎம் அலுவலகத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை.

LIVE : பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு அண்ணா திருவுருவச் சிலைக்கு முதலமைச்சர் மரியாதை

பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு அவரது திருவுருவச் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், திமுக உறுப்பினர்கள் மரியாதை செலுத்தினர்

#JUSTIN | முதலமைச்சர் ஓணம் வாழ்த்து

உலகெங்கிலும் உள்ள மலையாள மக்களுக்கு இதயம் கனிந்த ஓணம் திருநாள் வாழ்த்துகள் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

”அதெல்லாம் முதல்வரின் முடிவு.. எங்களது பணியல்ல” - திருமா குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர்

”அதெல்லாம் முதல்வரின் முடிவு.. எங்களது பணியல்ல” - திருமா குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் சேகர்பாபு

சனாதனத்திற்கு எதிராக பேசுவதில்லை.. என்னவோ நடந்துள்ளது.. உதயநிதியை மறைமுகமாக சாடிய ஆளுநர்

தமிழ்நாட்டில் சனாதனத்திற்கு எதிராக சிலர் பேச ஆரம்பித்தனர். அதன் பிறகு என்ன நடந்ததோ திடீரென அமைதியாகி, பேசுவதை நிறுத்திவிட்டனர் என்று ஆளுநர் ரவி தெரிவித்துள்ளார்.

JUST IN | வீடியோவால் சலசலப்பு - Delete செய்த திருமா

அமைச்சரவையில் பங்கு வேண்டும் என பேசிய பழைய வீடியோவை தனது X தளத்தில் பகிர்ந்த திருமாவளவன். வீடியோ தொடர்பாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வந்த நிலையில் வீடியோ நீக்கப்பட்டது

'அந்த வீடியோவை அட்மின் போட்டிருப்பார்; எனக்கு தெரியாது’.. திருமாவளவன் விளக்கம்!

''ஆட்சியிலும் பங்கு ,அதிகாரத்திலும் பங்கு. கடைசி மக்களுக்கு ஜனநாயகம். எளிய மக்களுக்கு அதிகாரம் இதையெல்லாம் சொல்கின்ற கூட்டணி ஆட்சி என்ற குரலை உயர்த்திய இயக்கம் விடுதலை சிறுத்தைகள் கட்சி’’ என்று திருமாவளவன் கூறியிருந்தார்.