K U M U D A M   N E W S
Kumudam Ad

இந்த வருடம் RCB.. அடுத்த வருடம் பஞ்சாப்: கிறிஸ் கெய்ல் நம்பிக்கை!

ஐபிஎல் தொடரில் கோப்பை வெல்வதற்காகக் கடந்த 18 ஆண்டுகளாக நாங்கள் காத்திருந்து வென்றதில் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளதாக ஆர்சிபி அணியின் முன்னாள் வீரர் கிறிஸ் கெய்ல் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

சுந்தர் பிச்சை நிகர மதிப்பு ரூ.9,516.8 கோடி – ப்ளூம்பெர்க் தகவல்!

கூகுள் CEO சுந்தர் பிச்சையின் நிகர மதிப்பு ரூ.9,516.8 கோடியை தாண்டியதாக ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் குறியீட்டில் தகவல் வெளியாகியுள்ளது. 2023ம் ஆண்டு தொடக்கத்தில் ஆல்ஃபாபெட் நிறுவனத்தின் பங்குகள் உயரத் தொடங்கி தற்போது 120% உயர்வை சந்தித்துள்ளதால், சுந்தர் பிச்சையின் நிகர மதிப்பில் இந்த ஏற்றம் என கூறப்படுகிறது.

1987-ல் நடந்த இடஒதுக்கீடு போராட்டம்.. சேரனின் இயக்கத்தில் ராமதாஸ் பயோபிக்!

தமிழக அரசியலில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த போராட்டமாக 1987-ல் நடந்த இடஒதுக்கீடு போராட்டம் கருதப்படுகிறது. அதனை மையமாக வைத்து, போராட்டத்தினை தலைமையேற்று நடத்திய பாமக நிறுவனர் ராமதாஸின் பயோபிக் படம் உருவாகி வருகிறது.

சொகுசு பயணக் கப்பலில் பயங்கர தீவிபத்து – உயிர்பிழைக்க கடலில் குதித்த பயணிகள்!

இந்தோனேசியா தலாவுத் தீவிலிருந்து மனாடோ நகரை நோக்கி 280 பேருடன் சென்ற சொகுசு கப்பலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்தத் தீ விபத்தில் உயிர் பிழைக்கக் கடலில் குதித்த பயணிகளை மீட்டும் பணிகள் தீவிரமடைந்துள்ளது.

சொத்தை மீட்டுத் தருவதாகக் கூறி மோசடி.. வங்கி இஎம்ஐ மூலம் போலீஸிடம் சிக்கிய மோசடி மன்னன்!

அரசு தொடர்பான வேலைகளையும், சொத்தையும் மீட்டுத் தருவதாகக் கூறி 62.8 லட்சம் மோசடி செய்த மோசடி மன்னன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நதிநீர் பாதுகாப்பு நடவடிக்கை.. 8 வாரங்களில் ஆக்கிரமிப்புகள் அகற்ற சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

கூவம், அடையாறு நதிகள் மற்றும் பக்கிங்ஹாம் கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை எட்டு வாரங்களில் முழுமையாக அகற்றும்படி தமிழக அரசுக்குச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

2 நாள் பயணமாக தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி!

2026 சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், பிரதமர் மோடி ஜூலை 27 மற்றும் 28 தேதிகளில் அரியலூர், பெரம்பலூர், தஞ்சை ஆகிய மாவட்டங்களுக்கு வருகை தருவதாகவும், கங்கை கொண்ட சோழபுரத்தில் ஆடி திருவாதிரை நிகழ்வில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவில் வெளிநாட்டுப் பொருட்கள் மீது கூடுதல் வரி விதிப்பு.. ரூ.8 லட்சம் கோடி வருவாய்!

வெளிநாட்டுப் பொருட்கள் மீதான கூடுதல் வரிவிதிப்பின் மூலம் அமெரிக்க அரசுக்கு இந்தாண்டு ரூ.8 லட்சம் கோடி வருவாய் கிடைத்துள்ளது. இந்த அண்டு இறுதிக்குள் ரூ.26 லட்சம் கோடியாக அதிகரிக்கும் என அமைச்சரவை கூட்டத்தில் அந்நாட்டு நிதி அமைச்சர் ஸ்காட் பெசென்ட் தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி – 5 நாடுகளுக்கு 8 நாள் சுற்றுப்பயணம்!

பிரதமர் நரேந்திர மோடி இன்று ஜூலை 2 ஆம் தேதி முதல் 9 ஆம் தேதி வரை 8 நாள் சுற்றுப்பயணமாக வரை 5 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இந்த பயணம் இருநாட்டுகளின் உறவுகள், பொருளாதார ஒத்துழைப்புகள் மற்றும் உலகளாவிய நிலைப்பாடுகளை வலுப்படுத்தும் நோக்கத்தில் அமைந்துள்ளது.

இராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேர் கைது.. ஜூலை 3 வரை இலங்கை நீதிமன்ற காவல்!

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேரை, ஜூலை 3 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.