வளர்ச்சிக்கும் நிதி இல்லை, வறட்சிக்கும் நிதி இல்லை. மத்திய அரசு வஞ்சித்து, தமிழ்நாட்டு மக்களுக்கு துரோகம் செய்து வருகிறது என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடுவதாக டொனால்ட் டிரம்ப் அறிவித்தது முதல் மெலனியா டிரம்ப் தனது கணவருடன் பொது வெளியில் தோன்றுவதை தவிர்த்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. டொனால்ட் டிரம்ப் பிரசாரத்தின்போதும் மெலனியா அதிகம் தலை காட்டவில்லை என தகவல்கள் கூறுகின்றன.
காதலித்து கர்ப்பம் ஆக்கிவிட்டு ஏமாற்றியதோடு, 19 லட்சத்தை அபகரித்த இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க கூறி மகளிர் காவல் நிலையத்தில் இளம்பெண் புகார் அளித்துள்ளார்.
மலையாள திரையுலகில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட சம்பவத்தில், ஹேமா கமிட்டியின் அறிக்கை விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்நிலையில், பிரபல நடிகை ஷர்மிளா நடிகைகள் மீதான பாலியல் வன்கொடுமை குறித்து குமுதம் நியூஸ் சேனலுக்கு கொடுத்துள்ள பேட்டி, திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருது வழங்கும் நிகழ்ச்சியில் குப்பைகள் போல் கொட்டிக்கிடந்த விருதுகளை எடுத்துச்செல்லக் கூறியதால், அதிருப்தி அடைந்த விருது பெற்றவர்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றதும், செலுத்திய பணத்தை திரும்ப கேட்டதும் சலசலப்பை ஏற்படுத்தியது.
காங்கிரஸ் கட்சியினரை விமர்சித்த திமுக நிர்வாகியை கண்டித்த ஆர்.எஸ்.பாரதி, செய்திகளில் இடம் பிடிப்பதற்காக பேச வேண்டாம் என்று மேடையிலேயே கண்டித்ததால் திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னையில் கடந்த இரண்டு தினங்களாக நடைபெற்ற ஃபார்முலா 4 கார் பந்தயம் கோலாகலமாக நிறைவுபெற்றது. இதனையடுத்து முதலமைச்சர் ஸ்டாலின், முன்னாள் கிரிக்கெட் வீரர் கங்குலி உள்ளிட்ட பிரபலங்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தங்கள் குழந்தைகளுடன் திரண்டு வந்த பொதுமக்கள் அதிவேகத்தில் கார்கள் சீறிப்பாய்ந்து செல்வதை பிரமிப்புடன் கண்டு ரசித்தனர். கார் பந்தயத்தில் பங்கேற்ற சில வீரர்களின் கார்களின் பழுதடைந்து அவர்களுக்கு ஏமாற்றம் அளித்தன. மேலும் போட்டி விறுவிறுப்பாக நடந்தபோது நாய் ஒன்று குறுக்கே ஓடி வந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.
தமிழ்நாட்டில் திமுக, அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் திராவிட அரசியலை தூக்கிப்பிடித்திருக்க, சீமானின் நாம் தமிழர் கட்சி மட்டும் திராவிட அரசியலில் இருந்து விலகி, தமிழர், தமிழ்நாடு என தமிழர் நலன் சார்ந்த விஷயங்களை பேசும் கட்சியாக உள்ளது. இதேபோல் தவெக கட்சியின் பெயரிலும் திராவிடத்தை தவிர்த்த விஜய், தனது முதல் அறிக்கையிலேயே, தமிழர் நலன் காக்கப்பட வேண்டும், மதவாத அரசியலுக்கு எதிர்ப்பு, ஊழல் அரசியலுக்கு முடிவுகட்ட வேண்டும் என்பதை அழுத்தம்திருத்தமாக சொன்னார்.
Seeman Press Meet: தமிழ்நாட்டில் நடக்கும் ஃபார்முலா 4 கார் ரேஸ் குறித்தும், முதலமைச்சரின் அமெரிக்கா பயணம் குறித்தும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.