K U M U D A M   N E W S

Chennai

மகப்பேறு சிகிச்சைக்கு சென்ற பெண்ணின் வயிற்றில் பேண்டேஜ்.. 13 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

மகப்பேறு அறுவை சிகிச்சைக்கு பின் வயிற்றில் பேண்டேஜை வைத்து தைத்ததால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 13 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கும்படி தனியார் மருத்துவமனைக்கும், சிகிச்சை அளித்த மருத்துவர்களுக்கும் சென்னை நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ED அலுவகத்தில் திமுக எம்.பி மீண்டும் ஆஜர்

சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் திமுக எம்.பி., கதிர் ஆனந்த் ஆஜர்.

சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் மீதான வழக்கு.. புலன் விசாரணை தொடக்கம்

சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் மீதான வழக்கின் விசாரணையின் தடை நீக்கப்பட்டதை அடுத்து மீண்டும் புலன் விசாரணை துவங்கியுள்ளதாக  காவல்துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

பஞ்சாப் கபடி போட்டி விவகாரம்.. சென்னை வந்தடைந்த வீராங்கனைகள்

பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்ற கபடி போட்டியின் போது தாக்குதலுக்கு உள்ளான தமிழக வீராங்கனைகள் இன்று சென்னை திரும்பினர்.

அண்ணா பல்கலை. விவகாரம் - ஞானசேகரனுக்கு பிப்.7 வரை...

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட வழக்கில் கைதான ஞானசேகரனுக்கு பிப்.7 வரை நீதிமன்றக் காவல்.

அண்ணா பல்கலைக்கழக வழக்கு.. ஞானசேகரனை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு

சைதாப்பேட்டை  9-வது நீதிமன்றத்தில் மீண்டும் ஆஜர்படுத்தப்பட்ட குற்றவாளி ஞானசேகரனை பிப்ரவரி 7-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

கைதிகளில் ஊதியத்தை சுருட்டிய அதிகாரிகள்.. உயர்நீதிமன்றம் அதிரடி

சிறைக்கைதிகளின் ஊதியத்தில் பிடித்தம் செய்யப்பட்ட தொகையில் முறைகேடு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சுற்றுலா பயணிகள் மோதல் - வெளியான பகீர் சிசிடிவி காட்சிகள்

பெட்ரோல் பங்கில் சென்னையை சேர்ந்த சுற்றுலா பயணிகளிடையே மோதல் - பரபரப்பு.

அண்ணா பல்கலைக்கழக வழக்கு.. ஞானசேகரன் நீதிமன்றத்தில் மீண்டும் ஆஜர்

ஏழு நாட்கள் போலீஸ் காவலில் இருந்த குற்றவாளி ஞானசேகரன் சைதாப்பேட்டை  9-வது நீதிமன்றத்தில் இன்று மீண்டும் ஆஜர்படுத்தப்பட்டார்.

சென்னை - திண்டிவனம் இடையே புதிய சாலை - தமிழக அரசு அதிரடி

சென்னை - திண்டிவனம் இடையே தேசிய நெடுஞ்சாலையில் புதிய சாலை அமைக்க தமிழக அரசு திட்டம்.

போதைப்பொருள் வழக்கு.. ஐந்து பேர் அதிரடி கைது.. உபகரணங்கள் பறிமுதல்

சென்னை வளசரவாக்கம் பகுதியில் மெத்தபெட்டமைன் போதைப்பொருள் வைத்திருந்த வழக்கில் ஐந்து பேர் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்களிடமிருந்து 5 கிராம் மெத்தபெட்டமைன் போதைப்பொருள், நான்கு போதை மாத்திரைகள் மற்றும் உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. 

இந்த ஆண்டில் முதல் முறையாக வீராணம் ஏரி முழு கொள்ளளவை எட்டியது 

முழு கொள்ளளவான 47.50 அடியில் 47.40 அடியை எட்டிய ஏரி.

