K U M U D A M   N E W S

AI

Nellai Chinnadurai: மீண்டும் தாக்கப்பட்ட மாணவன் சின்னதுரை |Nanguneri Chinnadurai Issue | Tirunelveli

Nellai Chinnadurai: மீண்டும் தாக்கப்பட்ட மாணவன் சின்னதுரை |Nanguneri Chinnadurai Issue | Tirunelveli

மாவட்ட செய்திகள்: Ungal Oor Seithigal | District News | 17 APR 2025 | Mavatta Seithigal | Tamil News

மாவட்ட செய்திகள்: Ungal Oor Seithigal | District News | 17 APR 2025 | Mavatta Seithigal | Tamil News

சென்னையில் இன்று மழைக்கு வாய்ப்பு...வானிலை ஆய்வு மையம்

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

திரைப்படங்களுக்கு தடை விதிக்க வேண்டும் - மதுரை ஆதினம்

வன்முறை, சண்டை காட்சிகள் குறித்து வரும் திரைப்படங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும், தமிழ் சினிமாவை அரசு வரைமுறை செய்ய வேண்டும் மதுரை ஆதினம் தெரிவித்துள்ளார்.

'ராஜாவின் இசை ராஜாங்கம்’ அதிரடி சலுகை அறிவித்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்

கரூரில் நடைபெறவுள்ள இளையராஜாவின் இசை நிகழ்ச்சியை காண வரும் மாற்றுத் திறனாளிகளும் அவருடன் வரும் உதவியாளர்களும் இலவசமாக அனுமதிக்கப்படுவர் என்று நிகழ்ச்சி ஏற்பட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

குட்கா முறைகேடு வழக்கு.. சிபிஐ பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

குட்கா முறைகேடு வழக்கில் பென்-ரைவ் மூலம் வழங்கிய கூடுதல் குற்றபத்திரிகையில் பல தகவல் இல்லை என்பது தொடர்பான புகாருக்கு பதில் அளிக்க வேண்டும் என சிபிஐ-க்கு சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அடுத்த மூன்று மணி நேரத்திற்கு ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை.. எந்தெந்த மாவட்டத்திற்கு தெரியுமா?

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், சேலம் ஆகிய ஆறு மாவட்டங்களுக்கு அடுத்த மூன்று மணி நேரத்திற்கு ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வெண்டிலேட்டரில் இருந்த பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை.. குருகிராமில் கொடூரம்

குருகிராமில் தனியார் மருத்துவமனையில் வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்த விமான பணிப்பெண்ணை மருத்துவமனை ஊழியர்கள் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இருட்டு கடையை வரதட்சணையாக கேட்ட மருமகன்.. முதலமைச்சர் தனிப்பிரிவில் பரபரப்பு புகார்

இருட்டு கடை உரிமையாளரின் மகள் ஸ்ரீ கனிஷ்காவின் கணவர் அக்கடையை வரதட்சணையாக கேட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் திடீரென பெய்த கனமழை.. நீண்ட நேரமாக வானில் வட்டமடிக்கும் விமானங்கள்

சென்னை மற்றும் புறநகர் பகுதியில் பெய்த திடீர் மழை காரணமாக சென்னை விமான நிலையத்தில் 10-க்கும் மேற்பட்ட விமானங்கள் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்தன.

அமைச்சர் பொன்முடி பேசியது கருத்து சுதந்திரமா? பதவி நீக்கம் செய்யக் கோரி நீதிமன்றத்தில் மனு

சைவம் மற்றும் வைணவம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய அமைச்சர் பொன்முடியை பதவி நீக்கம் செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Chennai Rains: 10 வருஷத்துக்கு முன்னாடி இதே நாள்.. சென்னை கனமழை குறித்து வெதர்மேன் ட்வீட்

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று காலை முதலே பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வரும் சூழ்நிலையில், தமிழ்நாடு வெதர்மேன் 10 ஆண்டுகளுக்கு முன்பு இதே ஏப்ரல் மாதத்தில் பெய்த மழையின் நினைவலைகளை பகிர்ந்துள்ளார்.

பாமகவை இழுக்கும் திமுக?.. தாமரையா? சூரியனா?.. சூடுபிடிக்கும் தைலாபுரம் மோதல்!

2026 சட்டமன்ற தேர்தலுக்காக பாமகவை தனது கூட்டணிக்குள் இழுக்க திமுக திட்டமிடுவதாக கூறப்படும் தகவல் அரசியல் வட்டாரத்தில் ஹாட் டாபிக்காக மாறியுள்ளது. ஏற்கனவே எதிரும் புதிருமாய் இருக்கும் தைலாபுரம் தந்தை-மகன் கூட்டணிக்காக தாமரையை தேர்தெடுப்பார்களா? அல்லது சூரியனை தேர்தெடுப்பார்களா? பாமகவின் அடுத்தக்கட்ட நகர்வு என்ன? பார்க்கலாம் இந்த தொகுப்பில்..

