K U M U D A M   N E W S

விபத்து

தொழிற்சாலையில் தீ விபத்து... ஊழியர்களுக்கு மூச்சுத்திணறல்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே செல்போன் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தால் மூச்சுத்திணறல் ஏற்பட்ட நிலையில் 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தலைகுப்புற கவிழ்ந்த பேருந்து.. உள்ளே இருந்த பள்ளி மாணவர்கள்.. தேனியில் பரபரப்பு | Kumudam News 24x7

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே தனியார் பள்ளி பேருந்து கவிழ்ந்த விபத்தில் 15 பேர் காயம் அடைந்தனர்.

#Breaking: டாடா செல்போன் உதிரியாக தயாரிப்பு ஆலையில் தீ விபத்து

கிருஷ்ணகிரி அருகே செல்போன் உதிரி பாகங்கள் தயாரிப்பு ஆலையில், பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

#Breaking: திடீரென கேட்ட பயங்கர சத்தம்! உள்ளே சிக்கியுள்ளவர்களின் நிலை? விருதுநகரில் பரபரப்பு

விருதுநகர் அருகே சாத்தூரில் அமைந்துள்ள பட்டாசு ஆலையில், ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் பட்டாசு ஆலையில் தீப்பற்றி எரிந்தது.

பேருந்து கவிழ்ந்து 4 பேர் உயிரிழப்பு.. பேருந்தை சிறை பிடித்த மக்கள்..விருதுநகரில் பரபரப்பு

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மினி பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் பலியாகினர். இதையடுத்து அரசு பேருந்தை சிறை பிடித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Virudhunagar Accident : அதிகாலையிலேயே பயங்கரம்.. மினி பேருந்து கவிழ்ந்து விபத்து; 3 பேர் உயிரிழப்பு

Virudhunagar Accident : விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மினி பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

மலைப்பாதையில் கட்டுப்பாட்டை இழந்த லாரி.. பறிபோன 3 உயிர்கள்...

கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி வனப்பகுதியில் உள்ள கொண்டை ஊசி வளைவில் மினி லாரி கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 3 பேர் உயிரிழந்தனர்.

Fire Accident : பேப்பர் குடோனில் கொழுந்து விட்டு எரிந்த தீ... புகைமண்டலமாக மாறிய வண்டலூர்

Godown Fire Accident in Chengalpattu : செங்கல்பட்டு வண்டலூர் அருகே கொளப்பாக்கம் பகுதியில் உள்ள பழைய பேப்பர் குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. 20 அடி உயரத்திற்கு கரும்புகை சூழ்ந்துள்ள நிலையில் பணியாளர்கள், தீயணைப்பு துறையினர் தீயை அணைத்து வருகின்றனர். 

பிக்பாஸ் செட்டில் தொழிலாளிக்கு நேர்ந்த அசம்பாவிதம்.. விரைந்த போலீஸ்..

சென்னை அருகே பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு செட் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அப்போது எதிர்பாராத விதமாக பணியில் ஈடுபட்டிருந்த உத்திரபிரதேசத்தை சேர்ந்த முகமது ஷாகின் கான் என்பவர் 20 அடி உயர்த்தில் நபர் கீழே விழுந்துள்ளார். இதில் படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கட்டுப்பாட்டை இழந்த சுற்றுலா வேன்.. 6 பேருக்கு நேர்ந்த சோகம்

உளுந்தூர்பேட்டை அருகே சுற்றுலா வேன் விபத்துக்கு உள்ளானதில் 6 பேர் உயிரிழந்தனர்.

Bus Accident : அரசு பேருந்து அலட்சியம்... அப்பாவி குழந்தை பலி

Nagapattinam School Student Dies in Govt Bus Accident : நாகை அருகே குருக்கத்தி பைபாஸ் சாலையில் அரசு பேருந்து மோதி 11ம் வகுப்பு மாணவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மாணவியுடன் வந்த அவரது தம்பி படுகாயங்களுடன் மருத்துவமனியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கோயிலுக்கு சென்றபோது நேர்ந்த விபத்து.. பரிதாபமாக பறிபோன உயிர்...

கள்ளக்குறிச்சி மாவட்டம் காட்டுநெமிலி பகுதியில் காரும், லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த 12க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் இடிந்து விழுந்து விபத்து!

சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் இடிந்து விழுந்தது. இந்த விபத்தின் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

#JUSTIN : தனியார் தொழிற்சாலை பேருந்து மோதி 2 பேர் உயிரிழப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே தனியார் தொழிற்சாலை பேருந்து மோதி 2 பேர் உயிரிழந்தனர்.

