‘தேசிங்கு ராஜா 2’ படத்தின் ட்ரெய்லர் வெளியானது..!
இயக்குநர் எழில் இயக்கத்தில் விமல் நடிப்பில் உருவாகியுள்ள ‘தேசிங்கு ராஜா 2’ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.
இயக்குநர் எழில் இயக்கத்தில் விமல் நடிப்பில் உருவாகியுள்ள ‘தேசிங்கு ராஜா 2’ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.
நடிகர் விஜய் நடித்து மிகப்பெரிய வெற்றிபெற்ற ‘துள்ளாத மனமும் துள்ளும்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான இயக்குநர் எழில், திரையுலகில் தனது 25 வருடத்தில் அடியெடுத்து வைத்துள்ளார். தொடர்ந்து ஜனரஞ்சகமான, குடும்பப்பாங்கான, அதேசமயம் நகைச்சுவைக்கு உத்தரவாதம் கொடுக்க கூடிய படங்களாக இயக்கி வருகிறார் இயக்குநர் எழில். 12 வருடங்களுக்கு தற்போது இதன் இரண்டாம் பாகமாக விமல் நாயகனாக நடிக்கும் தேசிங்கு ராஜா-2 படத்தை இயக்குநர் எழில் இயக்கியுள்ளார்.