தாய்ப்பால் ஊட்டிய போது நேர்ந்த சோகம்.. 4 மாத குழந்தை உயிரிழப்பு

4 மாத ஆண் குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டியபோது, மூச்சுத் திணறி குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் ராஜமங்கலம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லையை பதறவைத்த சம்பவம்.. வழக்கம் போல் செயல்படும் பள்ளி - அச்சத்தில் மாணவர்கள் | Kumudam News

நெல்லையை பதறவைத்த சம்பவம்.. வழக்கம் போல் செயல்படும் பள்ளி - அச்சத்தில் மாணவர்கள் | Kumudam News

பெண்களை மிரட்டி ஆபாச வீடியோ.. நூதன முறையில் பணம் சம்பாதிக்கும் கும்பல் | Kumudam News

பெண்களை மிரட்டி ஆபாச வீடியோ.. நூதன முறையில் பணம் சம்பாதிக்கும் கும்பல் | Kumudam News

விசைத்தறி உரிமையாளர்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் | Kovai Powerloom Owners Protest | Kumudam News

விசைத்தறி உரிமையாளர்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் | Kovai Powerloom Owners Protest | Kumudam News

மாவட்ட செய்திகள்: Ungal Oor Seithigal | District News | 16 APR 2025 | Mavatta Seithigal | Tamil News

மாவட்ட செய்திகள்: Ungal Oor Seithigal | District News | 16 APR 2025 | Mavatta Seithigal | Tamil News

போக்சோ வழக்கு.. கிறிஸ்துவ மத போதகர் ஜான் ஜெபராஜ் முன் ஜாமீன் மனு தள்ளுபடி!

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் கிறிஸ்துவ மத போதகர் ஜான் ஜெபராஜ் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி அவர் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

'சாட்டை'-க்கும் நாதகவுக்கும் தொடர்பில்லை’ - சீமான் அறிக்கை

"சாட்டை துரைமுருகன் நடத்தும் சாட்டை யூடியூப் பக்கத்திற்கும், நாம் தமிழர் கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும், அதில் வரும் கருத்துகள், செய்திகள் அனைத்தும் துரைமுருகனின் தனிப்பட்ட கருத்து; அவற்றிற்கு எந்தவகையிலும் நாம் தமிழர் கட்சி பொறுப்பு ஏற்காது” என்று நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

டாஸ்மாக் முறைகேடு வழக்கு.. முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்ய ED-க்கு நீதிமன்றம் உத்தரவு!

டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக தமிழக காவல்துறை மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த முதல் தகவல் அறிக்கைகளை தாக்கல் செய்ய அமலாக்கத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிபிஐ வழக்கை ரத்து செய்யக்கோரி அமைச்சரின் தம்பி வழக்கு... ED-க்கு உயர்நீதிமன்றம் க்ரீன் சிக்னல்!

தனக்கெதிராக சிபிஐ பதிவு செய்த மோசடி வழக்கை ரத்து செய்யக்கோரி அமைச்சர் நேருவின் சகோதரர் கே. என்.ரவிச்சந்திரன் தாக்கல் செய்த வழக்கில், அமலாக்கத் துறை இடையீட்டு மனு தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

“சொட்ட சொட்ட நனையுது” படத்தின் டைட்டில் ப்ரோமோ வெளியீடு !!

Adler Entertainment தயாரிப்பில், அறிமுக இயக்குநர் நவீத் s ஃபரீத் இயக்கத்தில், நிஷாந்த் ரூஷோ, வர்ஷிணி, ஷாலினி நடிப்பில், இன்றைய தலைமுறை கதையை, கலக்கலான் காமெடி எண்டர்டெய்ன்மெண்ட் படமாக உருவாகியுள்ள திரைப்படம் "சொட்ட சொட்ட நனையுது". படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டைட்டில் ப்ரோமோ அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

பேரிடர் காலங்களில் மீனவர்களை மீட்க இந்திய கடற்படை பைலட்களுக்கு பயிற்சி!

மன்னார் வளைகுடா மற்றும் பாக் ஜலசந்தி கடற்பகுதிகளில் பேரிடர் காலங்களில் மீனவர்களை மீட்பது, கடலின் மிதந்து வரும் சந்தேகமான பொருளை ஹெலிகாப்டரில் இருந்து கயிறு மூலமாக இறங்கி சோதனை செய்வது தொடர்பாக இந்திய கடற்படை பைலட்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

நயினாருக்கு வாழ்த்து சொன்ன முதல்வர்...அமைச்சரின் பதிலால் சிரிப்பலை

நயினார் நாகேந்திரன் பல மொழி புலவராகி, பழமொழி பேசிக்கொண்டிருக்கிறார்.இதை பார்க்கும் போது மாநிலத்தலைவராக இருந்து தேசிய தலைவராக முயற்சி செய்து கொண்டிருக்கிறார் என நினைக்கிறேன் என அமைச்சர் தங்கம் தென்னரசு பேசினார்.