சவுக்கு சங்கர் மீதான 15 வழக்குகள்.. விசாரணையை தொடங்கிய சைபர் க்ரைம் போலீசார்!
ஊடகவியலாளர் சவுக்கு சங்கர் மீதான 15 வழக்குகள் கோவை சைபர் கிரைம் காவல்துறைக்கு மாற்றப்பட்ட நிலையில், போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.
ஊடகவியலாளர் சவுக்கு சங்கர் மீதான 15 வழக்குகள் கோவை சைபர் கிரைம் காவல்துறைக்கு மாற்றப்பட்ட நிலையில், போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.
போக்சோ வழக்கில் தலைமறைவாக உள்ள கிறிஸ்துவ மத போதகர் ஜான் ஜெபராஜ் முன் ஜாமின் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
மறைந்த முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து, அவரது குடும்பத்தினரை விடுவித்து சேலம் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம், வழக்கில் குற்றச்சாட்டுக்களைப் பதிவு செய்து, விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது.
சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில், கே.என். நேருவின் சகோதரர் ரவிச்சந்திரனிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் 10 மணி நேரமாக விசாரணை நடத்தினர்.
15 நாள் நீதிமன்ற காவலில் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்
மனித உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் வாகனம் இயக்குவது, அலட்சியமாக செயல்பட்டு பிறருக்கு ஆபத்தை விளைவித்தல், மோட்டார் வாகன சட்டம் உள்ளிட்ட நான்கு பிரிவுகளுக்கு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோவையில் 17 மற்றும் 14 வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் கிறிஸ்தவ மத போதகர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கில், ஞானசேகரன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரங்கள் உள்ளதால் வழக்கில் இருந்து விடுவிக்கக்கூடாது என தமிழக அரசு போக்சோ நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
தருமபுரியில் யானை வேட்டையாடியதாக சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணைக்கு அழைத்து சென்ற நபர் மர்ம மரணம் தொடர்பாக மறு பிரேத பரிசோதனை செய்ய கோரி முறையீடு அவசர வழக்காக இன்று பிற்பகல் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் அரசு தரப்பு சாட்சி விசாரணை நடைபெற்று முடிந்த நிலையில், குற்றம் சாட்டப்பட்ட 9 பேரும் கோவை மகளிர் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர்