K U M U D A M   N E W S

மகா விஷ்ணு அதிரடி கைது.. விமான நிலையத்தில் தட்டித்தூக்கிய போலீஸ்.. என்ன நடந்தது?

இந்த சம்பவம் குறித்து ஆஸ்திரேலியாவில் இருந்து வீடியோ வெளியிட்ட மகா விஷ்ணு, ''நான் பேசியதில் என்ன தவறு உள்ளது? நான் எங்கும் ஓடி ஒளியவில்லை. நாளையே சென்னை வந்து இது குறித்து போலீசிடம் விளக்கம் அளிக்க உள்ளேன்'' என்று விளக்கம் அளித்தார்.

மகா விஷ்ணு மீது குவியும் புகார்கள்...

சென்னை அசோக் நகர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆன்மிக சொற்பொழிவு நடத்தி சர்ச்சைக்குள்ளான மகாவிஷ்ணு மீது காவல் நிலையங்களில் புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

நான் எங்கும் ஓடிய ஒளியவில்லை "மதியம் 1 மணிக்கு வருவேன்.." - வாய் திறந்த மகாவிஷ்ணு!

Mahavishnu motivational speaker: சென்னை பள்ளியில் ஆன்மிக சொற்பொழிவு சர்ச்சை விவகாரம் தொடர்பாக மௌனம் கலைத்த மகாவிஷ்ணு.

MahaVishnu: “போலீஸுக்கு கஷ்டம் வேண்டாம்... சென்னைக்கே வருகிறேன்.” வீடியோவில் மகா விஷ்ணு விளக்கம்!

அரசுப் பள்ளியில் ஆன்மிக போதனை குறித்து பேசி சர்ச்சையில் சிக்கிய மகா விஷ்ணு, வீடியோ வெளியிட்டு விளக்கம் கொடுத்துள்ளார். மேலும், எங்கும் ஓடி ஒளியவில்லை, சென்னை வருகிறேன் என ஆஸ்திரேலியாவில் இருந்து வீடியோ வெளியிட்டுள்ளார்.

இஷ்டபடி ரீல் சுற்றிய மகா விஷ்ணு.. சொன்னது ஒன்று செய்தது ஒன்று

தலைமையாசிரியை மற்றும் ஆசிரியர்கள். மாணவர்கள் மத்தியில் என்ன பேச வேண்டும் என்று சொல்லியதற்கு மாறாக உளறித் தள்ளியதே சர்ச்சைக்கு காரணம் என தெரியவந்துள்ளது.

ஆன்மிகமா? பகுத்தறிவா? அரசு பள்ளியை சுழன்றடிக்கும் சர்ச்சை

ஆன்மிகமா? பகுத்தறிவா? அரசு பள்ளியை சுழன்றடிக்கும் சர்ச்சை, சென்னையில் உள்ள அரசுப் பள்ளிகளில் கார்ப்பரேட் சொற்பொழிவாளரை கொண்டு ஆன்மிக போதனை நடத்தப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையாகியுள்ளது.

'மகா விஷ்ணுவை கைது செய்ய வேண்டும்'.. மாற்றுத்திறனாளிகள் அதிரடி புகார்!

உங்கள் பெயர் என்ன? பள்ளிகளில் மதம் குறித்து பேசக்கூடாது என்று யார் சொன்னது? என்று மகா விஷ்ணு மாற்றுத்திறனாளி ஆசிரியரிடம் மிக கடுமையாக நடந்து கொண்ட வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றன. மகாவிஷ்ணு மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.

அரசு பள்ளிகளில் ஆன்மீக சொற்பொழிவு நடத்தப்பட்ட விவகாரம்... அமைச்சர் அன்பில் மகேஷ் அதிரடி

சென்னையில் அரசுப்பள்ளிகளில் ஆன்மிக சொற்பொழிவு நடத்தப்பட்ட விவகாரத்தில் சொற்பொழிவு ஆற்றிய மகாவிஷ்ணு, ஆசிரியரை தரக்குறைவாக பேசியது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்  

MahaVishnu: அரசுப் பள்ளிகளில் கார்ப்பரேட் ஆன்மிக போதனை.. சமூக வலைதளங்களில் வைரலாகும் சர்ச்சை வீடியோ!

சென்னையில் உள்ள அரசுப் பள்ளிகளில் கார்ப்பரேட் சொற்பொழிவாளரை கொண்டு ஆன்மிக போதனை நடத்தப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையாகியுள்ளது.