வருவாய் கோட்டாட்சியர் வாகனம் மோதிய விபத்து... பரிதாபமாய் பறிபோன உயிர்கள்

புதுக்கோட்டை நமணசமுத்திரம் அருகே வருவாய் கோட்டாட்சியர் கார் மோதிய விபத்தில் இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் உயிரிழந்த இருவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

நிலை தடுமாறிய வீட்டிற்குள் புகுந்த அரசுப்பேருந்து.. அலறிய பயணிகள்

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே கூழமந்தல் கிராமத்தில் அரசு பேருந்தும், லாரியும் மோதி விபத்து ஏற்பட்டது. அப்போது நிலைதடுமாறிய அரசுப் பேருந்து சாலையோரம் உள்ள வீட்டிற்குள் புகுந்தது. இந்த விபத்தில் காயமடைந்த லாரி ஓட்டுநர், அரசு பேருந்து ஓட்டுநர், பெண் பயணி ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சுனாமி குடியிருப்பில் அசம்பாவிதம் – 2 வயது குழந்தைக்கு நேர்ந்த சோகம்

நாகை செல்லூர் பகுதியில் உள்ள சுனாமி குடியிருப்பில் மேற்கூரை பெயர்ந்து விழுந்து 2 வயது குழந்தை உயிரிழப்பு. வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த விஜயகாந்த், மனைவி பாண்டி மீனா, 2 வயது குழந்தை மீது மேற்கூரை விழுந்துள்ளது

பட்டாசு ஆலை வெடிவிபத்து – சிக்கிய தொழிலாளர்களின் நிலை என்ன?

விருதுநகர் மாவட்டம் குகன்பாறையில் உள்ள தனியார் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் சிக்கி கோவிந்தராஜ் என்பவர் உயிரிழந்தார். மேலும் பலர் கட்டட இடிபாடுகளில் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

#JUSTIN : கார் சர்வீஸ் சென்டரில் பயங்கர தீ விபத்து

சென்னை ராமாபுரத்தில் உள்ள கார் சர்வீஸ் சென்டரில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு. கார் ஒன்று தீப்பற்றி எரிந்து வரும் நிலையில், தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு துறையினர் தீவிரம்

ஒரே பைக்கில் சவாரி.. 4 பேருக்கு நேர்ந்த சோகம்

நெல்லை வண்ணாரப்பேட்டை வடக்கு பைபாஸ் சாலையில் நிகழ்ந்த விபத்தில் 4 பேர் உயிரிழப்பு. லாரி மோதியதில் ஒரே பைக்கில் சென்ற 4 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்

#JUSTIN : அரசு பேருந்து - கார் மோதி கோர விபத்து; 5 பேர் உயிரிழப்பு

திருவண்ணாமலை மாவட்டம் தென்பள்ளிப்பட்டு பகுதியில் நிகழ்ந்த சாலை விபத்தில் 3 பேர் உயிரிழப்பு. அரசுப்பேருந்தும் காரும் மோதிய விபத்தில் ஒரு பெண் உட்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்

#BREAKING || தீ விபத்தில் சிக்கிய யானை உயிரிழப்பு

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே தீ விபத்தில் சிக்கிய குன்றக்குடி ஸ்ரீ சண்முகநாதன் கோயில் யானை சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு. கோயில் மலை அடிவாரத்தில் யானை கட்டி போட்டு இருந்த போது நிழல் குடையில் மின்கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கியது.

மகளிர் விடுதியில் குளிர்சாதனப் பெட்டி வெடித்து தீ விபத்து.. விடுதி உரிமையாளரை கைது செய்த காவல்துறை

மதுரை: மகளிர் விடுதியில் குளிர்சாதனப் பெட்டி வெடித்து தீ விபத்து. படுகாயம் அடைந்த 2 பெண்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு. விடுதி உரிமையாளரை கைது செய்த காவல்துறை

BREAKING || விடிந்ததும் பகீர்.. கோர விபத்தில் 5 பேர் பலி

சிதம்பரம் அருகே லாரியும், காரும் நேருக்கு நேர் மோதி கொண்ட விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பரிதாபமாக உயிரிழப்பு. விபத்தில் 3 வயது குழந்தை உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு -போலீசார் விசாரணை

Breaking: அரசுப் பேருந்து - கார் கோர விபத்து... ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி!

ராமநாதபுரம் அருகே நின்று கொண்டிருந்த அரசுப் பேருந்து மீது, கார் மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.