K U M U D A M   N E W S

Politics

3-வது அணிக்குத் தமிழகத்தில் அணி இல்லை: CPI திட்டவட்டம்

தேசிய அளவில் உருவாகும் மூன்றாவது அணிக்குத் தமிழகத்தில் ஆதரவு அளிக்கப்பட மாட்டாது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) திட்டவட்டமாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு, தமிழக அரசியல் களத்தில் புதிய விவாதங்களைக் கிளர்த்தியுள்ளது. பல்வேறு அரசியல் கட்சிகள் கூட்டணி அமைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வரும் நிலையில், சி.பி.ஐ-யின் இந்த முடிவு முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

ஓடிபி ஏன் கேட்குறீங்க? திமுகவின் 'ஓரணியில் தமிழ்நாடு' பிரச்சாரத்திற்கு சிக்கல்

தமிழகம் முழுவதும் திமுக சார்பில் ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்கிற பிரச்சார இயக்கம் நடைப்பெற்று வரும் நிலையில், பொதுமக்களிடம் ஓடிபி (OTP) பெற இடைக்காலத் தடை விதித்துள்ளது உயர்நீதிமன்ற மதுரைக்கிளை.

அண்ணா அறிவாலயத்தில் அன்வர் ராஜா- அதிமுகவினர் ஷாக்!

அதிமுகவின் அமைப்புச்செயலாளராக பதவி வகித்து வந்த அன்வர் ராஜா திமுகவில் இணைந்த நிலையில், அவர் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளார்.

குறை கூறுபவர்கள் மனசாட்சியுடன் பதிலளிக்க வேண்டும்- அமைச்சர் மனோ தங்கராஜ்

இந்திய துணைக்கண்டத்தில் மக்களுக்கு சேவையாற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ போன்ற சிறந்த திட்டம் ஏதாவது மாநிலத்தில் உள்ளதா என அரசை குறை கூறுபவர்கள் மனசாட்சியுடன் பதிலளிக்க வேண்டும் என அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.

நாங்க எப்படி போராட்டம் நடத்துனோம்? தவெகவுக்கு வன்னி அரசு அட்வைஸ்

”தமிழக வெற்றிக் கழகம் வெறும் ரசிகர்களை உருவாக்காமல் முதலில் தொண்டர்களை உருவாக்க வேண்டும்” என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச் செயலாளர் வன்னி அரசு தெரிவித்துள்ளார்.

அரசியலில் அப்பா மகன் உறவு முக்கியம்- திருமண விழாவில் உதயநிதி பேச்சு

அப்பா சொல்வதை கேட்காத மகன் என்று கூறி விடக்கூடாது.அந்தப் பிரச்சினை எனக்கும் இருக்கிறது என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார்

அசாதாரண சூழ்நிலைக்கு நான் காரணம் இல்லை…மெளனம் கலைகின்றேன் – மல்லை சத்யா

என் அன்புத் தலைவர் வைகோ எம்பி அவர்களே உங்கள் தாள் பணிந்து மன்றாடி கேட்டுக் கொள்கின்றேன். இனி எக்காலத்திலும் யார் மீதும் எந்த தொண்டன் மீதும் இதைப்போன்ற அபாண்டமான பழியை சுமத்தி பழிக்கு ஆளாக வேண்டாம். அரசியலில் நீங்கள் அடைந்து இருக்கும் உங்கள் உயரத்திற்கு அது அழகல்ல என மல்லை சத்யா அறிக்கை

செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சராக வேண்டி சிறப்பு வழிபாடு!

செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சராக வேண்டும், 2026-ல் திமுக மீண்டும் ஆட்சி அமைக்க வேண்டும் என பழங்குடியினர் வழிபடும் கோவிலில் சிறப்பு வழிபாடு செய்துள்ளனர் திமுகவினர்.

’அன்பே சிவம்.. அனைவரும் சமம்’ என்பது தான் காவிக் கொள்கை: தமிழிசை பேட்டி

”தமிழக அரசு தான் கடனுக்கு மேல் கடன் வாங்கிக்கொண்டு தமிழக மக்களைக் கடனாளிகளாக ஆக்கி வருகிறார்கள்” என தமிழிசை சௌந்தரராஜன் குற்றம் சாட்டியுள்ளார்.

விஜய் யார் வாக்குகளை பிரிப்பார் என்று தெரியாது? MP கார்த்தி சிதம்பரம் பேட்டி

’ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு கோட்பாடு இருப்பதாகவும், அதனை முன்வைத்துதான் விமர்சனம் செய்வார்கள் என்றும், ஒரு கூட்டணியில் இருந்து கொண்டு விமர்சனம் செய்வது தவறு கிடையாது என்றும்’ எம்பி கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.