உயர் நீதிமன்ற வளாகத்திற்குள் வெடிகுண்டு.. வெடித்திருந்தால் என்ன ஆகியிருக்கும்..? நீதிபதி கேள்வி

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு சென்னை உயர் நீதிமன்ற வளாகத்திற்குள் எப்படி கொண்டு வரப்பட்டது என்பது தொடர்பான விசாரணையில் வெடிகுண்டு வெடித்திருந்தால் என்ன மாதிரியான விளைவுகள் ஏற்பட்டிருக்கும் என்பதை நாம் யோசிக்க வேண்டும்  என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

76th Republic Day 2025 : குடியரசு தின விழா; தேசியக் கொடி ஏற்றினார் ஆளுநர் ஆர்.என்.ரவி

76th Republic Day 2025 : நாட்டின் 76வது குடியரசு தினவிழா கொண்டாட்டம்.

மாணவனின் உயிரை பறித்த ப்ளூடூத் ஹெட்செட்.. நடந்தது என்ன?

ரயில் தண்டவாளத்தில் விழுந்த ப்ளூடூத் ஹெட்செட் எடுக்க சென்ற ராஜகோபால் என்ற மாணவன் ரயில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

"இனி பட்டப்பெயருக்கு No"காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் அறிவுரை

ரவுடிகளுக்கு பட்டப்பெயர் வைப்பதை தவிர்க்க வேண்டுமென காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுரை

சிறைக் கைதிகளுக்கு எதிராக காட்டப்படும் கடுமையை ஊழலை ஒழிப்பதிலும் காட்ட வேண்டும்- உயர்நீதி மன்றம்

சிறைக் கைதிகளுக்கு எதிராக காட்டப்படும் கடுமையை ஊழலை ஒழிப்பதிலும் காட்ட வேண்டும் என சென்னை உயர்நீதி மன்றம் தெரிவித்துள்ளது. 

சென்னை போதைப்பொருள் கடத்தல் விசாரணையில் புது திருப்பம்... களமிறங்கும் என்ஐஏ?

சென்னை அரும்பாக்கத்தில் கேட்டமைன் போதைப்பொருள் விற்பனையில் கைது செய்யப்பட்ட 4 பேரிடம் போலீசார் கிடுக்குப்பிடி விசாரணை.

உருட்டுக்கட்டையுடன் கூடிய 180 பேர் – சீமான் மீது பாய்ந்த வழக்கு

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நீலாங்கரை போலீசார் வழக்குப்பதிவு.

"ஒரு சொல் கூட பாலியல் துன்புறுத்தலே" - சென்னை உயர்நீதிமன்றம்

HCL நிறுவனத்தில் பணியாற்றிய மார்க்கெட்டிங் அதிகாரிக்கு எதிரான பாலியல் வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் கருத்து

டெலிவரி ஆட்களை கண்காணிக்க விதிகளை வகுக்கக் கோரிய வழக்கு.. உயர்நீதிமன்றம் உத்தரவு

உணவு மற்றும் மளிகை பொருட்களை வீடுகளுக்கு விநியோகம் செய்யும் நிறுவனங்களின் டெலிவரி ஆட்களை கண்காணிக்க விதிகளை வகுக்கக் கோரிய வழக்கில், தமிழக டிஜிபி மற்றும் டெலிவரி நிறுவனங்கள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Swiggy, Zomato நிறுவனங்களுக்கு நோட்டீஸ்

உணவு டெலிவரி செய்யும் நபர்களை கண்காணிக்கக் கோரிய வழக்கில் ஸ்விகி, சோமாட்டோவுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்.

சென்னையில் தனியார் மினி பேருந்துகள்?

சோழிங்கநல்லூர், ஆலந்தூர், அம்பத்தூர், பெருங்குடி உள்ளிட்ட பகுதிகளில் தனியார் மினி பேருந்துகளை இயக்க அனுமதி.

திமுக, இந்து முன்னணியினர் இடையே மோதல்

சென்னை வேப்பேரியில் சுவரில் விளம்பரம் எழுதுவது தொடர்பாக திமுக, இந்து முன்னணியினர் இடையே மோதல்

வேலியே பயிரை மேய்வதா? காவல்துறையினர் மீது உயர்நீதிமன்றம் அதிருப்தி...!

வேலியே பயிரை மேய்வது போல்,  காவல்துறையினரே குற்றச்செயல்களில் ஈடுபடும் வழக்கை சாதாரணமாக எடுத்து கொள்ள முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.