K U M U D A M   N E W S

AI

#BREAKING || கடலூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

கனமழை எச்சரிக்கை காரணமாக கடலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை விடுக்கப்பட்டுள்ளது.

திருப்பதியில் விஐபி பிரேக் தரிசனம் ரத்து - காரணம் என்ன?

அதிக கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து வரும் 16-ம் தேதி திருப்பதியில் விஐபி பிரேக் தரிசனம் ரத்து செய்யப்படுவதாக தேவஸ்தான நிர்வாகம் அறிவித்துள்ளது.

#BREAKING | மூழ்கிய நெற்பயிர்கள் - விவசாயிகள் வேதனை

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே அறுவடைக்கு தயாராக இருந்த 100-க்கும் மேற்பட்ட ஏக்கர் நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி சேதமடைந்தன.

Chennai Rains: அனைத்து வகையிலும் அரசு தயாராக உள்ளது - தலைமை செயலாளர் முருகானந்தம்

பருவமழை தொடங்க உள்ள நிலையில், அரசு தரப்பில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து தலைமைச் செயலாளர் முருகானந்தம் குமுதம் செய்திகளுக்கு பிரத்யேகமாக தெரிவித்துள்ளார்.

சென்னைக்கு கனமழை எச்சரிக்கை.. முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்த மின்சார வாரியம்..

சென்னைக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் மீட்பு பணிகளை மேற்கொள்ள மண்டல வாரியாக அதிகாரிகளை நியமித்து மின்சாரத்துறை உத்தரவிட்டுள்ளது. 

கனமழை எச்சரிக்கை எதிரொலி... பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

கனமழை எச்சரிக்கை காரணமாக புதுச்சேரியில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளித்து கல்வி அமைச்சர் நமசிவாயம் உத்தரவிட்டுள்ளார்.

சென்னையில் குவிந்த மீட்பு படை வீரர்கள்.. கனமழையை எதிர்கொள்ள முழுவீச்சில் தயார்

பருவமழையை எதிர்கொள்ள வெளிமாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படை வீரர்கள் சென்னைக்கு வரவழைக்கப்பட்டு உள்ளனர்.

100 ஏக்கர் ஒரே நாளில் நாசம்.. வேதனையில் குமுறும் விவசாயிகள்

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கனமழையால் நெல் நாற்று நட தயாராக இருந்த 100 ஏக்கர் விலை நிலங்கள் மழை நீரில் மூழ்கி சேதமடைந்ததால் விவசாயிகள் வேதனைக்குள்ளாகினர். 

9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்...

தமிழ்நாட்டில் இன்று விழுப்புரம், கடலூர், அரியலூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் மிக கனமழைக்கான எச்சரிக்கை விடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம்

சென்னை மட்டுமே தமிழகம் இல்லை - தமிழக அரசுக்கு EPS கண்டனம்

தமிழ்நாடு முழுவதும் கனமழை பெய்து வரும் நிலையில் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மீட்பு, நிவாரண நடவடிக்கையை எடுக்காமல் சென்னையில் ஆலோசனை கூட்டம் நடத்துவதா என இபிஎஸ் தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

Tamilnadu Rain: ”மீட்புப் பணிகள் இல்லாமல் ஆலோசனைக் கூட்டமா?” திமுக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்

தமிழ்நாடு முழுவதும் கனமழை பெய்து வரும் நிலையில், பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மீட்புப் பணிகள் மேற்கொள்ளாத ஸ்டாலினின் திமுக அரசுக்கு, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

வீட்டிற்கு கூட செல்லவில்லை.. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ரெடி - தலைமைச் செயலாளர் எக்ஸ்குளூசிவ்

கட்டுப்பாட்டு அறை ஊழியர்கள் வீட்டிற்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தி உள்ளோம் என்று தலைமைச் செயலாளர் முருகானந்தம் தெரிவித்துள்ளார்.

