சட்டவிரோத சூதாட்ட செயலி: 29 பிரபலங்கள் மீது வழக்குப்பதிவு..!
சட்டவிரோத சூதாட்ட செயலி விளம்பரத்தில் நடித்த பிரகாஷ் ராஜ், விஜய் தேவரகொண்டா, ராணா டகுபதி உள்ளிட்ட 29 நடிகர்கள் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
சட்டவிரோத சூதாட்ட செயலி விளம்பரத்தில் நடித்த பிரகாஷ் ராஜ், விஜய் தேவரகொண்டா, ராணா டகுபதி உள்ளிட்ட 29 நடிகர்கள் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
கோவை குண்டு வெடிப்பு வழக்கில் கடந்த 27 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த டெய்லர் ராஜா சத்தீஸ்கரில் கைது செய்யப்பட்டுள்ளார். சத்தீஸ்கரில் தலைமறைவாக இருந்த டெய்லர் ராஜாவை கைது செய்து கோவைக்கு அழைத்து வந்து தீவிரவாத தடுப்புப்பிரிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை குண்டு வெடிப்பு வழக்கில் கடந்த 27 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த டெய்லர் ராஜா சத்தீஸ்கரில் கைது செய்யப்பட்டுள்ளார். சத்தீஸ்கரில் தலைமறைவாக இருந்த டெய்லர் ராஜாவை கைது செய்து கோவைக்கு அழைத்து வந்து தீவிரவாத தடுப்புப்பிரிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.
நிகிதா மீது எண்ணற்ற குற்றச்சாட்டுகள் வெளி வருகிறது. திரும்பத் திரும்ப ஏமாற்றி உள்ளார். ஏன் அந்தப் பெண் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என சீமான் கேள்வி எழுப்பி உள்ளார்.
அரியானாவில் பெண் ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, ரயில் தண்டவாளத்தில் வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அஜித்குமார் கொலை வழக்கில், நகை காணாமல் போனதாக புகார் கொடுத்த நிகிதா மீது சென்னையிலும் மோசடி புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இந்தியாவை உலுக்கிய பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி வழக்கில் முக்கிய குற்றவாளியாகக் காணப்படும் வைர வியாபாரி நீரவ் மோடியின் சகோதரர் நேஹல் தீபக் மோடி, தற்போது அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரபல இன்ஸ்டாகிராம் பிரபலம் விஷ்ணு மற்றும் அவரது மனைவி, மேக்கப் ஆர்ட்டிஸ்ட் அஸ்மிதா ஆகியோர் ஆன்லைன் பங்குச்சந்தை மோசடியில் ஈடுபட்டதாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கிருஷ்ணாவின் செல்போன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ள நிலையில் தனிப்படைகள் அமைத்து தேடிவந்த காவல்துறையினர் சைபர் கிரைம் நிபுணர்களுடன் அவரது இருப்பிடத்தை கண்டறியும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வரதட்சணை வழக்கில் மனைவியை கொலை செய்த பிளாக் கேட் கமாண்டோவுக்கு சலுகை வழங்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. ஆபரேஷன் சிந்தூரில் பங்கேற்றவர் என்ற வாதத்தை ஏற்க முடியாது என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகர் ஸ்ரீகாந்த் தொடர்புடைய வழக்கின் முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள தகவல்கள் வெளியாகி உள்ளன.
சொத்து குவிப்பு வழக்கில் திமுக எம்.பி ஆ.ராசா சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜரான நிலையில், குற்றச்சாட்டுப் பதிவும் வழக்கின் விசாரணையும் வரும் 30-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
சென்னையில் போதைப் பொருள் வழக்கில் பிரபல நடிகர் ஸ்ரீகாந்தை கைது செய்த போலீசார் தீவிர அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அவருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஜெகன் மோகன் ரெட்டி சென்ற காருக்கு அடியில் சிக்கிய நபர் உயிரிழந்தது தொடர்பாக ஆந்திரப் பிரதேச முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி உள்ளிட்ட 6 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
ஆன்லைன் பரிவர்த்தனை மோசடி வழக்கில் 800 கோடிக்கு மேல் மோசடி செய்தது தொடர்பாக 7 நகரங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. இதில், சுமார் ரூ.160.8 கோடி சொத்துகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடத்தல் வழக்கு தொடர்பாக புரட்சி பாரத கட்சி தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி திருவாலங்காடு காவல் நிலையத்தில் விசாரணைக்காக ஆஜர்
ஏடிஜிபி ஜெயராமை சஸ்பெண்ட் செய்ய தமிழக காவல்துறை, மாநில உள்துறைக்கு பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சிறுவன் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஏடிஜிபி ஜெயராம் சிறையில் அடைக்கப்பட்டார்.
வரிச்சியூர் செல்வம் மீதான கொலை வழக்கு விருதுநகர் நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்ட நிலையில், ஜூலை14- ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.
கடத்தப்பட்ட வழக்கில் பூவை ஜெகன்மூர்த்தி தேடப்பட்டு வரும் நிலையில், எல்லையோர பகுதிகளில் போலீசார் விடிய விடிய வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
நாகர்கோவில் அருகே திருப்பதி சாரம் டோல் கேட் ஊழியரிடம் தகராறில் ஈடுபட்டு பேரி கார்டை சேதப்படுத்திய விசிக நிர்வாகிகள் மீதுபோலீசார் வழக்குப்பதிவு
சென்னை மெட்ரோ ரயில் மேம்பால பணிகள் நடந்து வரும் போது, ராமாபுரம் பகுதியில் தூண் விழுந்து ரமேஷ் என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
ஆம்ஸ்ட்ராங் வழக்கை வைத்து தமிழக அரசு நாடகமாடுவது நம்பகத்தன்மை அற்ற செயலாக இருக்கிறது என பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவர் ஆனந்தன் கருத்து
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் தனது தொடர் போராட்டத்தால் குற்றவாளிகளில் ஒருவனான திமுக அனுதாபி ஞானசேகரனுக்கு தண்டனையை சாத்தியப்படுத்தியுள்ளது அதிமுக என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
பெண்கள் பாதுகாப்பு பற்றி வேடம் போடுபவர்களுக்குச் செயலால் பதில் அளித்திருக்கிறது தமிழ்நாடு காவல்துறை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டியுள்ளார்.