K U M U D A M   N E W S

accident

மலைப்பாதையில் கட்டுப்பாட்டை இழந்த லாரி.. பறிபோன 3 உயிர்கள்...

கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி வனப்பகுதியில் உள்ள கொண்டை ஊசி வளைவில் மினி லாரி கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 3 பேர் உயிரிழந்தனர்.

பிக்பாஸ் செட்டில் தொழிலாளிக்கு நேர்ந்த அசம்பாவிதம்.. விரைந்த போலீஸ்..

சென்னை அருகே பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு செட் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அப்போது எதிர்பாராத விதமாக பணியில் ஈடுபட்டிருந்த உத்திரபிரதேசத்தை சேர்ந்த முகமது ஷாகின் கான் என்பவர் 20 அடி உயர்த்தில் நபர் கீழே விழுந்துள்ளார். இதில் படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கட்டுப்பாட்டை இழந்த சுற்றுலா வேன்.. 6 பேருக்கு நேர்ந்த சோகம்

உளுந்தூர்பேட்டை அருகே சுற்றுலா வேன் விபத்துக்கு உள்ளானதில் 6 பேர் உயிரிழந்தனர்.

Bus Accident : அரசு பேருந்து அலட்சியம்... அப்பாவி குழந்தை பலி

Nagapattinam School Student Dies in Govt Bus Accident : நாகை அருகே குருக்கத்தி பைபாஸ் சாலையில் அரசு பேருந்து மோதி 11ம் வகுப்பு மாணவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மாணவியுடன் வந்த அவரது தம்பி படுகாயங்களுடன் மருத்துவமனியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கோயிலுக்கு சென்றபோது நேர்ந்த விபத்து.. பரிதாபமாக பறிபோன உயிர்...

கள்ளக்குறிச்சி மாவட்டம் காட்டுநெமிலி பகுதியில் காரும், லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த 12க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் இடிந்து விழுந்து விபத்து!

சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் இடிந்து விழுந்தது. இந்த விபத்தின் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

பேருந்து கவிழ்ந்து விபத்து.. ஒருவர் உயிரிழப்பு

தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை அருகே பைபாஸ் சாலை வளைவில் அரசு சொகுசு பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஒருவர் பலியானார். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  

#JUSTIN : தனியார் தொழிற்சாலை பேருந்து மோதி 2 பேர் உயிரிழப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே தனியார் தொழிற்சாலை பேருந்து மோதி 2 பேர் உயிரிழந்தனர்.

நிலை தடுமாறிய வீட்டிற்குள் புகுந்த அரசுப்பேருந்து.. அலறிய பயணிகள்

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே கூழமந்தல் கிராமத்தில் அரசு பேருந்தும், லாரியும் மோதி விபத்து ஏற்பட்டது. அப்போது நிலைதடுமாறிய அரசுப் பேருந்து சாலையோரம் உள்ள வீட்டிற்குள் புகுந்தது. இந்த விபத்தில் காயமடைந்த லாரி ஓட்டுநர், அரசு பேருந்து ஓட்டுநர், பெண் பயணி ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சுனாமி குடியிருப்பில் அசம்பாவிதம் – 2 வயது குழந்தைக்கு நேர்ந்த சோகம்

நாகை செல்லூர் பகுதியில் உள்ள சுனாமி குடியிருப்பில் மேற்கூரை பெயர்ந்து விழுந்து 2 வயது குழந்தை உயிரிழப்பு. வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த விஜயகாந்த், மனைவி பாண்டி மீனா, 2 வயது குழந்தை மீது மேற்கூரை விழுந்துள்ளது