அக்டோபரை விட நவம்பரில் அதி கனமழை.. இப்போதே எச்சரித்த வெதர்மேன்

அக்டோபர் 16, 17ம் தேதிகளில் சென்னையில் கனமழை பெய்தாலும் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

சாம்சங் தொழிற்சங்கத்தினர் தொடர்ந்த வழக்கு.. அக். 16ல் விசாரிப்பதாக அறிவிப்பு

சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கத்தை பதிவு செய்யக்கோரி தொடர்ந்த வழக்கை உடனடியாக விசாரிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொழிற்சங்கத்தினர் முறையீடு செய்தனர். இந்த வழக்கை வரும் 16ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

"24 மணி நேரமும் வேலை" மெல்ல நெருங்கும் அபாயம் - அதிகாரிகளுக்கு உடனே பறந்த உத்தரவு

வடகிழக்கு பருவமழை நாளை தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேவையான மருத்துவர்கள், செவிலியர்கள் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணியில் இருக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று சிகிச்சை அளிக்க மருத்துவ குழுக்கள் தயாராக இருக்க வேண்டும் என சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது

4 மாவட்டங்களுக்கு விட்டாச்சு லீவு.. மழையை வெற்றிகரமாக எதிர்கொள்வோம் - உதயநிதி

கனமழை எதிரொலியாக நான்கு மாவட்டங்களுக்கு நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

கனமழை எதிரொலி.. நாளை 4 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

கனமழை எச்சரிக்கை எதிரொலியாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

“மழை நீர் தானாகவே வெளியேறிவிடும்” - சென்னை மக்களுக்கு நற்செய்தி சொன்ன அமைச்சர்

சென்னையில் 15 சென்டிமீட்டர் அளவில் மழை பெய்யும் பட்சத்தில் மழை நீர் தானாகவே வெளியேறிவிடும் என்று நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

ரயில் விபத்து.. விசாரணைக்காக 4 பேர் ஆஜர்

கவரைப்பேட்டை ரயில் விபத்து தொடர்பாக பொன்னேரி ஸ்டேஷன் மாஸ்டர் உள்ளிட்ட 4 பேரிடம் சென்ட்ரல் ரயில்வே போலீஸ் டிஎஸ்பி தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது. 

சவர்மா சாப்பிட்டதால் நேர்ந்த பரிதாபம்.. ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் மருத்துவமனையில் அனுமதி

புதுக்கோட்டை ஹோட்டலில் சவர்மா சாப்பிட்ட 7 வயது சிறுவன் உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

ரெட் அலர்ட்.. சென்னை விரையும் பேரிடர் மீட்பு படை

சென்னைக்கு வரும் 16ம் தேதி அதிகனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நெல்லையில் இருந்து தமிழ்நாடு பேரிடர் மீட்புப்படை சென்னை விரைகிறது.

மழை முன்னெச்சரிக்கை... தீயணைப்பு துறையினருக்கு பறந்த முக்கிய உத்தரவு

மழைக்கால மீட்பு பணிகளுக்காக தீயணைப்புத் துறை அனைத்து வீரர்களும் பணிக்கு திரும்ப வேண்டும் என தீயணைப்புத்துறை டிஜிபி ஆபாஷ் குமார் உத்தரவிட்டுள்ளார்.

“சென்னை மழை... இது டீசர் தான்... நவம்பரில் சம்பவம் இருக்கு..” தமிழ்நாடு வெதர்மேன் எக்ஸ்க்ளூசிவ்!

வரக்கூடிய அக்டோபர், டிசம்பர் மாதங்களுடன் ஒப்பிடுகையில், நவம்பரில் அதீத கனமழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப்ஜான் தெரிவித்துள்ளார். குமுதம் சேனலுக்காக தமிழ்நாடு வெதர்மேன் கொடுத்துள்ள பிரத்யேக பேட்டியை தற்போது பார்க்கலாம்.

வடகிழக்கு பருவமழை.. கண்காணிப்பாளர்கள் நியமனம்

வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில், சென்னையின் திருவொற்றியூர், தண்டையார்பேட்டை, கோடம்பாக்கம் உள்ளிட்ட 15 மண்டலங்களுக்கு கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

தம்பி விஜய் உணர்ந்திருப்பார்னு நினைக்கிறேன்! தமிழசை செளந்தரராஜன் விமர்சனம்

2026 தேர்தலின்போது திமுக கூட்டனி ஆட்சியில் பங்கு கொடுக்கவில்லை என்றால் திமுக கூட்டணி வெளு வெளுத்து போகும் என முன்னாள் ஆளுநர் தமிழசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.