போலீசாரை அவதூறாக பேசிய 2 பேர் கைது.. தனிப்படை போலீசார் நடவடிக்கை
சென்னையில் மதுபோதையில் போலீசாரிடம் தகராறில் ஈடுபட்ட 2 பேரை லாட்ஜில் வைத்து தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
சென்னையில் மதுபோதையில் போலீசாரிடம் தகராறில் ஈடுபட்ட 2 பேரை லாட்ஜில் வைத்து தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
கனமழையால் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை சுற்றி வெள்ள நீர் குளம் போல் தேங்கியது. இன்று நடைபெற்ற குறைதீர் கூட்ட முகாமிற்கு மனு அளிக்க வந்த பொதுமக்கள், மாற்றுத்திறனாளிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
தேனி மாவட்டம் வரதராஜபுரம் புளியமரத்து ஓடையில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டு குடியிருப்பு பகுதிக்குள் மழை நீர் புகுந்தது. இதனால் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் மக்கள் அவதியடைந்தனர்.
சென்னை மெரினா கடற்கரையில் காவலர்களிடம் மதுபோதையில் தகராறில் ஈடுபட்ட இருவரை பிடிக்க சென்னை காவல்துறை தனிப்படை அமைத்தது.
சென்னையில் போலீசை இழிவாக பேசிய சந்திரமோகன் மற்றும் அந்த பெண் ஆகிய 2 பேரும் பிடிபட்டனர். வேளச்சேரி பகுதியில் உள்ள தங்கும் விடுதியில் வைத்து பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகசைதன்யா, சோபிதா துலிபாலா திருமண ஏற்பாடுகள் வேகமாக நடைபெற்று வரும் நிலையில், அதன் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன.
பாஜகவுடன் ஏற்பட்ட நெருடல் காரணமாக அக்கட்சியில் இருந்து விலகிய நடிகை கௌதமி அதிமுகவில் இணைந்தார். இந்நிலையில் அவர் அதிமுக கொள்கை பரப்பு துணை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழக பகுதிகளின் மேல் நிலவும் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் இன்று 22 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வேலூர் சிறையில் ஆயுள் தண்டனைக் கைதியை வீட்டு வேலைக்கு பயன்படுத்திய விவகாரத்தில் டி.ஐ.ஜி ராஜலட்சுமியிடம் நேரடி விசாரணை நடத்திய சிபிசிஐடி போலீசார் வாக்குமூலத்தை பதிவு செய்தனர்.
ஜாமின் நிபந்தனைகளைத் தளர்த்தக்கோரி சவுக்கு சங்கர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்நிலையில், சென்னை குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் தவறாமல் ஆஜராகி விசாரணையை எதிர்கொள்ள வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழநி அருகே ஆயக்குடி பகுதியில் வெள்ள நீர் வீடுகளுக்குள் புகுந்ததால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.
நான் சொன்னால் சொன்னதுதான். நான் கலைஞரின் பேரன் மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பங்கு சந்தையில் முதலீடு செய்து 500 மடங்கு லாபம் சம்பாதிக்கலாம் எனக் கூறி ரூ.14 கோடி மோசடி செய்த 6 பேரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 28 முதல் 30 வரை சென்னையிலிருந்து 11,176 பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
கோவை மாநகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு போன்ஸ் வழங்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது
கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் தொடர் மழை காரணமாக சாலைகள் வெள்ளத்தில் மூழ்கின. இதனால், வாகன ஓட்டிகள் பெரிதும் அவதியடைந்தனர்.
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்த கனமழையால் கொட்டகுடி ஆற்றில் காட்டாற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து ஆற்றில் பொதுமக்கள் இறங்கவோ, குளிக்கவோ வேண்டாம் என பொதுப்பணித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னை மெரினா கடற்கரையில் நேற்றிரவு காவலர்களிடம் மதுபோதையில் தம்பதியினர் தகராறில் ஈடுபட்டுள்ளனர். அவர்களின் தற்போது போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.7,300க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.58,400க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 அதிகரித்து ரூ.109க்கு விற்பனையாகிறது.
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 15,929 கன அடியில் இருந்து 18,094 கன அடியாக அதிகரிப்பு.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் பெருக்கெடுத்து ஒட்டிய வெள்ளம்,
தேனி பெரியகுளம் மேற்குத் தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்த கனமழையால் வராக நதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது என வானிலை ஆய்வு மையம் தகவல்.
நீட் பயிற்சி மையத்தில் பணிபுரியும் ஊழியர்கள், முன்னாள் ஊழியர்கள் விசாரணைக்கு ஆஜராக நெல்லை போலீசார் உத்தரவு.
மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை பாடிய தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை சீமான் அவமதிக்கிறார் என்றால் சீமான் தமிழர் என்று எப்படி கூற முடியும்? என்று ஆர்.எஸ்.பாரதி கேள்வி எழுப்பியுள்ளார்.